உள்ளடக்கத்துக்குச் செல்

லௌரியா நந்தன்காட்

ஆள்கூறுகள்: 26°59′54.52″N 84°24′30.52″E / 26.9984778°N 84.4084778°E / 26.9984778; 84.4084778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லௌரியா நந்தன்காட்
लौरिया नंदनगढ
சிற்றூர்
லௌரியா நந்தன்காட், அசோகர் தூணின் புகைப்படம் here.
லௌரியா நந்தன்காட், அசோகர் தூணின் புகைப்படம் here.
லௌரியா நந்தன்காட் is located in இந்தியா
லௌரியா நந்தன்காட்
லௌரியா நந்தன்காட்
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில், லௌரியா நந்தன்காட் ஊரின் அமைவிடம்
லௌரியா நந்தன்காட் is located in பீகார்
லௌரியா நந்தன்காட்
லௌரியா நந்தன்காட்
லௌரியா நந்தன்காட் (பீகார்)
ஆள்கூறுகள்: 26°59′54.52″N 84°24′30.52″E / 26.9984778°N 84.4084778°E / 26.9984778; 84.4084778
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்மேற்கு சம்பாரண்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மைதிலி, போஜ்புரி மற்றும் இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர்நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
845453
அருகமைந்த ஊர்பேட்டியா
மக்களவைத் தொகுதிவால்மீகிநகர்
சட்டமன்றத் தொகுதிலௌரியா யோகபட்டி

லௌரியா நந்தன்காட் (Lauria Nandangarh), இந்தியாவின் பிகார் மாநிலத்தில், மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்த சிறு ஊர் ஆகும். இது இந்தியா-நேபாள எல்லை அருகில் உள்ளது.

இந்நகரத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் நிறுவிய தூண்களால் புகழ் பெற்று விளங்குகிறது. மௌரியப் பேரரசின் தொல்லியல் எச்சங்கள் இவ்வூரில் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்துள்ளது.

இந்தியத் தொல்லியல் களங்களில் ஒன்றான லௌரியா நந்தன்காட் நகரம், கங்கை ஆற்றின் துணை ஆறான புர்கி கண்டகி ஆற்றின் கரையில் உள்ளது.

லௌரியா நந்தன்காட், மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் தலைமை நகரமான பேத்தியாவிலிருந்து 25 கிமீ தொலைவிலும், பிகார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னாவிலிருந்து வடமேற்கே 211 கீமீ தொலைவில் உள்ளது.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவைகள்

[தொகு]

லௌரியா நந்தன்காட் ஊரில் அசோகர் நிறுவிய மூன்று வரிசைகள் கொண்ட 15 தூண்கள் உள்ளது. கருங்கல் தூபிகளின் மேல் தலைகீழாக கவிழ்த்த தாமரையின் மீது சிங்கத்தின் போதிகை செதுக்கப்பட்டுள்ளது.[1][2] 1886ல் அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் 1905ல் டி. பிளாக் போன்ற பிரித்தானிய தொல்லியல் துறை அறிஞர்கள் லௌரியா நந்தன்காட்டில் அகழ்வாராய்ச்சி செய்து அசோகர் நிறுவிய தூபிகள், விகாரைகள், கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.[3] 26 மீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டின் அடியில் புத்தரின் சாம்பல் வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.[4]

1935-36ல் தொல்லியல் அறிஞர் நானி கோபால் மசூம்தார் இவ்விடத்தில் நான்கு முக்கிய மண்மேடுகளை கண்டறிந்தார்.[5]

இவ்வூரில் சுங்கர் மற்றும் குசான் பேரரசு காலத்தில் அசோகரின் தூண்களில் மனித மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிமு 1-2ம் நூற்றாண்டின் செப்பு நாணயங்கள், சுடுமண் சிற்பங்கள் மற்றும் இரும்புக் கருவிகள் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lauria Nandangarh". பார்க்கப்பட்ட நாள் 2006-09-09.
  2. "Archaeological Survey Of India; Excavations – Important – Bihar". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-01.
  3. Report of Tours in North and South Bihar in 1880–81. Office of the Superintendent of Government Printing. பார்க்கப்பட்ட நாள் 2007-05-31.
  4. "Lauria NandanGarh'". Archived from the original on 2006-10-19. பார்க்கப்பட்ட நாள் 2006-09-09.
  5. An Encyclopaedia of Indian Archaeology. BRILL. 1990. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லௌரியா_நந்தன்காட்&oldid=4059594" இலிருந்து மீள்விக்கப்பட்டது