புத்கார தூபி
புத்கார ஸ்தூபி بوتکاراستوپ | |
---|---|
புத்கார தூபியின் எஞ்சிய பகுதிகள் | |
மாற்றுப் பெயர் | बुतकारा स्तूप |
இருப்பிடம் | சுவாத் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் பாக்கித்தான் |
ஆயத்தொலைகள் | 34°45′N 72°22′E / 34.75°N 72.37°E |
வகை | தூபி |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு, 3ம் நூற்றாண்டு |
காலம் | காந்தாரம் |
புத்கார தூபி ( Butkara Stupa) (உருது: بوتکاراستوپ), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள சுவாத் பள்ளத்தாக்கில் உள்ளது. இத்தூபி மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் கிமுமூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். இத்தூபி மௌரியர்கள், இந்தோ கிரேக்கர்கள் மற்றும் குசானர்களின் ஆட்சிக் காலத்தில் ஐந்து முறை விரிவாக்கப்பட்டது.
அகழாய்வு
[தொகு]இத்தூபியின் வளாகம் 1956ல் அகழாய்வு செய்யப்பட்டது. இந்தோ கிரேக்க ஆட்சியாளர்களால் இத்தூபியில் ஹெலனிய கால சிற்பங்கள் வடிவக்கப்பட்டுள்ளது. [1] இத்தூபியின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்பொருட்கள், இத்தாலியில் உள்ள துரின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது.
நாணயங்களும், காலமும்
[தொகு]அசோகர் வெளியிட்ட சந்திரகுப்த மௌரியர் உருவம் கொண்ட நாணயங்கள் இத்தூபியின் அகழ்வாராய்ச்சில் கண்டெடுக்கபப்ட்டது.[2] இந்தோ கிரேக்க நாட்டின் மன்னர் மெனாண்டர் உருவம் பொறித்த நாணயமும் கண்டெடுக்கப்பட்டது. [2] மேலும் கிபி முதல் நூற்றாண்டில் ஆட்சி செய்த இந்தோ கிரேக்க மன்னர் இரண்டாம் அசீசிஸ் உருவம் பொறித்த நாணயமும் கண்டெடுக்கப்பட்டது.[2]
படக்காட்சிகள்
[தொகு]-
ஐந்து ஆட்சியாளர்களின் காலத்தில், ஐந்து முறை விரிவாக்கப்பட்ட புத்கார தூபி
-
புத்கார தூபி எண் 1ன் சிதிலங்கள்
-
கிமு 20ல் இந்தோ கிரேக்க மன்னர் இரண்டாம் அசீசின் சிற்பம்
-
இந்தோ சிதியன் பௌத்தபிக்கு
-
இந்தோ கொரிந்தியன் போதிகை
-
கிபி 1-2ம் நூற்றாண்டின் போர் வீரனின் தலைச் சிற்பம்
-
கிபி 1ம் நூற்றாண்டின் போர் வீரர்களின் சிற்பம்
-
புத்கார தூபி வளாகத்தின் சிலை
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "De l'Indus a l'Oxus: archaeologie de l'Asie Centrale", Pierfrancesco Callieri, p212: "The diffusion, from the second century BCE, of Hellenistic influences in the architecture of Swat is also attested by the archaeological searches at the sanctuary of Butkara I, which saw its stupa "monumentalized" at that exact time by basal elements and decorative alcoves derived from Hellenistic architecture".
- ↑ 2.0 2.1 2.2 Handbuch der Orientalistik, Kurt A. Behrendt, BRILL, 2004, p.49 sig. [1]
மேற்கோள்கள்
[தொகு]- Report of the Italian Archaeological Mission (Pdf, Italian)
- Domenico Faccenna, Butkara I (Swat, Pakistan), 1956–1962, Roma, 1962-1981.