மெனாண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் மெனாண்டர்
இந்தோ கிரேக்க மன்னர்
மெனாண்டரின் வெள்ளி நாணயம்
ஆட்சிகி மு 165/155–130
முன்னிருந்தவர்ஆண்டிமசூஸ் II
பின்வந்தவர்முதலாம் ஸ்டாட்ரோ
அரசிஅகதோக்லியா
வாரிசு(கள்)ஸ்டாட்ரோ
மரபுகிரேக்க பாக்திரியா அரச குலம்
பிறப்புகலாசி, பக்ரம், தற்கால ஆப்கானித்தான்[1][2]
இறப்புகி மு 130
அடக்கம்இந்தோ கிரேக்க நாடு
சமயம்பௌத்தம்
வெள்ளி நாணயத்தில் முதலாம் மெனாண்டர் (கி மு 155-130)
நாகசேனரிடம், மன்னர் மெனாண்டர் பௌத்தம் தொடர்பான கேள்விகள் கேட்டல்
மெனாண்டர் வெளியிட்ட வெண்கல நாணயத்தில் எட்டு ஆரங்களுடன் கூடிய தர்மசக்கரம்
இரண்டாம் மெனாண்டரின் நாணயம்
இந்தோ கிரேக்கர்களால் கிரேக்க கலைநயத்தில் வடிவக்கப்பட்டதும், முதன் முதலில் வெளி உலகத்தால் அறியப்பட்டதுமான கௌதம புத்தரின் உருவச்சிலை, காந்தாரம்

முதலாம் மெனாண்டர் சோத்தர் அல்லது மிலிந்தர் (Menander I Soter) (பண்டைக் கிரேக்கம்Μένανδρος Α΄ ὁ Σωτήρ, (Ménandros A' ho Sōtḗr), இந்திய பாளி மொழியில் மிலிந்தர் என அழைக்கப்படுவர். இந்தோ கிரேக்க மன்னரான முதலாம் மெனாண்டர் தெற்காசியாவின் வடமேற்கில் ஒரு பேரரசை நிறுவியதுடன், பௌத்த சமயத்திற்கு ஆதரவளித்தவர்.(165/[3]/155[3] –130 BC)

மெனாண்டர் துவக்கத்தில் கிரேக்க பாக்திரியப் பேரரசுப் பகுதிகளின் மன்னராக இருந்தவர். பின்னர் பஞ்சாப் பகுதியை[2] கைப்பற்றிய பிறகு தெற்காசியாவில் தனது பேரரசை, மேற்கில் காபூல் சமவெளி முதல் கிழக்கில் இராவி ஆறு வரையும், வடக்கில் சுவாத் பள்ளத்தாக்கு முதல் ஹெல்மண்டு மாகாணம் வரையிலும், தெற்கே இராஜஸ்தான் மற்றும் கிழக்கே கங்கைச் சமவெளியின் பாடலிபுத்திரம் வரையிலும் விரிவுபடுத்தினார். கிரேக்க-உரோமன் வரலாற்றாசிரியர் இசுட்ராபோவின் கூற்றுப் படி, அலெக்சாண்டரை விட கூடுதல் இனக் குழுவினர்களை வென்றவர் என்ற பெருமை முதலாம் மெனாண்டரைச் சாரும் எனக் குறிப்பிடுகிறார். மெனாண்டர் வெளியிட்ட நாணயங்களிலிருந்து, அவரது ஆட்சியில் செழிப்பாக இருந்த வணிகத்தை எடுத்துரைக்கிறது.

மிலிந்த பன்ஹ[தொகு]

பௌத்த குரு நாகசேனரிடம் பௌத்தம் தொடர்பான மெனாண்டரின் கேள்விகளுக்கு, பதில் அளிக்கும் வகையில் மிலிந்த பன்ஹா எனும் பாலி மொழி நூல் நாகசேனரால் எழுதப்பட்டது. [4][5]

மெனாண்டரின் ஆட்சிப் பரப்புகள்[தொகு]

பாக்திரியா, தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தான், இந்தியாவின் பஞ்சாப், அரியானா, இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளை கொண்டது. இவரது பேரரசின் தலைநகராக சகலா எனும் தற்கால சியால்கோட் என அறியப்படுகிறது. இந்தோ கிரேக்க மன்னர்களில் முதலாம் மெனாண்டர் முதன் முதலில் நாணயங்களை வெளியிட்டவர்.

மறைவு[தொகு]

கி மு 130இல் மெனாண்டரின் மறைவிற்குப் பின், அவரது சிறு வயது மகன் ஸ்டாட்ரோ ஆட்சிக் கட்டிலில் அமரும் வரும் வரை, அவரது மனைவி அகதோக்லியா ஆட்சிபுரிந்தார்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Menander". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012.
  2. 2.0 2.1 Hazel, John (2013). Who's Who in the Greek World. Routledge. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134802241. Menander king in India, known locally as Milinda, born at a village named Kalasi near Alasanda (Alexandria-in-the-Caucasus), and who was himself the son of a king. After conquering the Punjab, where he made Sagala his capital, he made an expedition across northern India and visited Patna, the capital of the Mauraya empire, though he did not succeed in conquering this land as he appears to have been overtaken by wars on the north-west frontier with Eucratides.
  3. 3.0 3.1 Bopearachchi (1998) and (1991), respectively. The first date is estimated by Osmund Bopearachchi and R. C. Senior, the other Boperachchi
  4. மிலிந்தனின் கேள்விகள்
  5. GLIMPSES OF KISHTWAR HISTORY BY D.C.SHARMA

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெனாண்டர்&oldid=3777795" இலிருந்து மீள்விக்கப்பட்டது