கேசரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேசரியா
केसरिया
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்கிழக்கு சம்பாரண் மாவட்டம்
மொழிகள்
 • அலுவலக மொழிகள்மைதிலி, இந்தி, உருது,போஜ்புரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்845424
கேசரியா தூபி, கிழக்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா

கேசரியா (Kesariya) இந்தியாவின், பிகார் மாநிலத்தில், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், ராம்பூர் அருகே அமைந்த பழமையான நகராகும். கௌதம புத்தரின் நினைவாக, அசோகர் கேசரியா நகரத்தில் நிறுவிய, புகழ் பெற்ற, உலகின் உயரமான 104 அடி உயரமுள்ள தூண் உள்ளது. கேசரியா நகரம், பௌத்த யாத்திரைத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஒரு முறை கௌதம புத்தர் கேசரியா நகரத்தில் தங்கி தனது தத்துவங்களை விளக்கியதால், இந்நகரத்தை கேசபுத்தா என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டது.[1].

கேசரியா தாது கோபுரம்[தொகு]

கேசரியா தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1998ஆம் ஆண்டில் கண்டுபிடித்தது.[2] கேசரியா தூணின் உயரம் 104 அடியாகும்.[3]இதனை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

விராட் இராமயணக் கோயில்[தொகு]

கேசரியாவில் உள்ள ஜானகி நகரில், ஜூன் 2015இல் மஹாவீர் மந்திர் அறக்கட்டளையால் ஏறத்தாழ 500 கோடி ரூபாய் மதிப்பில் விராட் இராமாயணக் கோயில் கட்டிட வேலை தொடங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தலமான அங்கோர் வாட் கோயிலை விட அளவில் பெரிதாக கட்டப்படவுள்ள விராட் இராமாயணக் கோயிலின் நீளம் 2500 அடியாகவும், அகலம் 1296 அடியாகவும், உயரம் 379 அடியாகவும் இருக்கும் வண்ணம் அமைக்கப்படவுள்ளது.[4]

போக்குவரத்தும் தங்குமிட வசதிகளும்[தொகு]

பிகார் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா பேருந்துகள்[5] கேசரியா நகரத்திற்கு இயக்கப்படுகிறது. பிகார் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சுற்றுலா மாளிகைகள் பயனிகள் தங்குவதற்கு வசதியாக உள்ளது.

கேசரியா தூபியின் அகலப் பரப்புக் காட்சி

படக்காட்சியகம்[தொகு]

104 அடி உயரமுள்ள கேசரியா பௌத்தத் தூபி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.buddhist-temples.com/bihar/kesaria-stupa.html
  2. http://www.buddhist-pilgrimage.com/kesaria-stupa.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
  4. http://www.bihartimes.in/Newsbihar/2015/Aug/newsbihar16Aug15.html Temple in Bihar not 'exact replica' of Angkor Wat
  5. "Bihar Tourism". Archived from the original on 2010-01-27. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசரியா&oldid=3640163" இலிருந்து மீள்விக்கப்பட்டது