விராட் இராமாயணக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விராட் இராமாயணக் கோயில்
விராட் இராமாயணக் கோயில் is located in பீகார்
விராட் இராமாயணக் கோயில்
விராட் இராமாயணக் கோயில்
பிகாரில் விராட் இராமாயணக் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:26°21′54″N 84°52′23″E / 26.365°N 84.873°E / 26.365; 84.873ஆள்கூறுகள்: 26°21′54″N 84°52′23″E / 26.365°N 84.873°E / 26.365; 84.873
பெயர்
தேவநாகரி:विराट् रामायण मंदिर
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:பிகார்
மாவட்டம்:கிழக்கு சம்பாரண் மாவட்டம்
அமைவு:ஜானகி நகர், கேசரியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ராமர்
வரலாறு
அமைத்தவர்:மகாவீர் மந்திர் அறக்கட்டளை, பாட்னா
இணையதளம்:viraatramayanmandir.net


விராட் இராமாயணக் கோயில் (Viraat Ramayan Mandir), இந்தியாவின், பிகார் மாநிலத்தில், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின், கேசரியா நகரத்தின் அருகில் உள்ள ஜானகி நகரில் கட்டுமானத்தில் உள்ள இந்துக் கோயில் ஆகும்.[1]

பாட்னாவில் உள்ள மகாவீர் கோயில் அறக்கட்டளையால், 21 ஜூன் 2015இல், 200 ஏக்கர் நிலப்பரப்பில்[2] ஏறத்தாழ 500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டத் தொடங்கப்பட்ட விராட் இராமாயணக் கோயிலின் நீளம் 2800 அடியாகவும், அகலம் 1400 அடியாகவும், உயரம் 405 அடியாகவும் இருக்கும் வண்ணம் அமைக்கப்படவுள்ளது.[3] கட்டப்பட்டு வரும் இக்கோயிலில் ராமர், சீதை, அனுமன், இலவன், குசன், மற்றும் சிவன் சன்னதிகளுடன் கூடிய கோபுரங்கள் அமைய உள்ளது. கோயில் வளாகத்தில் 20,000 பேர் அமரக்கூடிய வகையில் பெரிய மண்டபம் கட்டப்பட உள்ளது. [4] கட்டி முடித்த பிறகு, விராட் இராமாயணக் கோயில் உலகின் மாபெரும் இந்துக் கோயிலாக இருக்கும்.[5]

9 ரிக்டேர் அளவு நில நடுக்கத்தை தாங்கும் வகையில், கோயில் அஸ்திவாரம் 50 மீட்டர் ஆழம் கொண்டது. கோயிலில் அமைக்கப்பட உள்ள சிவலிங்கம் 33அடி அடி உயர கருங்கல்லினால் அமைக்கப்பட உள்ளது. கோயில் 18 கருவறைகள், 18 கோபுரங்களுடன் அமைக்கப்பட உள்ளது.

கம்போடியாவில் உள்ள 215 அடி உயர அங்கோர் வாட் கோயிலை விட இரண்டு மடங்கு பெரிதாக கட்டவுள்ள இராமாயணக் கோயிலுக்கு உள்ளூர் இசுலாமியர்கள் கூட தங்களின் நிலங்கள் வழங்கியுள்ளனர்.[6]

அமைவிடம்[தொகு]

கட்டுமானத்தில் உள்ள விராட் இராமாயணக் கோயில், வைசாலி மாவட்டத்திலிருந்து 60 கி.மீ தொலைவிலும், பிகார் தலைநகர் பாட்னாவுக்கு வடக்கே 120 கி. மீ தொலைவிலும், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் கேசரியா நகரத்தின் ஜானகி நகரில் அமைந்துள்ளது.

எதிர்ப்பு[தொகு]

தற்போது உலகின் மிகப் பெரிய இந்துக் கோயில் என்ற பெருமை உடைய அங்கோர் வாட் கோயிலை காண வரும் வெளி நாட்டுச் சுற்றுலா பயணிகளால் கம்போடியா அரசு வெளிநாட்டுச் செலாவணி ஈட்டி வரும் நிலையில், இந்தியாவில் விராட் இராமாயணக் கோயில் கட்டி முடித்தால் தனது நாட்டிற்கு கிடைக்கும் வெளிநாட்டுச் செலாவணி பாதிக்கப்படும் என்பதால், விராட் இராமாயணக் கோயிலைக் கட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]