சந்திராவரம் பௌத்தத் தலம்
சந்திராவரம் பௌத்தத் தலம் | |
---|---|
மாற்றுப் பெயர் | சந்திராவரம் தொல்லியல் களம் |
இருப்பிடம் | சந்திராவரம் கிராமம் |
பகுதி | ஆந்திரப் பிரதேசம் |
ஆயத்தொலைகள் | 15°55′58.5156″N 79°25′40.2240″E / 15.932921000°N 79.427840000°E |
வகை | பௌத்தத் அகழ்வாய்ராச்சிக் களம் |
வரலாறு | |
கட்டுநர் | சாதவாகனர்கள்[1] |
கட்டுமானப்பொருள் | செங்கல் & சுண்ணாம்பு |
கட்டப்பட்டது | கிமு இரண்டாம் நூற்றாண்டு |
கலாச்சாரம் | பௌத்தப் பண்பாடு |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1964 |
அகழாய்வாளர் | முனைவர். வெலெரி வெங்கட கிருஷ்ண சாஸ்திரி |
நிலை | மறுசீரமைக்கப்பட்டது |
உரிமையாளர் | பொது |
பொது அனுமதி | ஆம் |
சந்திராவரம் பௌத்தத் தலம் (Chandavaram Buddhist site) இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின், பிரகாசம் மாவட்டத்தில் சந்திராவரம் கிராமத்தில் உள்ளது. இப்பௌத்தத் தலம் கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும்.[2][3] குண்டலகம்மா ஆற்றின் கரையில், தோனகொண்டா இரயில் நிலையத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் சந்திராவரம் பௌத்தத் தொல்லியல் களம் உள்ளது.[4]
கிமு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மையப்பகுதிகளை சாதவாகனர்கள் ஆட்சி செய்த காலத்தில் நிறுவப்பட்ட சந்திராவரம் பௌத்த தொல்லியல் களத்தை, முனைவர். வெலூரி வெங்கட கிருஷ்ண சாஸ்திரி என்பவர் 1964ல் கண்டுபிடித்தார்.[1][2][5]
கட்டுமான அமைப்பு
[தொகு]சந்திராவரம் பௌத்த தொல்லியல் களத்தில், மலைக்குன்றின் உச்சியில் இரண்டு நிலைகளுடன் கூடிய தூபிகளுடன் செங்கல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்டுள்ளது.[1][3][6] பௌத்தப் பிரிவான ஈனயானம் பௌத்த கட்டிடக் கலை நயத்தில் வடிக்கப்பட்ட மகாதூபி 120 அடி சுற்றளவும், 30 அடி உயரமும் கொண்டுள்ளது. மகாதூபியில் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திராவரம் பௌத்த தொல்லியல் களம், பல பௌத்த விகாரைகளும், பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் கொண்டுள்ளது.
மகாதூபியில், 1.6 மீட்டர் உயரமும், 60 செண்டி மீட்டர் அகலம் கொண்ட சைத்தியமும் உள்ளது.[3][5]
மகாதூபி சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. அதில் புத்தரின் பாதங்கள், போதி மரம், புத்த ஜாதக கதைகள் முதலியன பொறிக்கப்பட்டுள்ளது. 1964 முதல் நான்கு முறை இவ்விடத்தை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. போது கீழ் கண்டவைகள் கண்டெடுக்கப்பட்டது.[1]
அமைவிடம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Chandavaram – Foothold of Buddhist Mahastupa". kostalife.com. http://www.kostalife.com/heritage/chandavaram-foothold-of-buddhist-mahastupa-in-andhra/. பார்த்த நாள்: Dec 2015.
- ↑ 2.0 2.1 "Easy pickings". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/series-of-robberies-at-remote-buddhist-sites-in-andhra-pradesh-exposes-neglect-of-excavated-treasures/1/230807.html. பார்த்த நாள்: Dec 2015.
- ↑ 3.0 3.1 3.2 "About Chandavaram Excavation Site". Holidayiq.com இம் மூலத்தில் இருந்து 2015-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151210192713/http://www.holidayiq.com/Chandavaram-Excavation-Site-Ongole-Sightseeing-857-18953.html. பார்த்த நாள்: Dec 2015.
- ↑ "Chandavaram monastic cluster". Monastic Asia. http://monastic-asia.wikidot.com/chandavaram. பார்த்த நாள்: Dec 2015.
- ↑ 5.0 5.1 "Chandavaram Buddhist site". Discovered India. http://www.discoveredindia.com/andhra-pradesh/attractions/buddhist-centers/chandavaram-buddhist-site.htm. பார்த்த நாள்: Dec 2015.
- ↑ "Chandavaram, Andhra Pradesh". Buddhist tourism இம் மூலத்தில் இருந்து 23 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923195013/http://www.buddhist-tourism.com/countries/india/buddhist-sites/chandavaram-andhra-pradesh.html#. பார்த்த நாள்: 1 December 2015.
- ↑ Macherla
- ↑ Narasaraopet