ராமதீர்த்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமதீர்த்தம் (Ramateertham), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தின் தலைமையிட நகரமான விஜயநகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் அருகே உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள போதிகொண்டா மற்றும் பக்தலுகொண்டா மலைகளில், கிமு மூன்றாம் நூற்றாண்டின் பழைமையான பௌத்தம் மற்றும் சமணத் தொல்லியல் களங்கள் உள்ளது.[1]

இங்குள்ள அஞ்சலகத்தின் அஞ்சல் சுட்டு எண் 535 218 ஆகும். [2]

போதிகொண்டாவின் சிதிலமடைந்த பௌத்தக் கோயில்

தொல்லியல் களம்[தொகு]

இராமதீர்த்தம் மலையடிவாரத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டு காலத்தியிய சிதிலமடைந்த சமணம் மற்றும் பௌத்தப் பிக்குகள் தங்குவதற்கான விகாரைகளும் உள்ளது. மேலும் இங்கு ஒரு இராமர் கோயிலும் உள்ளது.

குருபக்துலகொண்டா பௌத்த விகாரையின் எஞ்சிய பகுதிகள், ராமதீர்த்தம்
ஆந்திரப் பிரதேச பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்

பௌத்தம் மற்றும் சமணம்[தொகு]

ராமதீர்த்தம் மலையில் உள்ள செங்கற்களால் ஆன பௌத்த நினைவுச் சின்னங்கள் சிதிலமடைந்துள்ளது.

கிமு மூன்றாம் நூற்றாண்டின் சிதிலமைடந்த பௌத்த விகாரையும், சமண சமய குடைவரைகளின் சுவர்களில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் பௌத்தர்களால் நிறைந்த இவ்விடம், பின்னர் சமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமதீர்த்தம்&oldid=3569631" இருந்து மீள்விக்கப்பட்டது