மன்மோடி குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்மோடி குகையின் நுழைவு வாயில்

மன்மோடி குகைகள் (Manmodi caves) (मानमोडी लेणी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தில், ஜூன்னார் நகரத்தின் தெற்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த பௌத்த தொல்லியல் களம் ஆகும்.[1] ஜூன்னார் நகரத்திற்கு அருகில் அமைந்த பிற பௌத்த குகைகள் துளஜா குகைகள், சிவனேரி மற்றும் லெண்யாத்திரி குகைகள் ஆகும். [1]

மன்மோடி குகைகள், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது.

மன்மோடி குகைகளின் குடைவரைகள் கிமு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கிபி மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நிறுவப்பட்டுள்ளது. [1]

மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்ட மன்மோடி குகைகளை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. இக்குகைகளை மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:

  • பூதலிங்க குகைத் தொகுதி (भूत लेणी), இதனை யவனர்கள் அளித்த கொடை மூலம் நிறுவப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.
  • அம்பா-அம்பிகா குகைத் தொகுதி (अंबा-अंबिका)
  • பீமாசங்கர் குகைத்தொகுதி[2]

மன்மோடி மலையின் தென்கிழக்கில் மேற்கு சத்திரபதி மன்னர் நகபானரின் முதலமைச்சர் அய்மாவின் கிபி 124ம் ஆண்டின் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. [3] அம்பா-அம்பாலிகை குடைவரைகள், நேமிநாதர் உள்ளிட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் கொண்டது.

அமைவிடம்[தொகு]

மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்திற்கு வடக்கில் 91.7 கிமீ தொலைவில், ஜூன்னாரில் (19°10’ N; 73°53’ E) பாகையில் மன்மோடி குகைகள் அமைந்துள்ளது.

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Manmodi
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மோடி_குகைகள்&oldid=3086232" இருந்து மீள்விக்கப்பட்டது