பன்காலாகாஜி குகைகள்
பன்காலாகாஜி குகைகள் | |
---|---|
![]() பன்காலாகாஜி குகைகள் | |
ஆள்கூறுகள் | 17°38′44″N 73°14′42″E / 17.645678°N 73.245072°E |
பன்காலாகாஜி குகைகள் (Panhalakaji Caves) என்பது மகாராட்டிரா மாநிலத்தின் மும்பைக்கு 160 கி.மீ தெற்கே இரத்தினகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த குகை வளாகத்தில் சுமார் 30 பௌத்த குகைகள் உள்ளன . [1] பௌத்த சமயத்தின் பெரிய உட்பிரிவானஈனயானப் பிரிவு பொ.ச. 3 ஆம் நூற்றாண்டில் குகைகளை செதுக்கத் தொடங்கியது. தற்போதைய குகை 5இல் உள்ள தாது கோபுரத்துடன் [2] குகைகளில் பிராமி மற்றும் தேவநாகரி எழுத்துக்களில் கல்வெட்டுகள் உள்ளன. பொ.ச. 10-11ஆம் நூற்றாண்டில், மற்றொரு பௌத்தக் குழுவான வச்சிரயான பௌத்தம், தங்கள் தெய்வங்களான அக்சோப்யா மற்றும் மகாசந்தரோஷனா ஆகியோருடன் குகை 10ஐ நிறுவியது. மேலும், அந்த பிராந்தியத்தில் அவர்களின் நடைமுறையையும் வலுப்படுத்தியது. சிலகாரா மன்னர்களின் ஆட்சியின் போது சிவன் மற்றும் கணபதி வழிபாடு இந்த இடத்தில் தொடங்கியது. இங்கு மொத்தம் 29 குகைகள் உள்ளன. அவற்றில் 28 குகைகள் கோட்ஜாயின் வலது கரையில் அமைந்துள்ளது.
முக்கியமான குகைகளின் பட்டியல் பின்வருமாறு:
- குகை 10இல் மகா-சந்திரரோஷனாவின் உருவம் உள்ளது. இது ஒடிசாவின் பண்டைய பௌத்த தளங்களுடன் இரத்னகிரியின் தொடர்பைக் குறிக்கிறது.
- குகை 14இல் நாத் பாந்தாவின் தெய்வங்கள் உள்ளன.
- குகை 19இல் சிவலிங்கம் உள்ளது. அதன் உச்சியில் இந்து வேதங்கள் உள்ளன.
- குகை 29ஐ நாத் பாந்தா பயன்படுத்தினார். இது கவுர் லீனா என்று பெயர் மாற்றப்பட்டது.
எப்படி அடைவது[தொகு]
- தொடர் வண்டி: இரத்தினகிரி தொடர் வண்டி நிலையம் அருகிலுள்ளது.
- சாலை வழியாக: தபோலி அருகே தேசிய நெடுஞ்சாலை 4இல் அமைந்துள்ளது.
மேலும் படிக்க[தொகு]
M. N. Deshpande (1986) (in English). The caves of Panhāle-Kājī (ancient Pranālaka): an art historical study of transition from Hinayana, Tantric Vajrayana to Nath Sampradāya (third to fourteenth century A.D.). New Delhi: Archaeological Survey of India. இணையக் கணினி நூலக மையம்:923371295. https://books.google.com/books?id=hRNuAAAAMAAJ. பார்த்த நாள்: 5 February 2021.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ET Bureau. "Quick getaway: Dapoli, Saharanpur, Nanjagud". http://articles.economictimes.indiatimes.com/2013-04-18/news/38617616_1_saharanpur-lord-shiva-temples. பார்த்த நாள்: 10 November 2013.
- ↑ Mitra, Debala (1984). India Archaeology 1981-82. New Delhi: Archaeological Survey of India, Government of India. பக். 97, 98. Archived from the original on 26 நவம்பர் 2013. https://web.archive.org/web/20131126135547/http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201981-82%20A%20Review.pdf. பார்த்த நாள்: 10 November 2013.
வெளி இணைப்புகள்[தொகு]
- Map of Panhalakaji Caves பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்