வாரணாசியிலுள்ள படித்துறைகள்
வாராணசியிலுள்ள படித்துறைகள் (Ghats in Varanasi) என்பது உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசியில் பாயும் கங்கை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள படித்துறைகள் பற்றியதாகும். நகரில் 88 படித்துறைகள் உள்ளன. பெரும்பாலானவை புனிதக் குளியலும், சடங்குகளும் நடைபெறும் இடமாகும். அதே நேரத்தில் மணிகர்ணிகா படித்துறையும், அரிச்சந்திரன் படித்துறையும் இறந்த உடல்களை தகனம் செய்யும் இடங்களாக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகின்றன.[1]
18-ஆம் நூற்றாண்டில், நகரம் மராட்டிய ஆட்சியின்கீழ் இருந்தபோது, பெரும்பாலான படித்துறைகள் புனரமைக்கப்பட்டன.[2] தற்போதைய படித்துறைகளுக்கு மராட்டியர்கள், சிந்தியர்கள், ஓல்கர்கள், போன்சலேக்கள் பேஷ்வாக்கள் ஆகியோரின் ஆதரவு இருந்தது. பல படித்துறைகள் புராணக்கதைகளுடனோ அல்லது புராணங்களுடனோ தொடர்புடையவை. அதே நேரத்தில் பல படித்துறைகள் தனியாருக்கு சொந்தமானவை. படித்துறைகளின் குறுக்கே பிரபலமான காலை நேர படகுச் சவாரி பார்வையாளர்களை ஈர்க்கிறது.
உலகப் பாரம்பரியக் களம்
[தொகு]யுனெஸ்கோ நிறுவனம் மே 2021-இல் இந்தியாவின் ஆறு பண்பாட்டு களங்களை உத்தேச உலகப் பாரம்பரியக் களங்களாக தேர்வு செய்துள்ளது. வாராணசியிலுள்ள படித்துறைகளும் அதில் ஒன்றாகும்.[3][4][5][6]
படித்துறைப் பட்டியல்
[தொகு]அசி படித்துறை முதல் ஆதி கேசவா படித்துறை வரை உள்ள படித்துறைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:
பகுதி 1
[தொகு]அசி படித்துறை முதல் பிரயாக் படித்துறை வரை (1–41)
எண். | படித்துறைப் பெயர் | படம் |
---|---|---|
1 | அசி படித்துறை | |
2 | கங்கா மகால் படித்துறை | |
3 | லாசி படித்துறை | |
4 | துளசி படித்துறை | |
5 | பாதானி படித்துறை | |
6 | சானகி படித்துறை | |
7 | ஆனந்தமாயி படித்துறை | |
8 | வச்சராசா படித்துறை | |
9 | ஜெயின் படித்துறை | |
10 | நிசாத் படித்துறை | |
11 | பிரபு படித்துறை | |
12 | பஞ்சகோட்டா படித்துறை | |
13 | சீத் சிங் படித்துறை | |
14 | நிரஞ்சனி படித்துறை | |
15 | மகாநிர்வாணி படித்துறை | not available |
16 | சிவாலா படித்துறை | |
17 | குலாரிய படித்துறை | |
18 | தண்டி படித்துறை | |
19 | அனுமன் படித்துறை | |
20 | பிரசினா (பழைய) அனுமன்னா படித்துறை | |
21 | கர்நாடகா படித்துறை | |
22 | அரிச்சந்திரன் படித்துறை | |
23 | லாலி படித்துறை | |
24 | விசயநகரம் படித்துறை | |
25 | கேதார் படித்துறை | |
26 | சவுக்கி (சாக்கி) படித்துறை | |
27 | காமேசுவரா/ சோமேசுவரா படித்துறை | |
28 | மானசரவோர் படித்துறை | |
29 | நராட் படித்துறை | |
30 | ராச படித்துறை | |
31 | கோரி படித்துறை | |
32 | பாண்டே படித்துறை | |
33 | சர்வேசுவரா படித்துறை | |
34 | திக்பாட்டியா படித்துறை | |
35 | சவுசாதி படித்துறை | |
36 | ராணா மகால் படித்துறை | |
37 | தார்பாங்கா படித்துறை | |
38 | முன்சி படித்துறை | |
39 | அகல்யபாணிப் படித்துறை | |
40 | சீத்தாள படித்துறை | |
41 | தசவசுவமேத படித்துறை |
பகுதி 2
[தொகு]பிரயாக் முதல் ஆதி கேசவ் படித்துறை வரை (42–84)
எண் | படித்துறை பெயர் | படம் |
---|---|---|
42 | பிரயாக் படித்துறை | |
43 | இராசேந்திரப் பிரசாத் படித்துறை | . |
44 | மன் மந்தீர் படித்துறை | |
45 | திரிபுரா பைரவி படித்துறை | |
46 | மிர் (மீர்) படித்துறை | |
47 | புதா/நாய படித்துறை | யஜ்னேஸ்வர படித்துறையின் பழைய தளம் |
48 | நேபாளி படித்துறை | |
49 | லலிதா படித்துறை | |
50 | பாலி/ உமரோகிர்/ அம்ரோகாஅ படித்துறை | |
51 | ஜல்சென் (ஜலசேய்) படித்துறை | |
52 | கிக்ரி படித்துறை | |
53 | மணிகர்னிகா படித்துறை | |
54 | பஜிரோ படித்துறை | |
55 | சிந்தியா படித்துறை | |
56 | சங்காத்தா படித்துறை | |
57 | கங்கா மகால் படித்துறை(II) | |
58 | போன்சலே படித்துறை | |
59 | நயா படித்துறை | 1822-ஆம் ஆண்டின் பிரின்செப்பின் வரைபடத்தில், இது குலேரியா செகட் என்று பெயரிடப்பட்டது |
60 | கணேசா படித்துறை | |
61 | மேத்தா படித்துறை | முந்தைய படித்துறையின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் வி. எஸ். மேத்தா மருத்துவமனை (1962) கட்டப்பட்ட பின்னர், இது பிந்தைய பெயரால் அறியப்படுகிறது. |
62 | இராமா படித்துறை | |
63 | ஜத்தாரா படித்துறை | |
64 | குவாலியர் ராசா படித்துறை | |
65 | மங்கள கவுரி படித்துறை (பாலா படித்துறை) | |
66 | வேணிமாதவா படித்துறை | பஞ்சகங்க படித்துறையின் ஒரு பகுதி மற்றும் விந்து மாதவ படித்துறை என்றும் அழைக்கப்படுகிறது |
67 | பஞ்சகங்கை படித்துறை | |
68 | துர்க்கா படித்துறை | |
69 | பிரம்மா படித்துறை | |
70 | புண்டி பராகோட்டா படித்துறை | |
71 | ஆதி சீத்தாள படித்துறை | This is an extended part of the preceding ghat |
72 | லால் படித்துறை | |
73 | அனுமன்னகார்தி படித்துறை | |
74 | கயா படித்துறை | |
75 | பத்ரி நாராயண படித்துறை | |
76 | திரிசான் படித்துறை | |
77 | கோலா படித்துறை | 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படகுப் குழாமாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் பல களஞ்சியங்களுக்காகவும் (தங்கம்) அறியப்பட்டது |
78 | நந்தீசுவர/நந்துப் படித்துறை | |
79 | சாகா படித்துறை | |
80 | தெல்லிஆனலா படித்துறை | |
81 | நயா/புதுப் படித்துறை | 18-ஆம் நூற்றாண்டின் போது படித்துறை பகுதி வெறிச்சோடியது (பூட்டா), ஆனால் பின்னர் புதுப்பிக்கப்பட்டது. இந்த படித்துறை முன்பு பூட்டா என்றும் பின்னர் நயா என்றும் அழைக்கப்பட்டது. |
82 | பிரகலாதா படித்துறை | |
83 | இராச படித்துறை (பைசாசூர் இராசபடித்துறை)/லார்ட் துப்ரின் பாலம்/மாளவியா பாலம் | |
84 | ஆதி கேசவன் படித்துறை | |
ரவிதாசர் படித்துறை | ||
நிசாத படித்துறை (பிரகலாதவிலிருந்து பிரிந்தது) | ||
அரசிப் படித்துறை | ||
சிறீ பஞ்ச அக்னி அக்காரா படித்துறை | ||
தாதகாட் படித்துறை/புத்தா படித்துறை |
பிரபலமான படித்துறைகள்
[தொகு]புராணங்களின்படி ஆற்றங்கரையில் ஐந்து முக்கிய படித்துறைகள் உள்ளன; அவை புனித நகரமான காசியுடன் இணைந்திருப்பதால் முக்கியமானது: அசி படித்துறை, தசவசுவமேத படித்துறை, மணிகர்ணிகா படித்துறை, அரிச்சந்திரன் படித்துறை, ஆதி கேசவ படித்துறை.[7] .
அசி படித்துறை
[தொகு]அசி படித்துறை வாராணசியின் தெற்கே அமைந்துள்ளது. இது மிகவும் பிரபலமானது. பனாரசு இந்து பல்கலைக்கழகத்திற்கு மிக நெருக்கமான முக்கிய படித்துறைகளில் இதுவும் ஒன்றாகும். அசி படித்துறையானது அசி ஆற்றிலிருந்து தனது பெயரை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோதியின் தனது பிறந்தநாளை முன்னிட்டு 17 செப்டம்பர் 2015 அன்று தானியங்கு தண்ணீர் எந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.[8]
தசவசுவமேத படித்துறை
[தொகு]தசவசுவமேத படித்துறை என்பது காசி விசுவநாத் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது இந்து புராணக் கதைகளின்படி, இப்படித்துறையில் பிரம்மா அசுவமேத யாகம் செய்யும் போது பத்து குதிரைகளை (அசுவம்) பலியிட்டார் என்றும் மற்றொரு புராணக்கதையின்படி பிரம்மா இங்கு படித்துறை அமைத்து சிவபெருமானை எழுந்தருளச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.[9][10] தினமும் மாலையில் "அக்னி பூஜை" (நெருப்புக்கு வழிபாடு) நிகழ்ச்சியில் சிவன், கங்கை ஆறு, சூரியன், அக்னி (நெருப்பு) மற்றும் முழு பிரபஞ்சத்திற்கும் அர்ச்சகர்கள் குழுவால் அர்ப்பணிப்பு செய்யப்படுகிறது.
மணிகர்ணிகா படித்துறை
[தொகு]இங்குள்ள படித்துறையில் மணிகர்ணிகா என்றழைக்கப்படும் குளம் உள்ளது. பார்வதி தேவியின் தொலைந்து போன காதணியை (மணிகர்ணிகா) தேடும்போது சிவபெருமான் இக்குளத்தைத் தோண்டியதாக நம்பப்படுகிறது.[11][12][13][14]
அரிச்சந்திரன் படித்துறை
[தொகு]புராணக் கதையில் வரும் அயோத்தி நாட்டு மன்னன் அரிச்சந்திரன், விதி வசத்தால் இங்கு அமைந்த மயானத்தில் பிணம் எரிக்கும் வெட்டியானாக ஏவல் செய்த காரணத்திற்காக இப்படித்துறைக்கு அரிச்சந்திரன் படித்துறை எனப் பெயராயிற்று.[15]. காசியில் இறப்பவர்களை அரிச்சந்திர படித்துறையில் தகனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் பரம்பரை நம்பிக்கை.[16] வாரணாசியில் இந்துக்களின் சடலங்களை எரியூட்டப்படும் இரண்டு படித்துறைகளில் இதுவும் ஒன்று.
மத நம்பிக்கை
[தொகு]வாரணாசியில் இறந்து, இப்படித்துறையில் தனது சடலம் எரிக்கப்பட்டால் வீடுபேறு அடைவது உறுதி என்று இந்துக்களில் பலர் நம்பிக்கையுடன் உள்ளனர். இப்படித்துறையில் நாள் முழுவதும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். திறந்தவெளி சுடுகாடாக இருக்கும் இப்படித்துறையில் சிதை மூட்டப்படுவதைக் காண சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். முக்கியமானவர்கள் இறந்தபின்னர், விஷ்ணுவின் பாதச்சுவடுகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படும் கல் பலகையில் எரிக்கின்றனர். சாக்த சமயத்தினர்களுக்கு, மணிகர்ணிகா படித்துறை முக்கியமானது.[17] எரியூட்டல் அல்லது "இறுதி சடங்குகள்" நேரத்தில், ஒரு " பூஜை " (பிரார்த்தனை) செய்யப்படுகிறது. சடங்கைக் குறிக்கும் விதமாக தகனத்தின் போது துதிப்பாடல்களும் மந்திரங்களும் ஓதப்படுகின்றன. மணிகர்ணிகா மற்றும் அரிச்சந்திரன் படித்துறைகள் தகன சடங்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டவை. ஆண்டுதோறும், இந்தியாவில் இறக்கும் 1000 பேரில் 2 க்கும் குறைவானவர்கள் அல்லது 25,000 முதல் 30,000 உடல்கள் பல்வேறு வாரணாசி படித்துறைகளில் தகனம் செய்யப்படுகின்றன; ஒரு நாளைக்கு சராசரியாக 80. இந்த நடைமுறை கங்கை ஆற்றில் ஏற்படும் மாசுபாட்டிற்கு சர்ச்சைக்குரியதாகிவிட்டது.[18] 1980 களில், வாரணாசி படித்துறைகளில் தகனம் மற்றும் பிற மாசுபடுத்தும் ஆதாரங்களை நிவர்த்தி செய்வதற்காக, கங்கையை சுத்தப் படுத்தும் முயற்சிக்கு இந்திய அரசு நிதியளித்தது. தற்போது பல சந்தர்ப்பங்களில், தகனம் வேறு இடங்களில் நடத்தப்படுகிறது . சாம்பல் மட்டுமே இந்த படித்துறை அருகே ஆற்றில் கலக்கப்படுகிறது.[19]
படித்துறையின் மாசு
[தொகு]சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இந்தியாவில் ஆறு மாசுபாட்டின் பரவலான பிரச்சனையாகும். நகரத்தின் கழிவுகளும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் படித்துறை வழியாக கங்கையில் பாய்ந்து ஆற்றை பெருமளவில் மாசுபடுத்துகிறது.[20][21]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rob Bowden (2003), The Ganges, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0739860700, Heinemann
- ↑ Diana Eck, Banaras: CITY OF LIGHT, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691020235, Princeton University Press
- ↑ 6 UNESCO heritage sites added in India
- ↑ Ramappa Temple: How a site is selected for World Heritage List
- ↑ 6 heritage sites on tentative Unesco list
- ↑ Six Indian places added to tentative list of UNESCO World Heritage Sites
- ↑ Shankar, Hari (1996). Kashi ke Ghat (1 ed.). Varanasi: Vishwvidyalaya Prakashan.
- ↑ Mishra, Rajnish (2017). Ghats of Varanasi (1 ed.). New Delhi.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ http://www.varanasi.org.in/dasaswamedh-ghat
- ↑ Dasasvamedha Ghat வாரணாசி official website.
- ↑ (Translator), F. Max Muller (June 1, 2004). The Upanishads, Vol I. Kessinger Publishing, LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1419186418.
{{cite book}}
:|last=
has generic name (help); Check|first=
value (help) - ↑ (Translator), F. Max Muller (July 26, 2004). The Upanishads Part II: The Sacred Books of the East Part Fifteen. Kessinger Publishing, LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1417930160.
{{cite book}}
:|last=
has generic name (help); Check|first=
value (help) - ↑ "Kottiyoor Devaswam Temple Administration Portal". http://kottiyoordevaswom.com/. Kottiyoor Devaswam. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
{{cite web}}
: External link in
(help)|work=
- ↑ http://www.varanasi.org.in/manikarnika-ghat
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-17. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
- ↑ http://wikimapia.org/18128268/Raja-Harishchandra-Ghat
- ↑ Diana Eck, Banaras - City of Light, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0231114479, Columbia University Press
- ↑ S. Agarwal, Water pollution, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8176488327, APH Publishing
- ↑ Flood, Gavin: Rites of Passage, in Bowen, Paul (1998). Themes and issues in Hinduism. Cassell, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-33851-6. pp. 270.
- ↑ O. Singh, Frontiers in Environmental Geography, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170224624, pp 246-256
- ↑ "Ghats of Varanasi". Archived from the original on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ghats of Varanasi, webpage at Varanasi official website.