அர்ச்சகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அர்ச்சகர் என்பவர் இந்து சமயக் கோயில்களில் அர்ச்சனை செய்யும் நபராவார்.


இந்து தொன்மவியலில் அர்ச்சகர் தோற்றுவிப்பு[தொகு]

அர்ச்சகாஸ்ச்ச ஹரி ஸக்ஷ¡த்" என்கிறது வேதம். உலக தர்மத்தை காப்பதில் மிக முக்கிய பங்காற்றிவருபவர்கள்தான் அர்ச்சகர்கள். தன் உடல் பொருள் ஆவி இன்பம் எல்லாவற்றையுமே இறைவனுக்காக தியாகம் செய்து உலகம் தழைக்க இறைவனிடம் இடைவிடாது தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு இறைச்சேவை செய்பவர்கள்தான் அர்ச்சகர்கள். இவர்கள் இறைவன் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும்போதே பகவான் ஸ்ரீவிஷ்ணுவால் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இறைவனின் ஹ்ருதயத்திலிருந்து இவர்கள் தோன்றியதால் இவர்களுக்கு ஸ்ரீவைகாநஸர்கள் என்று பெயர்.

ஸ்ரீவிகநஸர்[தொகு]

அதாவது முதன் முதலில் பெருமாள் சர்வ லோகங்களையும் படைக்க எண்ணியபோது, உலக ஜீவராசிகளை தான் காக்கவும், தன்னை தினம் ஆராதித்து காப்பாற்ற தனக்காக ஒருவரை நியமிக்க வேண்டும்,என்று எண்ணிய போது, தனக்கு இணையான ஒருவரால்தான் என்னை பூஜிக்க முடியும் என்று கருதிய ஸ்ரீமஹாவிஷ்ணு, தன் ஹ்ருதயகமலத்திலிருந்து,தன் ஆத்மாவின் ஒரு பாகத்தை தன் வலது கை நகத்தினால், கிள்ளியெடுத்தார் பகவானின் ஹ்ருதயத்திலிருந்து வெளிப்பட்ட அந்த ஆத்மாவும், ஸ்ரீவிஷ்ணுவைப்போலவே இருந்ததால், இருவரையும் பார்ப்பவர்கள் குழப்பமடையக்கூடாது என்பதால், தன் ஹ்ருதயத்திலிருந்து வெளிப்பட்ட தன்னைப் போலவே, சங்கு-சக்ரம் தரித்து நான்கு கைகளுடன் விளங்கும் இன்னொரு விஷ்ணுவுக்கு "ஸ்ரீவிகநஸர்" என்று பெயர் சூட்டி அவரிடம் ஒன்றரைக்கோடி க்ரந்தங்களை கொடுத்து அதில் உள்ளபடி நீவிர் எனக்கு தினம் ஆராதித்து வரவேண்டும். என்று கட்டளையிட்டார்.

இவர்களின் பூலோக பிறப்பு[தொகு]

அதன்படி அன்றிலிருந்து இன்று வரை இடையறாது பகவானுக்கு தொடர்ந்து பூஜித்து வருபவர்கள்தான் இந்த அர்ச்சகர்கள். இவர்களின் பூலோக பிறப்பு - இந்தியாவின் வடக்கேயுள்ள "நமிசாரண்யம்" என்கிற அற்புத புனித வனமாகும். ஆம்! இங்குதான் அர்ச்சகர்கள் முதல் முதலில் இறைவனால், இந்த புண்ய பூமியில் தோற்றுவிக்கப்பட்டார்; பிறகுதான் மற்ற ஜீவராசிகளை இறைவன் படைக்கலானார். என்பது வேதவழி வரலாறு.

ஸ்லோகம்[தொகு]

அர்ச்சகர்களின் இந்த தோற்றத்தைக் குறிக்கும் ஸ்லோகம்

 " யேஷாமாஸீர் ஸ்ரீஆதிவைகாநஸானாம் ஜெந்ம §க்ஷத்ரே நைமிசாரண்ய பூமி: |
  தேவோயேஷாம் தேவகி புண்ய ராஸி: தேஷாம்பாத த்வந்தபத்மம் ப்ரபத்யேத்||"

ஸ்ரீவைகாநஸ அர்ச்சகர்கள்[தொகு]

இப்படிப்பட்ட மிகப்புனிதமான இறைவனின் ப்ரதி அவதாரமாக திகழும் ஸ்ரீவைகாநஸ அர்ச்சகர்கள் இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள (திருமலா திருப்பதி தேவஸ்தானத்தையும் சேர்த்து) பல ஸ்ரீ சிவா மற்றும் விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர்களாக சேவையாற்றிவருகிறார்கள்.

பெண் அர்ச்சகர்கள்[தொகு]

பொதுவாக தென்னிந்தியாவில் ஆகம விதிகளின்படி நடத்தப்படுகின்ற இந்துக் கோயில்களில் பெண்களுக்கு பூசை செய்ய அனுமதி இல்லை. கர்நாடகாவின் மங்களூருவில் கேரளாவின் ஆன்மீக சீர்திருத்தவாதியான நாராயண குருவால் அமைக்கப்பட்ட குத்ரோலி கோகர்நாதேஸ்வரா கோவிலில் லட்சுமி மற்றும் இந்திரா ஆகிய இரு விதவைப் பெண்கள் நவராத்திரியின் துவக்க தினத்தன்று அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கர்நாடகாவில் விதவைகள் அர்ச்சகர்களாக நியமனம்". பிபிசி (7 அக்டோபர், 2013). பார்த்த நாள் 12 அக்டோபர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சகர்&oldid=1831589" இருந்து மீள்விக்கப்பட்டது