வாரணாசி நகரத் தொடருந்து நிலையம்
வாரணாசி நகரத் தொடருந்து நிலையம் | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம், | |
இடம் | தே. நெ. 2 ஜெய்த்புரா, வாரணாசி, உத்தரப்பிரதேசம் இந்தியா |
அமைவு | 25°20′04″N 83°00′52″E / 25.334332°N 83.014485°E |
உயரம் | 76.7 மீட்டர் (251.7 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடகிழக்கு தொடருந்து மண்டலம் |
தடங்கள் | வாரணாசி-சாப்ரா வழித்தடம் கோரக்பூர்-மா-பிரயாக்ராஜ் முதன்மை வழித்தடம் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 5 |
Train operators | இந்திய இரயில்வே |
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா பேருந்து |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | BCY |
இந்திய இரயில்வே வலயம் | வகிதொம |
இரயில்வே கோட்டம் | வாரணாசி தொடருந்து மண்டலம் |
பயணக்கட்டண வலயம் | வடகிழக்கு தொடருந்து மண்டலம் |
அமைவிடம் | |
வாரணாசி நகரத் தொடருந்து நிலையம் (Varanasi City railway station) வாரணாசியில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து வடகிழக்கில் 4 கி. மீ. தொலைவிலும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் வடகிழக்கில் 10 கி. மீ. தொலைவிலும் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையத்தின் தென்கிழக்கே 23 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்தில் பயணிப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் கூடுதலாக இந்த முனையம் செயல்படுகிறது.
பயணிகள் வசதிகள்[தொகு]
வாரணாசி நகரத் தொடருந்து நிலையத்தில், ஐந்து நடைமேடைகள் உள்ளன, கூடுதலாக 8 நடைமேடைகளுக்கான வசதிகள் உள்ளன. நிலையத்திற்கு ஒரு நுழைவாயில் உள்ளது. வாரணாசி சந்திப்பில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாண்டுவாடி ரயில் நிலையத்தையும், வாரணாசி நகர ரயில் நிலையத்தையும் கூடுதல் நிலையங்களாக மேம்படுத்த இரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இப்போது, வாரணாசி நகரம் வடகிழக்கு தொடருந்து மண்டலத்தின் (வாரணாசி நகரப் பிரிவு) தலைமை நிலையமாகும். முன்னதாக வாரணாசி சந்திப்பு வடகிழக்கு ரயில்வேயின் தலைமையகமாக இருந்தது. பின்னர் வடகிழக்கு ரயில்வே இந்த தலைமையகத்தை மாற்றியது. வாரணாசி சந்திப்பு வடக்கு தொடருந்து மண்டலத்தின் கீழ் வருவதால், இலக்னோ சார்பாக் கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த நிலையம் காஜிபூர், மாவ், தர்பங்கா, சாப்ரா, மும்பை, இலக்னோ, கோரக்பூர், கான்பூர் போன்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[1][2]
வாரணாசி நகரத்திலிருந்து புறப்படும் தொடருந்து வண்டிகள்[தொகு]
ரயில் எண் | ரயில் பெயர் | புறப்படும் இடம் | சேருமிடம் |
---|---|---|---|
15007 | கிரிஷாக் எக்ஸ்பிரஸ் | வாரணாசி நகரம் | இலக்னோ |
15552 | வாரணாசி சிட்டி-தர்பங்கா அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் | வாரணாசி நகரம் | தர்பங்கா |
55132 | வாரணாசி சிட்டி-சாப்ரா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் | வாரணாசி நகரம் | சப்ரா |
பயணிகள் ரயில்கள் வாரணாசி நகரத்திலிருந்து[தொகு]
ரயில் எண் | ரயில் பெயர் | புறப்படும் இடம் | சேருமிடம் |
---|---|---|---|
55014 | பயணிகள் | வாரணாசி நகரம் | சப்ரா |
55120 | பயணிகள் | வாரணாசி நகரம் | கோரக்பூர் |
55132 | பயணிகள் | வாரணாசி நகரம் | சப்ரா |
75114 | பயணிகள் (டெமு ) | வாரணாசி நகரம் | பட்னி |
55134 | பயணிகள் | வாரணாசி நகரம் | பாலிலா |
63297 | பயணிகள் (மெமு ) | வாரணாசி நகரம் | பாலிலா |
55136 | பயணிகள் | வாரணாசி நகரம் | அசாம்கார்க் |
55150 | பயணிகள் | வாரணாசி நகரம் | கோரக்பூர் |
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Varanasi City railway station". indiarailinfo.com. http://indiarailinfo.com/arrivals/varanasi-city-bcy/1451.
- ↑ "Railway stations in Varanasi". Varanasi.org.in. http://www.varanasi.org.in/banaras-station-code.