உள்ளடக்கத்துக்குச் செல்

பனாரஸ் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனாரஸ் (வாரணாசி)
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மண்டுவாடி, வாரணாசி மாவட்டம், உத்தரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்25°17′5″N 82°58′20″E / 25.28472°N 82.97222°E / 25.28472; 82.97222
ஏற்றம்80.71 m (264.8 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு தொடருந்து மண்டலம்
தடங்கள்முகல்சராய்-கான்பூர் வழித்தடம், பிரயாக்ராஜ்- கோரக்பூர் முதன்மை வழித்தடம்
நடைமேடை8
இருப்புப் பாதைகள்11
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையான தரைத் தள நிலையம்
தரிப்பிடம்ஆம்
மாற்றுத்திறனாளி அணுகல்Disabled Access உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுBSBS
மண்டலம்(கள்) வடகிழக்கு தொடருந்து மண்டலம்
கோட்டம்(கள்) வாரணாசி கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்ஆம்
முந்தைய பெயர்கள்மாண்டுவாடி தொடருந்து நிலையம்
சேவைகள்
Computerized ticketing countersLuggage checking systemParkingDisabled accessFood plazaTaxi standPublic transportation
அமைவிடம்
பனாரஸ் தொடருந்து நிலையம் is located in உத்தரப் பிரதேசம்
பனாரஸ் தொடருந்து நிலையம்
பனாரஸ் தொடருந்து நிலையம்
உத்தரப் பிரதேசம் இல் அமைவிடம்
பனாரஸ் தொடருந்து நிலையம் is located in இந்தியா
பனாரஸ் தொடருந்து நிலையம்
பனாரஸ் தொடருந்து நிலையம்
பனாரஸ் தொடருந்து நிலையம் (இந்தியா)

பனாரஸ் தொடருந்து நிலையம் (Banaras railway station (station code: BSBS), இதன் பழைய பெயர் மாண்டுவாடி தொடருந்து நிலையம் ஆகும்.[1]இது வாரணாசிக்கு தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டுவாடியில் உள்ளது. வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பனாராஸ் தொடருந்து நிலையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பனாரஸ் தொடருந்து நிலையம் 8 நடைமேடைகளுடன் கூடியது.

பனாரஸ் தொடருந்து நிலையம் மும்பை, முசாபர்பூர், புது தில்லி, கோரக்பூர், லக்னோ, கான்பூர், அலகாபாத், இராமேஸ்வரம், பாட்னா, சம்பல்பூர், ராஞ்சி, தர்பங்கா, புனே, ஹவுரா, பல்லியா மற்றும் அகமதாபாத் நகரங்களை இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது.[2]

பனாரசு தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படும் விரைவுவண்டிகள்

[தொகு]
வண்டி எண் வண்டியின் பெயர் செல்லுமிடம்
12559 சிவ கங்கை விரைவுவண்டி புது தில்லி
12581 பனாரசு-புது தில்லி அதிவிரைவுவண்டி புது தில்லி
15103 கோரக்பூர்-பனார்சு நகரிடை விரைவுவண்டி கோரக்பூர் சந்திப்பு
22132 புனே-பனராசு-கியான் கங்கை விரைவுவண்டி புனே சந்திப்பு
12538 பாபு தாம் அதிவிரைவு வண்டி முசாபர்பூர்
15120 இராமேசுவரம் பனராசு விரைவுவண்டி இராமேசுவரம்
12168 பனராசு லோகமான்ய திலக் அதி விரைவுவண்டி லோகமான்ய திலக்
15125 காசி பாட்னா ஜன் சதாப்தி விரைவுவண்டி பாட்னா சந்திப்பு
18312 பனராசு சம்பல்பூர் விரைவுவண்டி சம்பல்பூர் சந்திப்பு
18612 பனராசு ராஞ்சி விரைவுவண்டி ராஞ்சி சந்திப்பு
14257 காசி விசுவநாதர் விரைவுவண்டி புது தில்லி
11108 புந்தேல்கண்ட் விரைவுவண்டி குவாலியர் சந்திப்பு

இதனையும் காண்க

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]

வெள் இணைப்புகள்

[தொகு]