ஓல்கர் வம்சம்
Appearance
ஓல்கர் வம்சம் மராத்தாவின் அரசர்களாகவும் [1][2][3], இந்தோரின் மன்னர்களாகவும் 1818 வரையிலும் ஆண்டவர்களாவர், அதன்பிறகு மன்னர் அரசாக பிரித்தானிய அரசின் கீழ் இருந்தனர். ஓல்கர் வம்சம், 1721-ம் ஆண்டு பேஷ்வாக்களின் சேவையாளராக இணைந்த மல்கர் ராவ் என்பவர் சுபேதாராக பதவி உயர்ந்தவரால் துவங்கப்பட்டது. இவரை மக்கள் ஓல்கர் மன்னர் எனவும் குறிப்பிட்டனர்.
பிரித்தானிய ஆட்சியின் கீழ், ஓல்கர் மன்னருக்கு 19-குண்டு முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த இந்தோர் மாநிலமானது, சூன் 16, 1948-ம் நாள் இந்திய அரசுடன் இணைந்தது.
ஓல்கர்களின் ஆட்சி
[தொகு]இந்தோர் ஓல்கர் அரசர்கள்
[தொகு]- மல்கர் ராவ் ஓல்கர் (ஆட்சி. 2 நவம்பர் 1731 – 20 மே 1766). பிறப்பு 16 மார்ச்சு 1693, இறப்பு 20 மே 176
- மாலே ராவ் ஓல்கர் (ஆட்சி. 23 ஆகத்து 1766 – 5 ஏப்ரல் 1767). பிறப்பு 1745, இறப்பு 5 ஏப்ரல் 1767
- அகில்யாபாய் ஓல்கர் (முதல் பிரதிநிதியாக 26 மே 1766) (ஆட்சி. 27 மார்ச்சு 1767 – 13 ஆகத்து 1795). பிறப்பு 1725, இறப்பு 13 ஆகத்து 1795
- துகோசி ராவ் ஓல்கர் I (ஆட்சி 13 August 1795 – 29 சனவரி 1797). பிறப்பு 1723, இறப்பு 15 August 1797
- காசி ராவ் ஓல்கர் (ஆட்சி 29 சனவரி 1797 - சனவரி 1799) பிறப்பு before 1776, இறப்பு 1808
- காண்டே ராவ் ஓல்கர் (ஆட்சி சனவரி 1799 - 22 பிப்ரவரி 1807) பிறப்பு in 1798, இறப்பு 1807
- முதலாம் யசுவந்த் ராவ் ஓல்கர் (முதல் பிரதிநிதியாக 1799) (ஆட்சி 1807 - 27 அக்டோபர் 1811). பிறப்பு 1776, இறப்பு 27 அக்டோபர் 1811
- இரண்டாம் மல்கர் ராவ் ஓல்கர் (ஆட்சி 27 அக்டோபர் 1811 – 27 அக்டோபர் 1833) பிறப்பு 1806, இறப்பு 27 அக்டோபர் 1833
- மார்த்தாண்ட் ராவ் ஓல்கர் (ஆட்சி 17 சனவரி 1833 – 2 பிப்ரவரி 1834). பிறப்பு 1830, இறப்பு 2 சூன் 1849
- அரி ராவ் ஓல்கர் (ஆட்சி 17 April 1834 – 24 அக்டோபர் 1843). பிறப்பு 1795, இறப்பு 24 அக்டோபர் 1843
- இரண்டாம் காண்டே ராவ் ஓல்கர் (ஆட்சி 13 நவம்பர் 1843 – 17 பிப்ரவரி 1844). பிறப்பு 1828, இறப்பு 17 மார்ச்சு 1844
- இரண்டாம் துகோசி ராவ் ஓல்கர் (ஆட்சி 27 சூன் 1844 – 17 சூன் 1886). பிறப்பு 3 மே 1835, இறப்பு 17 சூன் 1886
- சிவாசி ராவ் ஓல்கர் (ஆட்சி 17 சூன் 1886 – 31 சனவரி 1903). பிறப்பு 11 நவம்பர் 1859, இறப்பு 13 அக்டோபர் 1908
- மூன்றாம் துகோசி ராவ் ஓல்கர் (ஆட்சி 31 சனவரி 1903 – 26 பிப்ரவரி 1926). பிறப்பு 26 நவம்பர் 1890, இறப்பு 21 மே 1978
- இரண்டாம் யசுவ்ந்த் ராவ் ஓல்கர் (ஆட்சி. 26 பிப்ரவரி 1926 - 1948). பிறப்பு 6 செப்டம்பர் 1908, இறப்பு 5 டிசம்பர் 1961
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Sethi, P.K., S.K. Bhatt and R. Holkar (1976). A Study of Holkar State Coinage, Indore: The Academy of Indian Numismatics and Sigillography.
- Somerset Playne (compiler), R. V. Solomon, J. W. Bond, Arnold Wright (1922). Indian States: A Biographical, Historical, and Administrative Survey, London: Foreign and Colonial Compiling and Publishing Co., 1922 (also Asian Educational Services, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1965-X, 9788120619654, 835 pages
வெளி இணைப்புகள்
[தொகு]- "Holkars of Indore". Indore District website. Archived from the original on 2013-10-30. பார்க்கப்பட்ட நாள் 2015-08-11.
- WorldStatesmen- India