பசீன் உடன்படிக்கை (1802)
பசீன் உடன்படிக்கை | |
---|---|
அமைப்பு | தலைநகரம் பூனாவிலிருந்து தப்பிய பின்னர் தன்னுடைய பாதுகாப்பிற்காக மராட்டிய பேரரசர் பேசுவாவால் கையெழுத்திடப்பட்டது. |
கையெழுத்திட்டது | திசம்பர் 31, 1802 |
கையெழுத்திட்டோர் |
|
பசீன் உடன்படிக்கை (Treaty of Bassein) என்பது 1802 ஆம் ஆண்டு பூனா யுத்தத்திற்கு பிறகு, மராத்தியப் பேரரசின் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவுக்கும், ஆங்கிலேய கிழக்கிந்திய வணிக குழுவிற்கும் இடையில் கையெழுத்தான ஓர் உடன்படிக்கை ஆகும். இந்த உடன்படிக்கை மராட்டியப் பேரரசை கலைப்பதற்கான ஒரு தீர்க்கமான படிநிலையாகும். கிழக்கிந்திய கம்பெனி 1818 ஆம் ஆண்டில் மேற்கு இந்தியாவில் மராட்டியப் பேரரசின் பிரதேசங்களை அபகரிப்பதற்கு இந்த உடன்படிக்கை வழிவகுத்தது.
மராட்டியர்களின் உட்பூசல்
[தொகு]மராட்டியர்களின் முக்கியத் தலைவரான நானா பட்னாவிசு 1800ஆம் ஆண்டு மறைந்தார். இதன் பிறகு, பிற மராட்டியத் தலைவர்களுக்கிடையே உட்பூசல் நிலவியது. பேசுவா இரண்டாம் பாகிராவ் சிந்தியாவை ஆதரித்ததால், கோபமடைந்த ஒல்கர் பேசுவாவின் பூனா மீது படையெடுத்தார். இப்போரில் பேசுவாவும், சிந்தியாவும் தோல்வி அடைந்தனர். பூனாவை கைப்பற்றிய ஒல்கர் அந்நகரை சூறையாடி, பெரும் கொள்ளை பொருளுடன் தனது தலைநகருக்குத் திரும்பினார். பீதியடைந்த பேசுவா இரண்டாம் பாஜிராவ் பசீன் என்ற இடத்துக்கு தப்பியோடினார். இந்த நிலையை சாதகமாக பயன்படுத்த நினைத்த வெல்லெஸ்லி பேசுவாவுக்கு ஆதரவு தந்தார்.
உடன்படிக்கை கையெழுத்தான நாள்
[தொகு]டிசம்பர் 31, 1802 அன்று வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்ட உடன்படிக்கையில், பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் கையெழுத்திட்டார். இதன் விளைவாக, ஆங்கிலேயப் படைகள் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் பூனாவிற்கு சென்று மே 13, 1803 அன்று இரண்டாம் பாகிராவை பேசுவா பதவியில் அமர்த்தியது. ஒல்கர் பூனாவில் இருந்து தப்பி ஓடினார்.
உடன்படிக்கையின் சாராம்சங்கள்
[தொகு]இந்த உடன்படிக்கையின் சாராம்சங்கள் பின்வருமாறு: [1]
- 6000 பேர் கொண்ட ஆங்கிலேயப் படையை பேஷ்வா பராமரிக்க வேண்டும்.
- 2.6 மில்லியன் ரூபாயை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்க வேண்டும்.
- பேஷ்வா வணிகக் குழுவின் அனுமதியின்றி யாருடனும் போர் செய்யக் கூடாது.
- பேஷ்வா வேறு எந்த ஐரோப்பியருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
- சூரத், வதோரா தொடர்பான கோரிக்கைகள் எதுவும் பேசுவா உரிமை கோரக்கூடாது.
- பேசுவா அனைத்து ஐரோப்பியர்களையும் விடுவிக்க வேண்டும்..
- பேசுவாவின் வெளியுறவுக் கொள்கைகள் அனைத்தும் பிரித்தானியர்களின் ஆலோசனைக்கு பின்னரே முடிவு செய்யப்படவேண்டும்.
மதிப்பீடு
[தொகு]- பசீன் உடன்படிக்கை வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தின் மணிமகுடம் எனப் படுகிறது.
- மராட்டியர்கள் இந்த உடன்படிக்கையை அடிமை சாசனம் என்று குறிப்பிட்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.