புரந்தர் உடன்படிக்கை (1665)

முகலாயப் படைத்தலைவரும், ஆமபர் இராச்சிய மன்னருமான முதலாம் ஜெய் சிங், புரந்தர் உடன்படிக்கையில் கையெழுத்து இடுவதற்கு முந்தைய நாளான்று சிவாஜியை வரவேற்கும் காட்சி, நாள் 10 சூன் 1665
புரந்தர் உடன்படிக்கை (Treaty of Purandar (மராத்தி: पुरंदर चा तह) முகலாயப் பேரரசின் இராஜபுத்திர படைத்தலைவர் முதலாம் ஜெய் சிங் புரந்தர் கோட்டையை கைப்பற்றிய பிறகு, மராத்தியத் தலைவர் சிவாஜியுடன் 11 சூன் 1665 அன்று செய்து கொள்ளப்பட்ட உடன்படிககை ஆகும்.
புரந்தர் உடன்படிக்கையின் குறிப்புகள்[தொகு]
- சிவாஜி தனது கட்டுப்பாட்டில் இருந்த 12 கோட்டைகள் முகலாயப் பேரரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
- முகலாயர்கள் கேட்கும் போது, சிவாஜியின் படைகள் முகலாயப் படைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
- சிவாஜியின் மகன் சம்பாஜி முகலாயப் படையில் 5,000 வீரர்களுடன் பணி செய்ய வேண்டும்.
- பிஜப்பூர் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொங்கணப் பகுதியை சிவாஜி கோரினால், அதற்கு 40 இலட்சம் முகலாய ஹோன்கள், முகலாயர்களுக்கு செலுத்த வேண்டும்.
இந்த உடன்படிக்கையை சிவாஜி ஏற்றுக் கொண்டதுடன், அரசியல் பேச்சுவார்த்தைக்கு ஆக்ரா சென்று அவுரங்கசீப்பைச் சந்தித்தார்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- Stewart, S. (1993), Gordan Stewart (ed.), The Marathas 1600-1818 (vol 2) Pg No. 73-74., Cambridge University Press, ISBN 9780521268837.
- John Murray, S. (1841), Mountstuart Elphinstone (ed.), The History of India (Vol. 2) Pg No. 475-476..