தாராபாய்
Appearance
தாராபாய் | |
---|---|
மராத்திய ஓவியர் எம். வி. துரந்தர் என்பவரால் வரையப்பட்ட 1927ஆம் ஆண்டு தாராபாயின் சித்தரிப்பு ஓவியம் | |
பிறப்பு | 1675 |
இறப்பு | 1761 (அகவை 85–86) சாத்தாரா |
துணைவர் | சத்திரபதி இராஜாராம் |
குழந்தைகளின் பெயர்கள் | இரண்டாம் சிவாஜி |
தந்தை | ஹம்பிராவ் |
தாராபாய் போஸலே (1675 - 9 டிசம்பர் 1761[1]) 1700 முதல் 1708 வரை இந்தியாவின் மராட்டிய பேரரசின் சார்புத்துவ அரசி (regent) ஆவார். இவர் சத்ரபதி ராஜராம் போஸலேவின் மனைவியாகவும், மராட்டிய பேரரசை தோற்றுவித்த சத்ரபதி சிவாஜியின் மருமகளாகவும், இரண்டாம் சிவாஜியின் தாயாகவும் இருந்தார். தனது கணவரின் இறப்புக்குப் பிறகு மராட்டிய பிரதேசங்களில் முகலாய ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்பை உயிரோடு வைத்திருப்பதில் வகித்த பங்கிற்கு இவர் பாராட்டப்படுகிறார், மேலும் தனது மகன் இரண்டாம் சிவாஜியின் சிறுவயது காலத்தில் அவரது சார்புத்துவ அரசியாக செயல்பட்டார்.
இதனையும் காண்க
[தொகு]- கோல்ஹாப்பூர் அரசு
- நாக்பூர் அரசு
- சதாரா அரசு
- தஞ்சாவூர் மராத்திய அரசு
- மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jadhav, Bhagyashree M (1998). "Ch. 5 - His Contribution to Maratha History". Dr. Appasaheb Pawar a study of his life and career. Shivaji University. p. 224.