பிரதாப் சிங், சதாரா
தோற்றம்
| பிரதாப் சிங் | |
|---|---|
| சதாராவின் மன்னர், மராத்தியப் பேரரசு | |
| அரசுப்பிரதிநிதி | 3 மே 1808 – 1818 |
| முன்னிருந்தவர் | சதராவின் இரண்டாம் சாகு |
| பின்வந்தவர் | பதவி இறக்கம் |
| சதாரா இராச்சியம் | |
| ஆட்சிக்காலம் | 1818 – 5 செப்டம்பர் 1839 |
| முன்னிருந்தவர் | புதிய பதவி |
| பின்வந்தவர் | ராஜா சாகாஜி |
| மரபு | போன்சலே |
| தந்தை | இரண்டாம் சாகு |
| தாய் | கிரிஜாபாய் போன்சலே |
| பிறப்பு | 18 சனவரி 1793 அஜின்கியாத்திரா கோட்டை, சதாரா, (தற்கால மகாராட்டிரா மாநிலம், இந்தியா) |
| இறப்பு | 14 அக்டோபர் 1847 (அகவை 54) வாரணாசி, பிரித்தானிய கிழக்கிந்தியா (தற்கால வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா) |
| சமயம் | இந்து சமயம் |
பிரதாப் சிங் போன்சலே (Pratap Singh Bhonsle) (18 சனவரி 1793 – 14 அக்டோபர் 1847) மராத்தியப் பேரரசின் இறுதி மன்னர் ஆவார். இவர் மராத்திய பேரரசை கிபி 1808 முதல் 1819 முடிய 11 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர்கள் இவரை பதவி நீக்கம் செய்யும் வரை சதரா இராச்சியத்தை 1839 முடிய ஆட்சி செய்தார். [1]
பேரரசர் சிவாஜியின் போன்சலே குல வழித்தோன்றலான இவர், [2] சதாரா இராச்சியத்தை ஆண்ட மன்னர் இரண்டாம் சாகுவின் மூத்த மகன் ஆவர். 1839-இல் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர்களால் மன்னர் பதவி நீக்கப்பட்ட பிரதாப் சிங், ஆங்கிலேயர்கள் வழங்கிய ஓய்வூதியத்தை கொண்டு, தன் இறுதிநாள் வரை வாரணாசியில் வாழ்ந்து முடித்தார். இவருக்குப் பின் இவரது சகோதரர் அப்பா சாகிப் என்பவர் இராஜா சாகாஜி எனும் பெயருடன் சதாரா இராச்சியத்தை ஆண்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kulkarni, Sumitra (1995). The Satara Raj, 1818-1848: A Study in History, Administration, and Culture. Mittal Publications. pp. 21–24. ISBN 978-8-17099-581-4.
- ↑ Sarkar, Jadunath (1992). Shivaji and His Times (in ஆங்கிலம்). Orient Longman. ISBN 9788125013471.
மேலும் படிக்க
[தொகு]- Naregal, Veena (2013). "The Mutiny in Western India: The 'Marginal' as Regional Dynamic". In Bates, Crispin (ed.). Mutiny at the Margins: New Perspectives on the Indian Uprising of 1857. Vol. 1. SAGE Publications India. pp. 169–188. ISBN 978-8-13211-336-2.
