சிவனேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவனேரிக் கோட்டையின் நுழைவாயில்

சிவனேரிக் கோட்டை (Shivneri Fort) என்பது வரலாற்றுப் புகழ் மிக்க ஓர் இராணுவக் கோட்டை. இந்தக் கோட்டை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவிற்கு 60 கிலோமீட்டர் வடக்கிலுள்ள, ஜூன்னார் என்னும் இடத்தில் உள்ளது.

சிவாஜி (பேரரசன்) இங்கு 1630, பெப்ரவரி 19 இல் பிறந்தார்[1]. அக்கோட்டையின் பெண் தெய்வமான ஷிவை என்பதன் நினைவாக சிவா என்று பெயரிடப்பட்டார். இங்கு ஜிஜாபாய்க்கும், பேரரசர் சிவாஜிக்கும் சிலைகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவனேரி&oldid=2970165" இலிருந்து மீள்விக்கப்பட்டது