இரத்னகிரி கோட்டை, மகாராட்டிரம்
இரத்னகிரி கோட்டை | |
---|---|
பகுதி: கொங்கண் கடற்கரை | |
இரத்தினகிரி மாவட்டம், மகாராட்டிரம் | |
இரத்னகிரி கோட்டையின் நுழைவாயில் | |
ஆள்கூறுகள் | 16°59′46.3″N 73°16′13″E / 16.996194°N 73.27028°E |
வகை | கடற்கரைக் கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்திய அரசு |
மக்கள் அனுமதி |
அனுமதியுண்டு |
நிலைமை | இடிந்த நிலை |
இட வரலாறு | |
கட்டிடப் பொருள் |
செம்புரைக்கல் |
உயரம் | 200 அடி. |
இரத்னகிரி கோட்டை (Ratnagiri Fort) இரத்னதுர்க் கோட்டை' அல்லது 'பகவதி கோட்டை' என்றும் அழைக்கப்படும் இது மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோட்டையாகும். இந்த கோட்டையின் உள்ளே பகவதி கோயில் இருப்பதால் இது முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது.
வரலாறு
[தொகு]இந்த கோட்டை பாமினி காலத்தில் கட்டப்பட்டது. 1670-இல் மராட்டிய மன்னர் சிவாஜி பிஜப்பூரின் சுல்தானிடமிருந்து கோட்டையை வென்றார்.[1] மன்னர் சிவாஜி இரண்டு பாதுகாப்புக் கோபுரங்களைக் கட்டினார். ஒன்று தெற்கிலும் மற்றொன்று பழைய நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலும் உள்ளது. 1750-1755 இல் மராட்டிய தளபதி கனோஜி ஆங்கரே என்பவரால் கோட்டையின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டது. பேஷ்வா ஆட்சியின் போது (1755-1818) தோண்டு பாஸ்கர் பிரதிநிதி கோட்டையில் சில சிறிய பழுதுகளை சரி செய்தார்.[2] பின்னர் 1818 இல் ஆங்கிலேயர்களால் கோட்டை கைப்பற்றப்பட்டது.[3] கோவில் 1950 இல் புதுப்பிக்கப்பட்டது.
அணுகல்
[தொகு]இரத்தினகிரி நகரத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் கோட்டை உள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலுக்கு ஒரு அகலமான சாலை செல்கிறது. கோட்டையைச் சுற்றி வர ஒரு மணி நேரம் ஆகும்.
பார்க்க வேண்டிய இடங்கள்
[தொகு]கலங்கரை விளக்கம் கோட்டையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ளது. கோட்டையின் உள்ளே பகவதி கோவில், குளம் மற்றும் கிணறு உள்ளது. கோட்டைக்கு கீழே ஒரு குகை உள்ளது. ரெடே புருஜ் அனைத்து கோட்டைகளிலும் வலுவானது ஆகும்.
இதனையும் பார்க்கவும்
[தொகு]- இந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல்
- கனோஜி ஆங்கரே
- மராத்தியர்
- மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்
- முகலாய-மராத்தியப் போர்கள்
- இந்திய படைத்துறையின் வரலாறு
குறிப்புகள்
[தொகு]- ↑ "Ratnadurg, Sahyadri,Shivaji,Trekking,Marathi,Maharastra". Trekshitiz.com. Archived from the original on 5 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 December 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Pathak. Maharashtra State Gazetteers- Ratnagiri District. Government of Maharashtra.
- ↑ Trekshitiz. "Tringalwadi". www.trekshitiz.com. Trekshitiz. Archived from the original on 13 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)