ஜூன்னார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூன்னார்
நகரம்
ஜூன்னார் நகரம்
ஜூன்னார் நகரம்
ஜூன்னார் is located in இந்தியா
ஜூன்னார்
ஜூன்னார்
ஜூன்னார் is located in மகாராட்டிரம்
ஜூன்னார்
ஜூன்னார்
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தில் ஜூன்னார் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°12′N 73°53′E / 19.2°N 73.88°E / 19.2; 73.88ஆள்கூறுகள்: 19°12′N 73°53′E / 19.2°N 73.88°E / 19.2; 73.88
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புணே
ஏற்றம்689
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்25,315
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்410502
இணையதளம்Junnar Tourism Website

ஜூன்னார் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்று. இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின், புனே மாவட்டத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இதுவே ஜூன்னார் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். மேலும் இது சக்யத்ரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மும்பையிலிருந்து 100கி.மீ கிழக்கிலும், புனேவில் இருந்து 94 கி.மீ வடக்கிலும் அமைந்துள்ளது. ஜூன்னார் அருகே சிவனேரி கோட்டை மற்றும் மன்மோடி குகைகள், துளஜா குகைகள், லென்யாத்திரி குகைகள் போன்ற பௌத்த குடைவரைக் கோயில்களும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 17 வார்டுகள் கொண்ட ஜூன்னார் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 25,315 ஆகும். அதில் ஆண்கள் 13,066, பெண்கள் 12,249 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.40% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 60.91%, இசுலாமியர் 32.62% மற்றவர்கள் 3.60% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Junnar Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூன்னார்&oldid=2925953" இருந்து மீள்விக்கப்பட்டது