கேத் தாலுகா
கேத் தாலுகா | |
---|---|
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் கேத் தாலுகாவின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
தலைமையிடம் | இராஜகுரு நகர் |
பெரிய கிராமங்கள் | 98 |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | திலீப் மொகிதே[1] |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,50,116 |
Demographics | |
• பாலின விகிதம் | 927:1000 |
கேத் தாலுகா (Khed or Rajgurunagar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 14 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[2] இதன் நிர்வாகத் தலைமையிடமான கேத் நகரத்திற்கு, 1960-இல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சிவராம் ராஜகுரு நினைவாக இதற்கு 1960-இல் இராஜகுரு நகர் எனப்பெயரிடப்பட்டது.[3]
கேத் தாலுகாவில் ஆளந்தி நகராட்சியும், 5 கணக்கெடுப்புச் சிற்றூர்களும், 185 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கேத் வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 4,50,116 ஆகும். அதில் ஆண்கள் 237,868 மற்றும் 212,248 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 892 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 56102 (12%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 80.77%. ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 30,409 மற்றும் 49,291 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 4,19,352 (93.17%), இசுலாமியர் 11,724 (2.6%), பௌத்தர்கள் 14,715 (3.27%), சமணர்கள் 2,557 (0.57%) மற்றும் பிறர் 0.39% ஆகவுள்ளனர்.[5] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Khed Aalandi Vidhan Sabha". elections. பார்க்கப்பட்ட நாள் 19 May 2015.
- ↑ "Maps of Tahsils in Pune District". Archived from the original on 10 March 2010.
- ↑ Rajgurunagar (Khed)
- ↑ Khed Taluka – Pune
- ↑ Khed Taluka Population, Caste, Religion Data - Pune district, Maharashtra
வெளி இணைப்புகள்
[தொகு]- "Delimitation of PC and AC - 2004 Khed Taluka, Pune District, Maharashtra (Administrative Units)". Pune District. Archived from the original on 2013-05-09.