மாவல் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாவல் தாலுகா
தாலுகா
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் மாவல் தாலுகாவின் அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் மாவல் தாலுகாவின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே மாவட்டம்
தலைமையிடம்மாவல்
அரசு
 • மக்களவைத் தொகுதிமாவள் மக்களவைத் தொகுதி
 • சட்டமன்றத் தொகுதிமாவல் சட்டமன்றத் தொகுதி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,77,559
புனே மாவட்டத்தின் 15 வருவாய் வட்டங்கள்

மாவல் தாலுகா (Maval taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 14 தாலுக்காக்களில் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்த இத்தாலுகா லோணாவ்ளா மற்றும் தலேகான் தபாதே நகராட்சிகளும், குஷ்கான், வடாகான மற்றும் கட்கலே சிற்றூர்களும் மற்றும் 181 வருவாய் கிராமகளும் கொண்டது.[1]

இத்தாலுகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த புகழ்பெற்ற பௌத்தம் தொடர்பான பாஜா குகைகள், கர்லா குகைகள் மற்றும் பேட்சே குகைகள் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மாவல் வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 3,77,559 ஆகும். அதில் ஆண்கள் 198,487 மற்றும் 179,072 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 902 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 46644 (12%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.38% ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 36,325 மற்றும் 29,208 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 323,261 (85.62%), இசுலாமியர் 16,551 (4.38%), பௌத்தர்கள் 26,898 (7.12%), சமணர்கள் 4,788 (1.27%), கிறித்தவர்கள் 3,357 (0.89%) மற்றும் பிறர் 0.71% ஆகவுள்ளனர்.[2] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவல்_தாலுகா&oldid=3718361" இலிருந்து மீள்விக்கப்பட்டது