உள்ளடக்கத்துக்குச் செல்

தௌந்து

ஆள்கூறுகள்: 18°27′47″N 74°34′44″E / 18.46306°N 74.57889°E / 18.46306; 74.57889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தௌந்து
தௌந்து is located in மகாராட்டிரம்
தௌந்து
தௌந்து
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் தௌந்து நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°27′47″N 74°34′44″E / 18.46306°N 74.57889°E / 18.46306; 74.57889
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
ஏற்றம்
514 m (1,686 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,02,566
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
413801 , 413802
தொலைபேசி குறியீடு02117
வாகனப் பதிவுMH12,42
இணையதளம்www.punediary.com/html/Daund.html

தௌந்து (Daund) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம், தௌந்து தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் மற்றும் நகராட்சி ஆகும். சென்னையிலிருந்து புனே செல்வதற்கு முன் அமைந்த தௌந்து தொடருந்து நிலையம் பெரியதாகும். தௌந்து நகரம் பீமா ஆற்றின் கரையில் உள்ளது. புனே நகரத்திற்கு கிழக்கில் 82 கிலோ மீட்டர் தொலைவில் தௌந்து நகரம் உள்ளது.

புவியியல்

[தொகு]

தௌந்து நகரம் 18°28′N 74°36′E / 18.47°N 74.6°E / 18.47; 74.6 பாகையில், தக்காண பீடபூமியின் மேற்கில், கடல் மட்டத்திலிருந்து 514 மீட்டர் உயரத்தில், பீமா ஆற்றுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்கே 80 கி.மீ. தொலைவில் உள்ளது. தௌந்து நகரத்திற்கு தென்கிழக்கில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உஜ்ஜானி நீர்த்தேக்கம் உள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

தௌந்து நகரத்திற்கு வெளியே கோதுமை, கரும்பு, ஆரஞ்சு, இனிப்பு எலுமிச்சைப் பழம் பயிரிடப்படுகிறது. மேலும் சர்க்கரைத் தொழிற்சாலைகளும் உள்ளது. தௌந்து நகரத்தில் சிப்லா போன்ற மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.

போக்குவரத்து

[தொகு]

தொடருந்து நிலையம்

[தொகு]
தௌந்து தொடருந்து நிலையம்

மத்திய இந்தியா, சென்னை, பெங்களூரு, புனே வழியாக மும்பை செல்லும் அனைத்து தொடருந்துகளும் தௌந்து சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.[1] மேலும் புனேவிலிருந்து அகமத்நகர் செல்லும் தொடருந்துகள் தௌந்து வழியாகச் செல்கின்றன.

புனே புறநகர் ரயில்வேயின் மின்சாரத் தொடருந்துகள், புனேவிலிருந்து தௌந்து வழியாக பாராமதி வரை செல்கிறது

சாலைகள்

[தொகு]

தௌந்து நகரத்திற்கு 9 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 9 கடந்து செல்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌந்து&oldid=4253770" இலிருந்து மீள்விக்கப்பட்டது