அவுந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 18°31′20.68″N 73°50′54.94″E / 18.5224111°N 73.8485944°E / 18.5224111; 73.8485944

Aundh Road, Pune - panoramio (4).jpg

அவுந்து (Aundh) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாநகராட்சிக்கு வடமேற்கில் அமைந்த பகுதியாகும். அவுந்து பகுதி நெஞ்சக நோய் (Chest Hospital) மருத்துவமனையால் நன்கறியப்படுகிறது. 1995-ஆம் ஆண்டு முதல் அவுந்து பகுதி வளர்ச்சியடைந்து தற்போது புனே நகரத்தின் மத்தியப் பகுதியாக காட்சியளிக்கிறது. இதனருகில் புனே கண்டோன்மென்ட், கட்கி, சாங்கவி, புனே பல்கலைக்கழகம், ஹிஞ்சவடி இராஜிவ் காந்தி கணினி தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது.

1817-இல் கிர்கி சண்டையின் போது அவுந்து பகுதி ஒரு கிராமப்புறமாக இருந்ததது. அவுந்து தற்போது அவுந்து, புனே நகரத்தின் ஒரு முக்கிய நகர்புறப் பகுதியாக மாறியுள்ளது.

அவுந்து பகுதி மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை மற்றும் சிவாஜி நகர் தொடருந்து நிலையம் அருகே அமைந்துள்ள்தால், புனே, பிம்பிரி-சிஞ்ச்வடு தானே மற்றும் மும்பை போன்ற நகரங்களில் பணி செய்பவர்கள் அவுந்து பகுதியில் அதிகம் குடியிருக்கின்றனர்.

அவுந்து பகுதியின் பரிஹார் சௌக்கில் அமைந்த வெஸ்ட் என்ட் பகுதியில் 67,500 சதுர அடி (17 ஏக்கர்) பரப்பளவில் அமைந்த 250 அடுக்கு மாடி வீடுகள், 5 நட்சத்திர ஹில்டன் ஹோட்டல், ஐமேகஸ் திரையரங்கத்துடன் கூடிய வணிக வளாகம் அமைந்துள்ளது.[1]

சீர்மிகு புனே நகரத் திட்டத்தின் கீழ் அவுந்து பகுதியின் சாலைகள் சர்வதேச தரத்துடன் மாற்றி அமைக்கப்படுகிறது. [2]

அவுந்து பகுதிகள்[தொகு]

அவுந்து பழைய அவுந்து மற்றும் புது அவுந்து பகுதி என இரண்டாக உள்ளது. புது அவுந்து பகுதியில் அடுக்கு மாடி வளாகங்கள் அதிகம் உள்ளது. முளா ஆறு பாயும் அவுந்து புறநகர் பகுதியில் சாங்கவி, புனே பல்கலைக்கழகம், மகாராட்டிரா ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது.

மருத்துவ மனைகள்[தொகு]

  • சாஸ்வத் மருத்துவமனை
  • விட்டல் லைப் மெடிபாயிண்ட் மருத்துவமனை
  • இனாம்தார் இதய மருத்துவமனை
  • சிரேயஸ் மருத்துவமனை
  • அக்மி பல் மருத்துவமனை
  • சிரத்தா மருத்துவமனை
  • மான் மருத்துவமனை
  • எய்ம்ஸ் அவுந்து மருத்துவமனை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுந்து&oldid=3193863" இருந்து மீள்விக்கப்பட்டது