டாட்டா மோட்டார்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாட்டா மோட்டார்ஸ் லிமிடெட்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1945
நிறுவனர்(கள்)ஜே. ஆர். டி. டாட்டா
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா[1]
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்ரத்தன் டாட்டா, தலைவர்
ரவி காந்த், துணை தலைவர்
தொழில்துறைதானுந்துகள்
உற்பத்திகள்
  • Automobiles
  • Engines
சேவைகள்பொறியியல் வடிவமைப்பு அவுட்சோர்சிங்
வருமானம் 1,23,133 கோடி (US$16 பில்லியன்) (2011)[2]
நிகர வருமானம் 9,274 கோடி (US$1.2 பில்லியன்) (2011)[2]
மொத்தச் சொத்துகள் $20.192 பில்லியன் (2010)[3]
மொத்த பங்குத்தொகை $2.224 பில்லியன் (2010)[3]
பணியாளர்50,000 (2010)[3]
தாய் நிறுவனம்டாட்டா குழுமம்
துணை நிறுவனங்கள்
இணையத்தளம்TataMotors.com

டாட்டா மோட்டார்ஸ் லிமிடெட் (தேபசTATAMOTORS , முபச500570 , நியாபசTTM, நாசுடாக்TTM) இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு வாகன நிறுவனம். இந்நிறுவனம் டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் 2010-11 ல் இந்திய ரூபாய் 9,274 கோடி வருவாய் ஈட்டியதன் மூலம், இந்தியாவின் மிக பெரிய கார் நிறுவனமானது. டாட்டா மோட்டார்ஸ் சிறிய, நடுத்தர கார் மற்றும் பயன்பாட்டு வாகனம் பிரிவுகளில் தயாரிப்புகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் உலகின் நான்காவது பெரிய டிரக் உற்பத்தியாளராகவும், மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளராகவும் உள்ளது. 50,000 தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். டாட்டா மோட்டார்ஸ் 1954 முதல் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்துள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் நியூயார்க் பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. 2005 ல் டாட்டா மோட்டார்ஸ் இந்திய ருபாய் 320 பில்லியன் மேல் ஆண்டு வருவாய் ஈட்டியது. இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. 2010 இல் எகனாமிக் டைம்ஸ் மற்றும் வர்த்தக நிதியம் நடத்திய ஒரு வருடாந்திர கணக்கெடுப்பில் 'இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்' என்ற பட்டத்தை டாட்டா மோட்டார்ஸ் பெற்றது.

டாட்டா மோட்டார்சின் தானுந்து உற்பத்தி மற்றும் உருவாக்கம் ஜாம்ஷெட்பூர், பந்த் நகர், லக்னோ, அகமதாபாத், சனந்த், தர்வாத் மற்றும் புனே போன்ற இந்திய நகரங்களிலு, அர்ஜென்டீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது.

டாட்டா மோட்டார்ஸ், டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாகும்; டாட்டா குழுமம் டாட்டா சன்ஸ் நிறிவனம் மூலம் டாட்டா மோட்டார்சின் பங்கு மேலாண்மை செய்கிறது.

வாங்கிய நிறுவனங்கள்[தொகு]

  • 2004 ல் டாட்டா மோட்டார்ஸ் தென் கொரியாவின் டேவூ டிரக் உற்பத்தி பிரிவை வாங்கியது. தற்போது இது டாட்டா டேவூ என அழைக்கப்படுகிறது.
  • 2005 இல், டாட்டா மோட்டார்ஸ் ஆர்கோனீஸ் ஹிஸ்பானோ கர்ரோசெரா நிறுவனத்தின் 21% பங்குகளை வாங்கியது. இதனால் அந்நிறுவனத்தின் கட்டுப்படுத்தும் உரிமையை பெற்றது
  • 2008 இல், டாட்டா மோட்டார்ஸ், டெய்ம்லர் மற்றும் லான்செஸ்டர் வர்த்தக பெயர் உள்ளடக்கிய பிரிட்டிஷ் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), நிறுவனத்தை கையகப்படுத்தியது

துணை நிறுவன பிராண்டுகள்[தொகு]

Hispano at the 2008 FIAA in Madrid

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-01-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-17 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 "2010 Form 10-K, Tata Motors Limited". hoovers.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_மோட்டார்ஸ்&oldid=3620362" இருந்து மீள்விக்கப்பட்டது