டாட்டா குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாட்டா குழுமம்
Tata Group
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1868
நிறுவனர்(கள்)ஜாம்செட்ஜி டாட்டா
தலைமையகம்மும்பாய், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகளாவிய
முதன்மை நபர்கள்ரத்தன் டாட்டா
(தலைவர்)[1]
தொழில்துறைகுழுமம் (நிறுவனம்)
உற்பத்திகள்Steel
Automobiles
Telecommunications
Software
Hotels
Consumer goods
வருமானம் US$ 72.5 billion (Feb 2009)[2]
மொத்தச் சொத்துகள் US$ 51.7 billion (2009)
பணியாளர்363,039 (2008-09)
துணை நிறுவனங்கள்Tata Steel
Corus Steel
Tata Motors
Tata Consultancy Services
Tata Technologies
Tata Tea
Titan Industries
Tata Power
Tata Communications
Tata Teleservices
Tata AutoComp Systems Limited
Taj Hotels
இணையத்தளம்Tata.co.in

டாட்டா குழுமம் (இந்தி: टाटा समूह) என்பது பெரும்திரளாகப் பரவியுள்ள பன்னாட்டு நிறுவனமாகும், இந்நிறுவனம் இந்தியாவின் மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டது. சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், டாட்டா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாகும். மேலும் இந்நிறுவனம் உலகில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3][4] இந்நிறுவனம் இரும்பு, வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல்தொடர்பு, மின்சாரம், தேயிலை மற்றும் மருத்துவ வசதி ஆகிய துறைகளில் பங்குகளைக் கொண்டுள்ளது. டாட்டா குழுமம் ஆறு கண்டங்களில் 85 நாடுகளுக்கும் மேலாக தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, மேலும் அதன் நிறுவனங்கள் 80 நாடுகளுக்கு அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன. டாட்டா குழுமமானது அதன் ஏழு வணிகப் பிரிவுகளில் 114 நிறுவனங்களையும் துணைநிறுவனங்களையும் கொண்டுள்ளது [5], அவற்றில் 27 வெளிப்படையாக பட்டியலிடப்பட்டுள்ளன. டாட்டா குழுமத்தின் உரிமையில் 65.8% அறக்கட்டளைகளில் மூலம் நடத்தப்படுகின்றன.[6] டாட்டா ஸ்டீல், கோரஸ் ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா டெக்னாலஜீஸ், டாட்டா டீ, டைட்டன் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா பவர், டாட்டா கம்யூனிகேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் தாஜ் ஹோட்டல்ஸ் உள்ளிட்டவை இந்தக் குழுமத்தின் முக்கிய பங்குவகிக்கின்ற நிறுவனங்கள் ஆகின்றன.

இந்தக் குழுமமானது அதன் நிறுவனர் ஜாம்சேத்ஜி டாட்டாவின் பெயரைக் கொண்டுள்ளது, இவரது குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் குழுமத்தின் நிலையான தலைவராக இருக்கின்றார். டாட்டா குழுமத்தின் தற்போதைய தலைவர் ரத்தன் டாட்டா, இவர் ஜே. ஆர். டி. டாட்டாவிடமிருந்து 1991 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுள்ளார். மேலும் உலகமய காலகட்டத்தில் இவர் தற்போது முக்கிய சர்வதேச வர்த்தகப் புள்ளிகளில் ஒருவராக உள்ளார்.[7] நிறுவனமானது தற்போது குடும்ப வாரிசுகளின் அடிப்படையில் அதன் ஐந்தாம் தலைமுறையில் உள்ளது.[8]

ரெப்யூடேஷன் இன்ஸ்டியூட் மூலமான 2009 ஆண்டின் கருத்துக்கணிப்பில், உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் 11 ஆவது இடத்தை டாட்டா குழுமத்திற்கு வழங்கியது.[9] அந்த கருத்துக்கணிப்பில் 600 உலகளாவிய நிறுவனங்கள் அடங்கியிருந்தன.

வரலாறு[தொகு]

1868 ஆம் ஆண்டில் ஜேம்சேட்ஜி நஸ்ஸர்வன்ஜி டாட்டா அவர்கள் ஒரு வர்த்தக நிறுவனத்தை அபின் வர்த்தகத்திற்காக மும்பையில் நிறுவியபோது, டாட்டா குழுமத்தின் தொடக்கம் இருந்ததாக தடமறியமுடியும்.[10] அதனைத் தொடர்ந்து 1877 ஆம் ஆண்டில் நாக்பூர் நகரில் எம்பிரஸ் மில்ஸை தொடங்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டில் வர்த்தகத்திற்காக பாம்பேயில் தாஜ் மஹால் ஹோட்டல் திறக்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டில் ஜாம்சேட்ஜி இறந்த பின்னர் அவரது மூத்த மகன் சர் தோரப் டாட்டா அவர்கள் குழுமத்தின் தலைவரானார். அவரது பொறுப்பின் கீழ், இந்தக் குழுமமானது இரும்பு உற்பத்தியிலும் (1905) மற்றும் ஹைட்ராலிக் மின் உற்பத்தியிலும் (1910) முதலீடு செய்தது. 1934 ஆம் ஆண்டில் தோரப் டாட்டா இறந்த பிறகு, நவ்ரோஜி சக்லத்வாலா அவர்கள் 1938 ஆம் ஆண்டி வரையில் குழுமத்திற்குத் தலைமையேற்றார். அவர் ஜே.ஆர்.டி டாட்டா அவர்களால் தோற்கடிக்கப்பட்டார். டாட்டா கெமிக்கல்ஸ் (1939), டாட்டா மோட்டார்ஸ் மற்றும் டாட்டா இண்டஸ்ட்ரீஸ் (இரண்டும் 1945), வோல்டாஸ் (1954), டாட்டா டீ (1962), டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (1968) மற்றும் டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் (1984) உள்ளிட்ட அவரது நிறுவுதல்களுடன் இந்தக் குழுமமானது குறிப்பிடத்தகுந்த அளவில் விரிவானது. 1991 ஆம் ஆண்டில் ஜே.ஆர்.டி டாட்டா வழியில் ரத்தன் டாட்டா குழுமத்தின் கடமைமிக்க தலைவரானார்.[11]

நிறுவனங்கள்[தொகு]

பொறியியல்[தொகு]

1[தொகு]

  • டி.ஏ.எல் (TAL) மேனுஃபேக்ட்சரிக் சொல்யூசன்ஸ் நிறுவனம் போயிங் 787 விமானங்களில் நிறுவப்பட்டுள்ள டைட்டேனியம் கலப்பு தள விட்டங்களை ஏற்றுமதிசெய்கின்றது.[12]
  • டாட்டா ஆட்டோகம்ப் சிஸ்டம்ஸ் லிமிடேட் (TACO) மற்றும் அதன் துணைநிறுவனங்கள், தானியங்கி பாகங்கள் உற்பத்தி
  • டாட்டா மோட்டார்ஸ் (முன்னதாக டாட்டா எஞ்ஜினியரிங் மற்றும் லோகமேட்டிவ்ஸ் கம்பெனி லிட். (TELCO) எனப்பட்டது), வணிக வாகனங்கள் (இந்தியாவில் மிகப்பெரியது) மற்றும் பயணிகள் வாகனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியாளர்.
  • ஜாக்குவார் மற்றும் லேண்ட் ரோவர்
  • டாட்டா பிராஜெக்ட்ஸ்
  • டாட்டா கன்சல்ட்டிங் எஞ்ஜினியரிங் லிமிட்டேட்
  • டெல்கோ கன்ஸ்ட்ரக்சன் எக்யூப்மெண்ட் கம்பெனி
  • டி.ஆர்.எஃப்(TRF) பல்க் மெட்டீரியல் ஹேண்ட்லிங் எக்யூப்மெண்ட் & சிஸ்டம்ஸ் அண்ட் போர்ட் & யார்டு எக்யூப்மெண்ட்ஸ்.
  • வோல்டாஸ், நுகர்வோர் மின்னணு நிறுவனம்
  • வோல்டாஸ் குளோபல் எஞ்ஜினியரிங் சென்டர் பரணிடப்பட்டது 2017-09-24 at the வந்தவழி இயந்திரம்

2[தொகு]

Sl. No பெயர் ஆங்கில பெயர் இணையதளம் தொழில் பொருட்கள் & பணிகள்
1 டி.ஏ.எல் தயாரிப்பு தீர்வுகள் நிறுவனம் Tal Manufacturing Solutions Limited hhttp://www.tal.co.in/
2 டாடா வாகனம் பாகங்கள் பணிகள் தனியார் நிறுவனம் Tata AutoComp Systems Private Limited http://www.tacogroup.com/ பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம்

மின்சக்தி[தொகு]

  • டாட்டா பவர் என்பது மிகப்பெரிய தனியார் பிரிவு மின்சக்தி நிறுவனங்களில் ஒன்று. இது இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பை மாநகருக்கும் புதுடில்லியின் பல பகுதிகளுக்கும் மின்சக்தி வழங்குகின்றது.

இரசாயனம்[தொகு]

  • ராலிஸ் இந்தியா
  • டாட்டா பிக்மெண்ட்ஸ்
  • இந்தியாவின் மும்பை மாநகரைத் தலைமையிடமாகக் கொண்ட டாட்டா கெமிக்கல்ஸ், இது இந்தியாவில் மிகப்பெரிய ஒற்றை சோடா சாம்பல் தயாரிப்புத் திறன் ஆலையைக் கொண்டிருக்கின்றது. 2006 ஆம் ஆண்டிலிருந்து டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனமானது, கென்யா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்ட இங்கிலாந்து அடிப்படை ராசாயன நிறுவனமான ப்ரூன்னர் மோண்ட் என்ற நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் பெங்களூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட அட்வினஸ் தெருபெயோட்டிக்ஸ் நிறுவனமானது, மருந்துகள், விவசாயம் மற்றும் உயிர்தொழில்நுட்பத் துறைகளுக்கான மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்பு ஆகும்.

சேவைகள்[தொகு]

  • இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி
  • டாட்டா ஹவுசிங் டெவலெப்மெண்ட் கம்பெனி லிட். (THDC)
  • டாட்டா ஏ.ஐ.ஜி (TATA AIG) பொதுக் காப்பீடு
  • டாட்டா ஏ.ஐ.ஜி (TATA AIG) ஆயுட்காப்பீடு
  • டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிட்டேட்
  • டாட்டா சொத்து நிர்வாகம்
  • டாட்டா நிதி சேவைகள்
  • டாட்டா கேபிட்டல்
  • டாட்டா முதலீட்டு நிறுவனம்
  • டாட்டா தர மேலாண்மை சேவைகள்
  • டாட்டா ஷேர் ரெஜிஸ்டரி
  • தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான டாட்டா ஸ்டேட்டர்ஜிக் மேனேஜ்மெண்ட் குரூப்.
  • டாட்டா சர்வீசஸ்

நுகர்வோர் தயாரிப்புகள்[தொகு]

  • டாட்டா உப்பு, ஐ-சக்தி உப்பு, டாட்டா உப்பு லைட்
  • எய்ட் ஓ கிளாக் காஃபி
  • டாட்டா செராமிக்ஸ்
  • இன்பினிட்டி ரீட்டெயில்
  • டாட்டா டீ லிமிட்டேட் நிறுவனம் தேயிலை மற்றும் தேயிலைத் தயாரிப்பு நிறுவனங்களில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் ஆகும். மேலும் இந்நிறுவனம் ஐரோப்பாவில் முதன்மையாக விற்பனையாகும் தேயிலை பிராண்டான டெட்லேவை சொந்தமாகவும் கொண்டுள்ளது.
  • டைட்டன் கடிகாரங்களின் உற்பத்தியாளரான டைட்டன் இண்டஸ்ட்ரீஸ்
  • ட்ரெண்ட் (வெஸ்ட்சைடு)
  • டாட்டா ஸ்கை
  • டாட்டா இண்டர்நேஷனல் லிட் - தோல் தயாரிப்புகள் பிரிவு
  • தனிஸ்க் ஜூவல்லரி
  • ஸ்டார் பஜார்

தகவல் அமைப்புகள் மற்றும் தகவல்தொடர்புகள்[தொகு]

  • கம்ப்யூட்டேஷனல் ரிசர்ஜ் லேபரட்டரீஸ்
  • இன்கேட் (INCAT)
  • நெல்கோ (Nelco)
  • நெலிட்டோ சிஸ்டம்ஸ்
  • டாட்டா பிசினஸ் சப்போர்ட் சர்வீசஸ் (முன்னர் சேர்விஸ்சோல்)
  • டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் லிட். (டி.சி.எஸ் (TCS)) என்பது 2008-09 ஆம் நிதியாண்டில் 6 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருமானத்தைக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம்.
  • டாட்டா எல்க்ஸி என்பது டாட்டா குழுமத்தின் மற்றொரு மென்பொருள் மற்றும் தொழிற்துறை வடிவமைப்பு நிறுவனம் ஆகும். இது பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் அடிப்படையானது. இது இந்தியாவின் அனிமேஷன் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று.
  • டாட்டா இண்டராக்டிவ் சிஸ்டம்ஸ்
  • டாட்டா டெக்னாலஜீஸ் லிமிட்டேட்
  • டாட்டா டெலிசர்வீசஸ்
  • டாட்டாநெட்
  • டாட்டா கம்யூனிகேஷன்ஸ், முன்னதாக இந்தியாவின் தகவல்தொடர்பு ஜாம்பவானாக இருந்த VSNL ஆகும். இந்நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் VSNL கையகப்படுத்திய டெலிகுளோப் நிறுவனத்தையும் டாட்டா சொந்தமாகக் கொண்டுள்ளது.
  • சி.எம்.சி (CMC) லிமிட்டேட்

டாட்டா வர்த்தகச் சின்னம்[தொகு]

டாட்டாவின் வர்த்தகச் சின்னமானது வோல்ப் ஓலின்ஸ் கன்சல்டன்சியால் வடிவமைக்கப்பட்டது. வர்த்தகச் சின்னமானது குறிப்பிட்ட பாய்மத்தன்மையைக் குறிக்கின்றது; இது அறிவின் நீரூற்றாக இருப்பதையும் காணலாம்; இது மக்கள் பாதுகாப்பைப் பெறக்கூடிய நம்பகமான மரமாக இருக்கும்.

அறப்பணி மற்றும் தேசிய கட்டுமானம்[தொகு]

டாட்டா குழுமம் இந்தியாவில் பல தரமான ஆராய்ச்சி, கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களை தொடங்கியும் அவற்றிற்கு நிதியுதவி அளித்தும் உதவிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இது முன்னணியான மற்றும் அளவுகடந்த மதிப்புமிக்க அறப்பணி செய்யும் பெருநிறுவனங்களில் ஒன்றாக உள்ளது[13][14]. 2007 ஆம் ஆண்டில் நீண்ட காலமாக அறப்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டத்தைக் கௌரவப்படுத்துவதற்காக டாட்டா குழுமத்திற்கு அறிப்பணிக்கான கார்னேகி விருது அளிக்கப்பட்டு கௌரப்படுத்தப்பட்டது[15]. டாட்டா குழுமத்தால் நிறுவப்பட்ட பல கல்விநிறுவனங்களாவன:

  • டாட்டா இன்ஸ்டியூட் ஆப் பன்டமெண்டல் ரிசர்ஜ்
  • டாட்டா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்சஸ்
  • இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ்
  • நேஷனல் செண்டர் ஃபார் பெர்பார்மிங் ஆர்ட்ஸ்
  • டாட்டா மேனேஜ்மெண்ட் டிரெய்னிங் செண்டர்
  • டாட்டா மெமோரியல் மருத்துவமனை
  • டாட்டா அறக்கட்டளைகள், டாட்டாவின் மகன்களின் வணிகக் குழுமத்தின் தலைமையினால் நடத்தப்படுகின்ற அறப்பணிகளுக்கான அமைப்புகளின் குழுமம்[16]
  • ஜே.ஆர்.டி டாட்டா எக்கோடெக்னாலஜி மையம்
  • எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் (முன்னர் டாட்டா எனர்ஜி அண்ட் ரிசர்ஜ் இன்ஸ்டியூட் என்று அறியப்பட்டது) - இது புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி துறையில் ஆராய்ச்சி விளைவுகளுக்காக முழுமையாக ஒதுக்கப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனம் (NPO) ஆகும்.

முழுமையான பட்டியல் நிறுவன வலைத்தள பரணிடப்பட்டது 2013-09-08 at the வந்தவழி இயந்திரம் த்தில் கிடைக்கின்றது.

டாடாவின் கையகப்படுத்தல்கள் மற்றும் இலக்குகள்[தொகு]

  • பிப்ரவரி 2000 - டெட்லே தேயிலை நிறுவனம், $407 மில்லியன்
  • மார்ச் 2004 - டேவூ கமர்சியல் வெஹிக்கிள் நிறுவனம், $102 மில்லியன்
  • ஆகஸ்ட் 2004 - நாட்ஸ்டீல்ஸ் ஸ்டீல் வணிகம், $292 மில்லியன்
  • நவம்பர் 2004 - டைக்கோ குளோபல் நெட்வொர்க், $130 மில்லியன்
  • ஜூலை 2005 - டெலிகுளோப் இண்டர்நேஷனல் ஹோல்டிங்க்ஸ், $239 மில்லியன்
  • அக்டோபர் 2005 - குட் எர்த் கார்ப்பரேஷன்
  • December 2005 - மில்லேனியம் ஸ்டீல், தாய்லாந்து, $167 மில்லியன்
  • டிசம்பர் 2005 - ப்ரூன்னர் மோண்ட் கெமிக்கல்ஸ் லிமிட்டேட், $120 மில்லியன்
  • ஜூன் 2006 - எய்ட் ஓ'கிளாக் காஃபி, $220 மில்லியன்
  • நவம்பர் 2006 - ரிட்ஸ் கர்ல்டன் போஸ்டன், $170 மில்லியன்
  • ஜன் 2007 - கோரஸ் குரூப், $12 பில்லியன்
  • March 2007 - பூமி ரிசோர்சஸ், $1.1 பில்லியன்
  • April 2007 - கேம்ப்டன் ப்ளேஸ் ஹோட்டல், சான் பிரான்சிஸ்கோ, $60 மில்லியன்
  • பிப்ரவரி 2008 - ஜெனரல் கெமிக்கல் இண்டஸ்ட்ரியல் புராடக்ட்ஸ், $1 பில்லியன்
  • மார்ச் 2008 - ஜாக்குவார் கார்ஸ் மற்றும் லேண்ட் ரோவர், $2.3 பில்லியன்
  • March 2008 - சேர்விப்லெம் SA, ஸ்பெயின்
  • April 2008 - காம்போலெஸா லெப்ரெரோ SA, ஸ்பெயின்
  • மே 2008 - பியாக்கியோ ஏரோ இண்டஸ்ட்ரீஸ் S.p.A., இத்தாலி
  • ஜூன் 2008 - சீனா எண்டர்பிரைஸ் கம்யூனிகேஷன்ஸ், சீனா
  • ஜூன் 2008 - நியோடெல், தென்னாப்பிரிக்கா.
  • அக்டோபர் 2008 - மில்ஜோ க்ரென்லாண்ட் / இன்னோவஸ்ஜோன், நார்வே
  • இமாசிட் இரசாயன நிறுவனம், மொராக்கோ [17]

இலக்குகள்[தொகு]

  • குளோஸ் பிரதர்ஸ் குரூப், $2.9 பில்லியன்
  • ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் ஹோட்டல்ஸ், $2.5 பில்லியன்
  • ஜனவரி 2008 - டி-சிஸ்டம்ஸ் இண்டர்நேஷனல் (டச்சி டெலிகாம் நிறுவனத்தின் ஐ.டி. பிரிவு)

வருவாய்[தொகு]

டாட்டா நிறுவனம் அதன் வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கினை இந்தியாவிற்கு வெளியேயிருந்து பெறுகின்றது.[17]

முரண்பாடுகள் மற்றும் சர்ச்சைகள்[தொகு]

கலிங்காநகர், ஒரிசா[தொகு]

2 ஜனவரி 2006 அன்று, ஒரிசாவின் கலிங்கநகரில் மலைவாழ் கிராமத்தினரின் கூட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். டாட்டா ஸ்டீல் தொழிற்சாலைக்காக வரலாற்றுக் காலம் முதல் தாங்கள் சொந்தமாகக் கொண்டிருந்த நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டுமானத்தை எதிர்த்து கிராமத்தினர் போராடினர். வெட்டுக்காயங்களைக் கொண்ட நிலையில் பல பிணங்கள் அவர்களின் குடும்பங்களுக்குத் திரும்பின. கருத்துக்கூற வேண்டிய நிலையில், இது எதிர்பாராதவிதமாக நடந்த நிகழ்ச்சி என்று டாட்டா அதிகாரிகள் கூறினர். ஆனால் டாட்டா அங்கு தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டத்தைத் தொடரவிருப்பதாகவும் கூறப்பட்டது.[18]

டோ கிமிக்கல்ஸ், போபால் வாயுக்கசிவு பேரிடர்[தொகு]

2006 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் திவாலில் இருந்து காப்பது மற்றும் கார்பைடின் புதிய முதலாளியான டோவ் கெமிக்கல் மூலமாக முன்னேற்றத்திற்கான முதலீடுகள் ஆகிய ரத்தன் டாட்டாவின் சலுகையைக் கண்டு போபால் வாயுக்கசிவு பேரிடரில் தப்பியவர்கள் கடும் கோபமுற்றனர். டாட்டா நிறுவனம் போபாலில் கார்பைடு மூலமான மிகுந்து காணப்படுகின்ற நச்சுக் கழிவுகளை அகற்ற பெருந்தன்மை முயற்சியை வழிநடத்த முனைந்தது. தூய்மைப்படுத்துவதற்காக அமெரிக்கன் எம்.என்.சி இடமிருந்து ரூ. 100 கோடியைப் பெறுவதற்கான கோரிக்கைக்கான டோ கெமிக்கலின் கடனை இந்திய அரசாங்கம் வைத்திருந்த அதே நேரத்தில், நிறுவனத்தின் கடனைத் தக்கவைப்பதற்கான சட்டரீதியான ஏமாற்று வேலையாகவும், இந்தியாவில் டோவ்வின் முதலீடுகளை எளிதாக்கும் நோக்கம் கொண்டதாகவும் டாட்டாவின் சலுகை இருப்பதாக தப்பியவர்களின் குழு கூறியது.[19]

பர்மாவின் இராணுவ ஆட்சிக்கு வழங்குதல்[தொகு]

வன்பொருள்கள் மற்றும் தானியங்கு இயந்திரங்களை பர்மாவின் கொடுமைப்படுத்தும் மற்றும் மக்களாட்சியற்ற இராணுவ நிர்வாகத்திற்கு வழங்கும் உடன்படிக்கைகளை டாட்டா மோட்டார் அறிவித்தது, இது மனித உரிமைகள் மற்றும் குடியரசு அமைபுகளால் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கின்றது. 2006 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், மியான்மரின் தலைமை இராணுவ அதிகாரி ஜெனரல். துரா ஷ்வே மான் புனேவில் உள்ள டாட்டா மோட்டார்ஸ் தொழிற்சாலையைப் பார்வையிட்டார். ["மியான்மர் டைஸ்." டிசம்பர் 8, 2008. த டெலிகிராப், கொல்கத்தா, இந்தியா]. 2009 ஆம் ஆண்டில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் மியான்மரில் டிரக் உற்பத்தியைத் தொடங்கயிருக்கின்ற திட்டங்கள் பற்றி பத்திரிக்கைக்கு அறிவித்தது.[20],[21]

சிங்கூரில் நிலம் கையகப்படுத்தல்[தொகு]

மேற்கு வங்காளத்தில் சிங்கூர் சர்ச்சை[22] டாட்டாவின் சமுதாய சாதனையின் மீது மேலும் பல கேள்விகளுக்கு வழிவகுத்தது, நிர்பந்த வெளியேற்றம் போதாத ஈட்டுத்தொகை ஆகியவற்றை எதிர்த்து உள்ளூர் கிராம வாசிகள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் போராட்டங்களினால் டாட்டாவின் நானோ தொழிற்சாலை இடமாற்றப்பட்டது. போராட்டம் முன்னேற்றமடைந்ததாலும், ஆளும் சி.பி.ஐ.(எம்) அரசாங்கத்தின் ஆதரவில் ஏற்பட்ட முரண்பாட்டாலும், இறுதியில் டாட்டா பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தத் திட்டத்தை மேற்கு வங்காள மாநிலைத்தை விட்டே வெளியேற்றியது. சிங்கூர் சர்ச்சையானது ரத்தன் டாட்டா பொதுப்படையாக விமர்சிக்கத் தூண்டியபோது, ஏதேனும் சுற்றுச்சூழல் அல்லது சமூக சிக்கல்களைக் கருதியது போது போன்ற சில நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது. அங்கு நானோ திட்டத்தை வெற்றிகரமாக அமைக்க வெற்றிகரமாக உதவி, இந்தச் சூழலை விரைவில் தீர்த்ததற்காக குஜராத்தில் தொழிற்புரட்சி கொண்டுவந்த குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தொடர்ந்து ரத்தன் டாட்டா பாராட்டியும் அரவணைத்து சென்றார்.[23]

தாம்ரா துறைமுகம்[தொகு]

சுற்றுச்சூழலின் முன்னர், தாம்ரா துறைமுக சர்ச்சையானது இந்தியாவிலும் டாட்டாவின் உலகளாவிய சந்தைகளிலும் குறிப்பிடத்தகுந்த பரபரப்பைப் பெற்றுத் தந்தது. (‘இந்தியா – தண்ணீரில் டாட்டா தடுமாறியது’, எத்திக்கல் கார்ப்பரேஷன், நவம்பர் 2007, இலண்டன், ஐக்கிய ராச்சியம்)[24]

தாம்ரா துறைமுகம் என்பது டாட்டா ஸ்டீல் மற்றும் லார்சன் & டூப்ரோ இடையிலான முதலீட்டு நிறுவனம். இது காஹிர்மாதா சரணாலயம் மற்றும் பிதர்கனிகா தேசியப் பூங்காவின் அருகில் அமைந்திருப்பதால், இதற்கு கிரீன்பீஸ் உள்ளிட்ட இந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளிலிடமிருந்து விமர்சனங்கள் வந்தன. காஹிர்மாதா கடற்கரை என்பது ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளுக்கான உலகின் மிகப்பெரிய புகலிடங்களில் ஒன்று ஆகும், மேலும் பிதர்கனிகா என்பது வடிவமைக்கப்பட்ட ராம்சார் தளமும் இந்தியாவின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடும் ஆகும். டாட்டா அதிகாரிகள் இந்தத் துறைமுகமானது சுற்றுச்சூழல் கேட்டை வலியுறுத்துகின்றது என்பதை மறுத்தனர், மேலும் துயர்தணிப்பு அளவீடுகள் IUCN இன் அறிவுரைப்படி செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.[25] மற்றொரு விதத்தில், கிரீன்பீஸ் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள், அந்தத் திட்டத்திற்காக எந்தவொரு சரியான சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வும் நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றன, இது அளவில் மற்றும் முதலில் முன்மொழியப்பட்ட விவரக்குறிப்புகளிலும் மற்றும் காஹிர்ம்தா கடற்கரையில் மிகப்பெரிய வாழ்விடம் மற்றும் பீதார்கனிகா சதுப்புநில காட்டின் சூழலில் குறுக்கிட முடிந்த துறைமுகம் ஆகியவற்றில் மாற்றத்தை உட்படுத்துகின்றது.[26],[27]

தாம்ரா துறைமுகக் கட்டுமானமானது குறைந்த அளவிலான உணமை அடிப்படைத் தகவல்களையும் மற்றும் தவறான வழிநடத்தலையும் கொண்டுள்ளது என்றும் கிரீன்பீஸால் நடத்தப்பட்ட போராட்டங்கள் குற்றம் சாட்டின. மேலும் கிரீன்பீஸ் கேவிகளுக்குப் பதிலாக DPCL இன் (தாம்ரா போர்ட் கம்பெனி லிமிட்டேட்) மறுமொழியானது இந்த காரணிகளில் நிலைத்து நின்றது [28],[29].

டான்சானியாவில் சோடா பிரித்தெடுத்தல் தொழிற்சாலை[தொகு]

டாட்ட நிறுவனம் ஒரு டான்சானிய நிறுவனத்துடன் சோடாச் சாம்பல் பிரித்தெடுத்தல் தொழிற்சாலையை டான்சானியாவில் கட்டமைக்க இணைந்து பணியாற்றியது.[30] டான்சானிய அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு அனைத்து உதவியையும் வழங்கியது.[30] மற்றொரு புறம், இது நேட்ரான் ஏரி அருகில் இருப்பதாலும், ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பையும் அதன் அருகில் வசிப்பவர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்பதாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த தொழிற்சாலையை எதிர்க்கின்றனர்.[31] டாட்டா நிறுவனம் தொழிற்சாலைக்கான இடத்தை மாற்றி ஏரியிலிருந்து 32 கி.மீ தொலைவில் கட்டமைக்கத் திட்டமிடுகின்றது, ஆனால் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் இது சுற்றுச்சூழலை எதிர்மறையாக ஊறுவிளைவிக்கும் என்று கருதுகின்றனர்.[31] மேலும் அது ஏற்கனவே அழிந்து வருகின்ற சிறிய ஃபிளமிங்கோ பறவைகளையும் பாதிக்க முடியும். நேட்ரான் ஏரியில் சிறிய ஃபிளமிங்கோ பறவைகளின் மூன்றில் இரண்டுபங்கு இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.[32] சோடா சாம்பல் உற்பத்தியானது ஏரியிலிருந்து பெறப்படும் நீரிலிருந்து வரும் உப்புத் தண்ணீரில் பிரித்தெடுக்கப்படுகின்றது, பின்னர் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் ஏரிக்கே திருப்பிவிடப்படுகின்றது. இந்தச் செயலாக்கமானது ஏரியின் இரசாயன உருவாக்கத்தில் குறுக்கிட முடியும்.[30] இருபத்தி இரண்டு ஆப்பிரிக்க நாடுகள் இந்த திட்ட உருவாக்கத்திற்கு எதிராக இருந்து, கட்டுமானத்தை நிறுத்துவதற்கான புகாரில் கையெழுத்திட்டுள்ளன.[30]

மேலும் காண்க[தொகு]

  • ஜாம்சேட்ஜி டாட்டா
  • தோரப்ஜி டாட்டா
  • ஜே.ஆர்.டி.டாட்டா
  • ரத்தன் டாட்டா
  • பிரதீப் தேஸ்வினி டாட்டா
  • பல்லோனி மிஸ்டரி
  • கோரஸ் குழு

குறிப்புகள்[தொகு]

  1. "GEO and GCC". Tata Group. Archived from the original on 2010-12-20. பார்க்கப்பட்ட நாள் 2009-06-21.
  2. "Leadership with trust". Tata Group. Archived from the original on 2010-01-02. பார்க்கப்பட்ட நாள் 2009-06-21.
  3. "Financial Times / PricewaterhouseCoopers World's Most Respected Companies Survey 2004" (PDF). The Financial Times. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-06-21.
  4. "Complete Rankings". World's Most Respected Companies. Forbes. May 21, 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-06-21.
  5. "Tata Companies". Tata Group. Archived from the original on 2013-07-13. பார்க்கப்பட்ட நாள் 2009-06-21.
  6. "A tradition of trust". Community Initiatives. Tata.com. Archived from the original on 2006-05-23. பார்க்கப்பட்ட நாள் 2006-10-30.
  7. Sirkin, Harold L; James W. Hemerling, and Arindam K. Bhattacharya (11-06-2008). குளோபலிட்டி: கம்ப்ளீட்டிங் வித் எவ்ரிஒன் ஃப்ரம் எவ்ரிவேர் ஃபார் எவ்ரித்திங். பரணிடப்பட்டது 2008-09-23 at the வந்தவழி இயந்திரம் நியூயார்க்: பிசினஸ் ப்ளஸ், 304. ஐஎஸ்பிஎன் 0-691-06165-3.
  8. "Tata Family Tree". tatacentralarchives.com. Archived from the original (PDF) on 2007-03-25. பார்க்கப்பட்ட நாள் 2007-06-02.
  9. Kneale, Klaus (May 6, 2009). "World's Most Reputable Companies: The Rankings". Forbes. பார்க்கப்பட்ட நாள் 2009-06-21.
  10. Huggler, Justin (February 1, 2007). "From Parsee priests to profits: say hello to Tata". The Independent. http://www.independent.co.uk/news/world/asia/from-parsee-priests-to-profits-say-hello-to-tata-434575.html. பார்த்த நாள்: June 21, 2009. 
  11. Hazarika, Sanjoy (March 28, 1991). "BUSINESS PEOPLE; Nephew to Take Over Tata Company in India". The New York Times. http://www.nytimes.com/1991/03/28/business/business-people-nephew-to-take-over-tata-company-in-india.html. பார்த்த நாள்: June 21, 2009. 
  12. "India's Tata Group to supply parts for Boeing Dreamliner". Agence France-Presse. Google News. February 6, 2008 இம் மூலத்தில் இருந்து ஜூன் 9, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070609092458/http://afp.google.com/article/ALeqM5hPLDpu6bLmTgk5mXHXMgUR0moZSw. பார்த்த நாள்: June 21, 2009. 
  13. "The rainbow effect". May 4, 2008 இம் மூலத்தில் இருந்து மே 8, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160508084156/http://www.tata.com/0_our_commitment/community_initiatives/overview.htm. 
  14. "India's Tata Group: Empowering marginalized communities". May 4, 2008. http://www.synergos.org/globalgivingmatters/features/0503tatagroup.htm. 
  15. "U.S. and Indian philanthropists recognized for conviction, courage and sustained efforts". May 4, 2008 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 26, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080926022720/http://www.carnegiemedals.org/news/2007medals.html. 
  16. "Ratan Tata gifts $50m to Cornell varsity". The Economic Times. October 21, 2008 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 12, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090112155319/http://economictimes.indiatimes.com/ET_Cetera/Ratan_Tata_gifts_50m_to_Cornell_varsity/articleshow/3622427.cms. பார்த்த நாள்: June 21, 2009. 
  17. 17.0 17.1 Timmons, Heather (January 4, 2008). "Tata Pulls Ford Units Into Its Orbit". The New York Times. http://www.nytimes.com/2008/01/04/business/worldbusiness/04tata.html?sq=tata&st=cse&adxnnl=1&scp=7&adxnnlx=1238497443-4R16x3p9Aj5a8CErvf45bw. பார்த்த நாள்: June 21, 2009. 
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-06-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-10. பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.
  20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-06. பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.
  21. [1]
  22. [2]
  23. Godhra train burning
  24. [3]
  25. [4]
  26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-06. பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.
  27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-10-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.
  28. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-08-21. பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.
  29. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-08-21. பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.
  30. 30.0 30.1 30.2 30.3 "Dar annoys neighbours over $400m soda ash project". The East African (Nation Media Group). November 5, 2007 இம் மூலத்தில் இருந்து ஜூன் 30, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170630001816/http://www.theeastafrican.co.ke/news/-/2558/256646/-/t682syz/-/index.html. பார்த்த நாள்: June 21, 2009. 
  31. 31.0 31.1 Magubira, Patty (May 16, 2008). "Tanzania: UK Activists Pile Pressure Against Soda Ash Project". The Citizen (Dar es Salaam: AllAfrica.com). http://allafrica.com/stories/200805160426.html. பார்த்த நாள்: June 21, 2009. 
  32. Pathak, Maulik (October 31, 2007). "Tata Chemicals' African safari hits green hurdle". The Economic Times. http://economictimes.indiatimes.com/Chem__Fertilisers/Tata_Chemicals_African_safari_hits_green_hurdle/articleshow/2504026.cms. பார்த்த நாள்: June 21, 2009. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_குழுமம்&oldid=3624517" இலிருந்து மீள்விக்கப்பட்டது