யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட்
Appearance
வகை | பொது தேபச: UPL முபச: 512070 |
---|---|
தலைமையகம் | மும்பை, இந்தியா |
தொழில்துறை | வேளாண், இரசாயனம் |
இணையத்தளம் | https://www.upl-ltd.com/ |
யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட் (UPL Limited) என்பது இந்தியாவில் மும்பை நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு வேளாண் இரசாயன உற்பத்தி நிறுவனமாகும். உலகில் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்கள் செயல்பாடுகளை கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் முக்கிய வருவாய் வேளாண் துறை சார்ந்து உள்ளது. அதே சமயம் இந்த நிறுவனம் தொழிற்சாலைகளுக்கு தேவையான ரசாயன தயாரிப்பிலும் ஈடுபடுகிறது.
விதை, களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை இந்த நிறுவனத்தின் முக்கிய உற்பத்திகளாகும். பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், சந்தை மதிப்பில் இந்தியாவின் 50 பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.[1]