சிப்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்லா நிறுவனம்
CIPLA Limited
வகைபொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் (முபச500087 )
நிறுவுகை1935
நிறுவனர்(கள்)குவாஜா அப்துல் ஹமீத்
தலைமையகம்மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள்யூசப் ஹமீது (சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்)
தொழில்துறைமருத்துவம்
உற்பத்திகள்மருந்து மற்றும் நோய் அறிதல்
வருமானம் ரு 5624.91 கோடி(2010)[1]
நிகர வருமானம்Increase ரூ 1082.59 கோடி (2010)
பணியாளர்7,000 கும் மேல்
இணையத்தளம்www.cipla.com

சிப்லா (Cipla, முபச500087 , தேபசCIPLA ) 1935ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு பன்னாட்டு மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் மும்பையில் இயங்கிவருகின்றது. சிப்லா முதன்மையாக சுவாச நோய், இருதய நோய், கீல்வாதம், நீரிழிவு நோய், எடை கட்டுப்பாடு மற்றும் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளையும் இன்னும் பல மருந்துகளையும் தயாரிக்கின்றது. இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. [2], [3], [4][5]

குவாஜா அப்துல் ஹமீத் அவர்களால் 1935 ஆம் ஆண்டில் மும்பையில் (Cipla - 'The Chemical, Industrial & Pharmaceutical Laboratories' ' தி கெமிக்கல் இன்டஸ்ட்ரியல் லேபராட்டரீஸ்) வேதியியல், தொழில்துறை மற்றும் மருந்து ஆய்வகங்கள்' என்ற பெயரில் நிறுவப்பட்டது. [6], [7] இந்நிறுவனத்தின் பெயர் 20 ஜூலை 1984 இல் 'சிப்லா லிமிடெட்' என மாற்றப்பட்டது. 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க எஃப்.டி.ஏ இந்நிறுவனத்திற்க்கு மொத்த மருந்து உற்பத்தி செய்வதற்க்கு ஒப்புதல் அளித்தது.

இதன் நிறுவனரான குவாஜா அப்துல் ஹமீத் அவர்களின் மகன் யூசுப் ஹமீத், கேம்பிரிட்ஜ் படித்த ஒரு வேதியியலாளர் அவர் தலைமையில், இந்நிறுவனம் வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு சிகிச்சையளிக்க பொதுவான மருந்து மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை தயாரித்து வழங்குகின்றது.[8] 1995 ஆம் ஆண்டில், சிப்லா உலகின் முதல் வாய்வழியாக எடுத்துக்கொள்ளும், டெஃபெரிபிரோனை அறிமுகப்படுத்திது.

2001 ஆம் ஆண்டில், சிப்லா எச்.ஐ.வி சிகிச்சைக்கான மருந்துகளை (ஆன்டிரெட்ரோவைரல்கள்) ஒரு பகுதியளவு செலவில் (ஒரு நோயாளிக்கு ஆண்டுக்கு $ 350 க்கும் குறைவாக) வழங்கியது [9]

உலகை தற்போது அச்சுறுத்திவரும் கொரோனா நோய்க்கு மருந்தாக கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தும் இந்நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கோள்கள்[தொகு]

  1. Cipla 2010 BSE Data
  2. http://www.thehindubusinessline.com/companies/how-a-little-blue-pill-changed-ciplas-fortunes/article5670851.ece
  3. "Top Companies by Market Capitalisation". Money Control. 17 September 2014. 17 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. Cipla to sell MSD’s HIV drug in India | Business Line
  5. Cipla, Hetero to roll out biosimilar drug | Business Line
  6. "About us - History". Cipla Limited. 27 October 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 November 2014 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  7. "Company History - Cipla Ltd". Economic Times. 3 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Interview with Yusuf Hamied". Creating Emerging Markets. Harvard Business School. 2016-12-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-04-16 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Indian drug company offers cheap AIDS drugs". USA Today. 19 June 2001. http://usatoday30.usatoday.com/news/world/2001-02-07-aidscocktail.htm. பார்த்த நாள்: 3 November 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்லா&oldid=3538452" இருந்து மீள்விக்கப்பட்டது