கெயில் (இந்தியா) நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெயில் (இந்தியா) நிறுவனம்
வகை அரசுத்துறை நிறுவனம்
பங்குசந்தையிலுள்ள நிறுவனம்
நிறுவுகை 1984
தலைமையகம் புது தில்லி, இந்தியா
முக்கிய நபர்கள் திரு பி. சி. திரிபாதி
(தலைவர் & மேலாண்மை இயக்குநர் (2011 நிலவரப்படி)[1]
தொழில்துறை இயற்கை எரிவளி வழங்கும் பொதுப்பயன் நிறுவனம்
உற்பத்திகள் வழங்கல், பரவல் மற்றும் சந்தைப்படுத்துதல் - இயற்கை எரிவளி, மின் உற்பத்தி மற்றும் மின் வழங்கல்
வருமானம் Green Arrow Up.svg $7.27 பில்லியன் (2012)
நிகர வருமானம் Red Arrow Down.svg $654 மில்லியன் (2012)
பணியாளர் 3,703 (2010)
இணையத்தளம் www.gail.nic.in

கெயில் (இந்தியா) நிறுவனம் (GAIL (India) Limited, முபச: 532155, தேபசGAIL, வார்ப்புரு:LSE) புது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயற்கை எரிவளியை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமாகும். இதன் முதன்மையான ஆறு பிரிவுகளாவன: இயற்கை எரிவளியையும் நீர்மநிலை பெட்ரோலிய வளி (LPG)யையும் எடுத்துச் செல்லும் சேவைகள், இயற்கை எரிவளி வணிகம், பெட்ரோகெமிக்கல்ஸ், எல்பிஜியும் நீர்ம ஐதரோகாபன்களும், கெயில்டெல், மற்றவை.[2]

1984ஆம் ஆண்டில் ஆகத்து மாதம் இயற்கை எரிவளி கட்டுமான மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்டது. துவக்கத்தில் இந்த நிறுவனம் காஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா என அறியப்பட்டது. பின்னர் இதன் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு கெயில் (GAIL) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இயக்கம்[தொகு]

கெயில் 11,000 கிமீ தொலைவிற்கு எரிவளியை எடுத்துச் செல்ல குழாய் தொடரை நிர்மாணித்துள்ளது. மேலும் 1,900 கிமீ தொலைவிற்கு நீர்மநிலை பெட்ரோலிய வாயுவை எடுத்துச் செல்லும் குழாய்த்தொடரையும் கட்டமைத்துள்ளது. உலகிலேயே மிக நீளமான எல்பிஜி குழாய்த்தொடராக விளங்கும் ஜாம்நகர்- லோனி குழாய்த்தொடர் விளங்குகிறது. இந்தியாவின் எரிவளி எடுத்துச் செல்லல் மற்றும் சந்தைப்படுத்துதலில் 70% பங்கை வகிக்கிறது.

துணை நிறுவனங்கள்[தொகு]

கெயில்டெல்[தொகு]

கெயில் இந்தியா நிறுவனத்தின் தொலைத்தொடர்புக்கான துணை நிறுவனமாக கெயில்டெல் நிறுவப்பட்டுள்ளது. முதன்மையாக கெயில் நிறுவனத்தின் உள்கட்ட தொலைத்தொடர்பு தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இத்துணை நிறுவனம் தனது சேவைகளை வெளி நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. இந்தியா முழுமையிலும் 13,000 கி.மீ தொலைவிற்கு ஒளியிழை கம்பி வடங்களை கட்டமைத்து இயக்கி பராமரித்து வருகிறது. இந்த ஒளியிழை வடங்கள் எரிவளி குழாய்த்தொடர்களை அடுத்து அமைக்கப்பட்டிருப்பதால் இதன் நம்பிக்கைத்தன்மை கூடுதலாக உள்ளது.

கெயில் காஸ் லிட்[தொகு]

கெயில் இந்தியாவின் மற்றொரு துணை நிறுவனமான கெயில் காஸ் லிமிடெட் 2008ஆம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்டது. தானுந்துகளுக்கு இயற்கை எரிவளியையும் தானுந்து எல்பிஜியையும் அறிமுகப்படுத்தவும் பரவல் மற்றும் சந்தைப்படுத்தலுக்காக இத்துணை நிறுவனம் உருவாக்கப்பட்டது. வீட்டுப் பயனுக்கும் குழாய்கள் மூலம் வழங்கலை ஊக்குவிக்கவும் இது துணை புரிகிறது.

மற்றவை[தொகு]

கெயில் இந்தியா நிறுவனம் நகரங்களில் எரிவளி பரவலுக்காக ஒன்பது கூட்டு முயற்சி நிறுவனங்களை நிறுவியுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகோள்கள்[தொகு]

  1. GAIL (India) Limited (2011). "GAIL Management". GAIL (India) Limited. GAIL (India) Limited. பார்த்த நாள் 6 August 2012.
  2. "The Global 2000". Forbes.com. Forbes.com LLC. 29 March 2007. http://www.forbes.com/lists/2007/18/biz_07forbes2000_The-Global-2000-India_10Rank.html. பார்த்த நாள்: 6 August 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]