உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாகுவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாகுவார்[1]
புதைப்படிவ காலம்:0.5–0 Ma
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பேந்தீரா
இனம்:
பே. ஒன்கா
இருசொற் பெயரீடு
பேந்தீரா ஒன்கா
லின்னேயஸ், 1758
பேந்தீரா ஒன்கா இனத்தின் பரம்பல்

ஜாகுவார் (Jaguar)(பேந்தீரா ஒன்கா) என்பது அமெரிக்காக்களைக் தாயகமாகக் கொண்ட பெரும்பூனை இனமாகும். இது சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரும்பூனை இனமாக உள்ளது. இதன் தற்போதைய வாழ்விடமானது மத்திய அமெரிக்காவில் பெரும்பான்மையாக மெக்சிகோவிலிருந்து பராகுவேவிற்குத் தெற்குப் பகுதி மற்றும் வடக்கு அர்ஜென்டினா வரையிலும் உள்ளது. அரிசோனாவில் உள்ள அறியப்பட்ட இனத் தொகையைத் தவிர, இந்தப் பூனையினம் 1900ஆம் ஆண்டுகளிலிருந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் முற்றிலுமாக அழிந்து விட்டது.

உடலில் புள்ளிகளுடன் காணப்படும் இப்பூனை சிறுத்தையின் புறத்தோற்றத்தை ஒத்திருக்கிறது; இது உருவத்தில் மிகப் பெரியதாகவும் முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருந்தாலும் இதனுடைய இருப்பிடம் மற்றும் இதன் குணங்கள் புலியின் குணங்களை ஒத்ததாய் உள்ளன. அடர்த்தியான மழைக்காடுகளே இவற்றிற்கு பிடித்த வசிப்பிடமாக இருந்தாலும், இவை காடுகள் நிறைந்த திறந்தவெளி திணை நிலங்களிலும் வாழ்கின்றன. ஜாகுவார்கள் பொதுவாக நீர் நிறைந்திருக்கும் இடங்களுடனேயே தொடர்புற்றுள்ளன. குறிப்பாக, புலியைப் போலவே, ஜாகுவார்யும் நீச்சலை விரும்பும் ஒரு விலங்காகும். ஜாகுவார் பெரும்பாலும் தனித்தே வசிக்கும், பதுங்கியிருந்து பாயும் மற்றும் வாழ்வதற்காக இரை தேடும் ஊனுண்ணி ஆகும். மேலும், அது இரையைத் தேர்ந்தெடுப்பதில் சமயத்திற்கு ஏற்றாற்போல செயலாற்ற வல்லது.

இயற்கைச் சூழல் அமைப்புகளையும், இரையாகும் விலங்குகளின் இனத் தொகையையும் ஒழுங்குபடுத்துவதில் ஜாகுவார் முக்கியப் பங்கு வகிப்பதால், இது பிரதானமான மற்றும் போட்டியின விலங்குகளை இரையாக்கிக் கொள்ளும் விலங்கு ஆகும்.

ஜாகுவாரின் கடிதிறன் பிற பெரும் பூனைகளை விடவும் அபரிமிதமான சக்தி வாய்ந்தது.[3] இதன் கடிதிறன் வலிமை, கவசமுள்ள ஊர்வனவற்றின்[4] ஓடுகளைத் துளையிடவும், அசாதாரணமான முறைகளில் விலங்குகளை இரையாக்கிக் கொல்லவும் உதவி புரிகிறது. இரையின் காதுகளுக்கு இடையில் உள்ள மண்டையோட்டை நேரடியாகக் கடிப்பதன் மூலம் மூளையில் நேரடியாகச் செலுத்தி ஒரே கடியில் உயிரைப் போக்கும் திறன் கொண்டதாக உள்ளது.[5]

ஜாகுவார் இனம் செம்பட்டியலில் அச்சுறுத்தப்படும் இனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது; மேலும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தவாறே உள்ளது. வசிப்பிட இழப்பும், தற்போதிருக்கும் விலங்குத் தொகை வெவ்வேறு இடங்களுக்கு பிரிக்கப்பட்டு விடுவதும் இந்த இனத்தின் அழிவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களில் அடங்கும். ஜாகுவார்கள் மற்றும் அதனுடைய பாகங்களின் சர்வதேச வியாபாரம் தடைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்தப் பெரும்பூனையின விலங்குகள் இன்னமும் மனிதர்களால் கொல்லப்படுகின்றன. குறிப்பாக, தென் அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் மற்றும் பண்ணையாட்கள் ஆகியோருடனான மோதல்களில் இவை அதிகமாக நிகழ்கின்றன.

இவை எண்ணிக்கையில் குறைந்து விட்டாலும், இவற்றின் வீச்சு மிகப் பெரிதானது. வரலாற்றுப் புகழ் வாய்ந்த இது, மாயா மற்றும் அஜ்டெக் ஆகியவை உள்ளிட்ட அமெரிக்கக் கலாசாரத்தின் புராணங்கள் பலவற்றிலும் முதன்மையான இடம் பெற்றுள்ளது.

மில்வாகி கௌன்டி உயிரியல் பூங்காவில் ஒரு ஜாகுவார்

தொகுப்பு முறைக் கூற்றியல்

[தொகு]

Panthera onca எனப்படும் இனம் ஒன்றே பெரும்பூனை இனத்தில் தற்போது உள்ள ஒரே ஜாகுவார் ஆகும். சிங்கம், புலி, சிறுத்தை, ஜாகுவார், பனி சிறுத்தை, மற்றும் மேகங்கள் போல் புள்ளியிட்ட சிறுத்தை ஆகிய அனைத்து விலங்குகளுக்குமே ஒரு பொதுவான மூதாதையர்தான் என்றும் இந்த வகை விலங்கினம் ஆறிலிருந்து பத்து மில்லியன் வருடங்கள் வயதுடையவையே என்றும் மரபணுச் சான்றுகள் தெரிவிக்கின்றன;[6] பாந்தெரா இனம் இரண்டிலிருந்து 3.8 மில்லியன் வருடங்கள் முன்னர் தோன்றியதாக உயிர் எச்சப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.[6][7] நியோஃபெலிஸ் நெபுலோஸா எனப்படும் மேகங்கள் போல புள்ளியிட்ட சிறுத்தைகள் தான் இந்த இனத்திற்கு அடிப்படை என்று ஃபைலோஜெனடிக் என்னும் விலங்கு இனவியல் குறிப்பிடுகிறது.[6][8][9][10] இந்த இனத்தில் தற்போது மீதமுள்ள தொகை என்பது ஒவ்வொரு ஆய்விலும் மாறுபட்டுக் காணப்படுவதால் தீர்மானமாக அறியப்படவில்லை.

விலங்குத் தாவர வடிவ அமைப்பியலின் சான்றுகளின் அடிப்படையில் பிரித்தானிய விலங்கியலாளர் ரெஜினால்ட் பாக்காக், ஜாகுவார் என்பது சிறுத்தை இனத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையது என்னும் முடிவுக்கு வந்தார்.[10] எனினும், மரபணுச் சான்றுகள் தீர்மானமான முறையில் கிடைக்கப் பெறவில்லை. மேலும் ஜாகுவார் வகை மற்ற இனங்களுடன் தொடர்புடையதா என்பது பற்றியும் ஆய்வுகளுக்கு இடையில் மாறுபாடு நிலவுகிறது.[6][8][9][10] அழிந்து விட்ட பாந்தெரா இனத்தின் உயிர் எச்சங்களான பாந்தெரா கோம்பாஸ்ஜோஜென்ஸிஸ் எனப்படும் ஐரோப்பிய ஜாகுவார் மற்றும் பாந்தெரா அட்ராக்ஸ் என்னும் அமெரிக்க சிங்கம் ஆகியவை சிங்கம் மற்றும் ஜாகுவார் ஆகிய இரண்டு விலங்குகளின் பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன.[10] ஜாகுவாரின் இழைமணிகள் மரபணு ஆராய்ச்சி, இந்த இனம் 280,000-510,000 வருடங்களுக்கு முன்னதாகத் தோன்றியதாக, அதாவது உயிர் எச்ச ஆய்வுகள் கூறும் காலத்திற்குப் பின்னதாக இவற்றின் காலத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.[11]

நிலவியல் ரீதியான மாறுபாடுகள்

[தொகு]
ஜாகுவாரின் துணை இனங்களாக எண்ணற்றவை இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சிகள் அவற்றில் மூன்றை மட்டுமே எடுத்துரைக்கின்றன. அமேசான் நதி போன்ற நிலம் சார்ந்த தடையரண்கள் இந்த இனங்களுக்குள் மரபணுவின் பரிமாற்றவோட்டத்தைக் குறைக்கின்றன.

ஜாகுவாரின் துணை இனத்தின் கடைசித் தொகுப்பு முறைக் கூறு 1939ஆம் வருடம் பாக்காக் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விலங்கினத்தின் நிலவியல் தோற்றுவாய் மற்றும் அவற்றின் மண்டையோட்டு வடிவ அமைப்பியல் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் எட்டு துணை இனங்களை அடையாளம் கண்டறிந்தார். இருப்பினும், எல்லா துணை இனங்களையும் பிரித்து ஆராய அவருக்கு போதுமான மாதிரிகள் கிடைக்கவில்லை. மேலும் பல மாதிரிகள் ஒன்று போலவே இருப்பதாகவும் அவருக்கு ஐயம் எழலானது. பின்னாளில், அவரது ஆய்வின் மீதான ஒரு பரிசீலனை, மூன்று துணை இனங்களை மட்டுமே அங்கீகரிக்க இயலும் என்று குறிப்பிட்டது.[12]

சமீபத்திய ஆய்வுகளாலும் துணை இனங்களுக்கான சான்றுகளை வரையறுக்க இயலவில்லை. அவ்வாறு வரையறுத்தலுக்கு உட்படாதவை துணை இனங்கள் என அங்கீகாரம் பெறவில்லை.[13] லார்ஸன் என்பவர் (1997) ஜாகுவாரின் வடிவ அமைப்பியல் வேறுபாடுகளை ஆய்ந்து அதில் வடக்கு-தெற்கு நிலவியல் தொடர்பான வேறுபாடுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இருப்பினும், இத்தகைய துணை இனங்களுக்குள்ளாகவே வேறுபாடுகள் மிகுந்திருப்பதால், மேலும் துணை வகைகளாக இவை பிரிக்கப்படத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.[14] எய்ஜிரிக் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் 2001ஆம் வருடம் நடத்திய ஒரு மரபணு ஆராய்ச்சி, நிலவியல் ரீதியாக துணை வகைகள் இருப்பதற்கான சான்றுகள் தென்படவில்லை என்று உறுதிப்படுத்தியது. இருப்பினும், அமேசான் நதி போன்ற முக்கிய நிலத் தடைகள் வெவ்வேறு இடங்களுக்கிடையே மரபணுக்கள் பரிமாற்றம் நடப்பதை குறைத்தன என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.[11] இதையடுத்து, மேலும் விரிவான முறையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கொலம்பிய ஜாகுவார்களிடையே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த இனத்தொகைக் கணக்கை உறுதி செய்தது.[15]

துணையினங்களின் பண்புகளாக பாக்காக் அறிவித்தவற்றை இன்றளவும் இந்தப் பெரும் பூனையினத்தின் பொதுப் பண்புகளாக பட்டியலிடப்படுகின்றனர்.[16] ஸேமொர், இதை மூன்று துணை இனங்களாக வகைப்படுத்தினார்.[12]

  1. பாந்தெரா ஓன்கா ஓன்கா : அமேசான் பகுதியைத் தாண்டி வெனிசூலா,
    • பி. ஓன்கா பெருவியானா (பெருவியன் ஜாகுவார் ): பெரு கடலோரங்களையும் உள்ளிட்டது.
  2. பி. ஓன்கா ஹெர்னான்தேஸி மெக்ஸிகன் ஜாகுவார் : மேற்கு மெக்ஸிகோ - கீழ்க்காண்பவற்றை உள்ளடக்கியது.
    • பி. ஓன்கா சென்ட்ராலிஸ் மத்திய அமெரிக்க ஜாகுவார் : எல் ஸால்வேடாரிலிருந்து கொலம்பியா வரையிலானது.
    • பி.ஓன்கா அரிஜோனென்ஸிஸ் அரிஜோன் ஜாகுவார் : தெற்கு அரிஜோனாவிலிருந்து மெக்ஸிகோவின் ஸோனோரா வரையிலானது.
    • பி. ஓன்கா வெரேக்ருசிஸ் : மத்திய டெக்ஸாஸிலிருந்து தென்கிழக்கு மெக்ஸிகோ வரையிலானது.
    • பி. ஓன்கா கோல்ட்மணி கோல்டுமேன்ஸ் ஜாகுவார் : யுகாடான் தீபகற்பத்திலிருந்து பெலைஜ் மற்றும் காடெமாலா வரையிலானது.
  3. பி. ஓன்கா பலுஸ்ட்ரிஸ் (இது 135 கிலோவிலிருந்து 300 எல்பி வரை எடை கொண்ட மிகப் பெரிய துணை இனமாகும்):[17] மாடோ க்ரோஸோ என்னும் இடத்தின் பான்டானல் பகுதிகள் மற்றும் மாடோ க்ரோஸோ டோ சல், பிரேஸில், பராகுவே நதியுடன் சேர்த்து பராகுவே மற்றும் வடகிழக்கு அர்ஜென்டினா வரையிலானது.

உலகின் பாலூட்டி இனங்கள் என்பதன் கீழ் ஒன்பது வகைகள் அங்கீகரிக்கப்படுகின்றன: அவை, மேற்காணும் எட்டு இனங்கள் மற்றும் கூடுதலாக பி.ஓ.பாராகுவென்ஸிஸ் ஆகியவையாகும்.[1]

உயிரியலும் நடத்தையும்

[தொகு]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

ஜாகுவார் திண்மையான தசைகளுடன் கட்டமைப்பான உடல் கொண்ட ஒரு விலங்கு ஆகும். இவற்றின் உருவ அளவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இவற்றின் எடை வழக்கமாக 56-96 கிலோகிராம் வரை இருக்கும். பெரிய ஆண் வகைகள் (ஏறத்தாழ ஒரு பெண் புலி அல்லது பெண் சிங்கத்தின் எடைக்கு நிகராக) 159 கிலோகிராம்[18] இருப்பதாகப் பதிவுகள் கூறுகின்றன; மற்றும் சிறிய ஜாகுவார்கள் மிகக் குறைந்த எடையாக 36 கிலோகிராம்கள் கொண்டிருக்கும். ஆணினத்தை விட பெண்ணினம் 10-20% சிறியதாக உள்ளது. இந்தப் பெரும் பூனைகளின் நீளம் 1.62-1.83 மீட்டர்கள் வரை (5.3-6அடி) வேறுபடுகின்றன. மேலும் அதன் வால் 75 சென்டிமீட்டராக (30 இன்ச்) அமைந்து அதன் நீளத்தை மேலும் கூட்டுவதாக உள்ளது. இவை தமது தோள்கள் வரையில் 67-76 சென்டிமீட்டர் (27-30 இன்ச்) உயரம் கொண்டுள்ளன.[19]

ஜாகுவார்யின் தலை உறுதி மிக்கதாகவும் அதன் தாடை எலும்பு மட்டில்லாத சக்தி கொண்டும் உள்ளது. ஜாகுவார்கள் வசிக்கும் இடத்திலிருந்து தெற்குப் புறமாக உட்செல்கையில், அவற்றின் அளவுகள் அதிகரிப்பதாகக் காணப்படுகின்றது.

பகுதி சார்ந்தும் மற்றும் வசிப்பிடங்களைப் பொறுத்தும் இவற்றின் அளவுகள் வேறுபடுவதாக அறியப்பட்டுள்ளது. ஜாகுவார்கள், வடபகுதிகளை விட தென் பகுதிகளில் பெரும் உருவம் கொண்டுள்ளன. மெக்ஸிகன்-பசிபிக் கடலோரங்களில் உள்ள காமெலா-குயிக்ஸ்மாலா உயிரினவெளி காப்பகத்தில் ஜாகுவாரைப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகள், 30-50 கிலோகிராம் (66-110 எல்பி) எடையுள்ளவற்றை வெளிக்காட்டியது; இது ஏறத்தாழ, கௌகார் எனப்படும் அமெரிக்க நாட்டு ஜாகுவார்யின் அளவாகும்.[20] இதற்கு மாறாக, பிரேஸிலில் உள்ள பான்டானல் பகுதியில் ஜாகுவாரைப் பற்றிய ஒரு ஆய்வில் ஜாகுவார்களின் சராசரி எடை 100 கிலோகிராம்(220 எல்பி) என்பதாக உள்ளது என்று அறியப்பட்டுள்ளது; மேலும், வயதான ஆண் ஜாகுவார்களில் 300 எல்பி அல்லது அதற்கு மேலான எடையும் கூட வழக்கத்திற்குப் புறம்பானதாகக் காணப்படவில்லை.[21] காடுகளில் வசிக்கும் ஜாகுவார்கள் அடர்ந்த நிறம் கொண்டும், திறந்த வெளிப் பகுதிகளில் இருப்பதை விட குறிப்பிடத்தக்க வகையில் சிறியதாகவும் உள்ளன. (பான்டானல் என்பது திறந்த ஈர நில பள்ளத்தாக்கு). காட்டுப் பகுதிகளில் பெரும் உருவம் கொண்ட தாவர உண்ணிகள் குறைவான அளவில் வசிப்பது இதன் காரணமாக இருக்கலாம்.[22]

சிறிய மற்றும் திண்மையான எலும்பு அமைப்பைக் கொண்டுள்ளமையால், ஏறுவது, தவழ்வது மற்றும் நீந்துவது ஆகியவை ஜாகுவார்களுக்கு மிக எளிதாகக் கை வருபவையாக உள்ளன.[19] ஜாகுவார் உறுதியான தலை மற்றும் பலம் வாய்ந்த தாடை அமையப் பெற்றுள்ளது. பெரும் பூனையினத்தின் மற்ற விலங்குகளை விட ஜாகுவாரே மிகச் சக்தி வாய்ந்த கடிதிறன் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த பாலூட்டிகளில் இது இரண்டாவது நிலையில் உள்ள விலங்காகும். இத்தகைய சக்தியானது ஆமையோடுகளை குத்திக் கிழிப்பதில் இதற்கு உதவுவதாக அமைந்துள்ளது.[4] உடலின் அளவுக்கேற்ப கடிக்கும் வேகத்தை அமைத்துக் கொள்ளும் தன்மையைப் பற்றிய ஒப்புமை ஆய்வில் இது முதன்மையான பூனையினமாக உள்ளது. மேகங்கள் போல் புள்ளியிட்ட சிறுத்தைகள் போல அமைந்துள்ள ஜாகுவார், தனது கடிதிறனைப் பொறுத்த வரையில் சிங்கம் மற்றும் புலியை விடவும் முன்னணியில் உள்ளது.[23] "ஒரு தனிப்பட்ட ஜாகுவாரால் 360 கிலோ (800 எல்பி) எடையுள்ள எருதை, எட்டு மீட்டர் (25 அடி) தூரம் தனது தாடையினால் இழுத்து செல்ல முடியும்" என்றும் "பாரம் மிகுந்த எலும்புகளையும் தூளாக்கி விட முடியும்" என்றும் அறிக்கைகளில் தெரிய வருகிறது.[24] அடர்ந்த காடுகளில், 300 கிலோகிராம் (660 எல்பி) வரை எடையுள்ள வன விலங்குகளை ஜாகுவார் வேட்டையாடுகிறது. அதன் குள்ளமான, உறுதியான உடலமைப்பு அது கொள்ளும் இரைக்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது.

ஹென்ரி டோர்லி உயிரியல் பூங்காவில் மெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார். மெலனின் நோய் என்பது எதிருருக்கள் பிரதானமாக இருப்பதன் விளைவாகும். ஆனால் ஜாகுவார்களில் இது அரிதான நிகழ்வாகவே உள்ளது.

ஜாகுவாரின் கீழ்த்தோலானது பொதுவாக பழுப்பு மஞ்சள் நிறமாக இருப்பினும், சிவந்த காவி நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையிலும் இதன் வண்ணங்கள் மாறுபடுகின்றன. தமது வசிப்பிடமான காடுகளில் தம் உருவத்தை மறைத்துக் கொள்ள உதவியாக இந்தப் பூனையினத்தின் மேற்தோல் முழுவதும் ரோஜா வடிவ வரியிழைவுகள் காணப்படுகின்றன. இந்தப் புள்ளிகள் மற்றும் மேற்தோல் வரியிழைகள் ஒவ்வொரு ஜாகுவாருக்கும் வேறுபடும். ரோஜா வடிவ வரியிழைவுகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளோ இருக்கலாம், இந்த புள்ளிகளின் வடிவங்களும் வேறுபடலாம். பொதுவாக தலை மற்றும் கழுத்தில் உள்ள புள்ளிகள், அதன் வாலில் உள்ள புள்ளிகளைப் போலவே, அழுத்தமாக உள்ளன; இவை ஒன்றாக இணைத்துப் பார்க்கப்படும்போது வரிகளாகத் தோன்றுகின்றன. அடிவயிற்றுப்பகுதி, தொண்டை மற்றும் கால்களின் புறப் பரப்பு மற்றும் கீழ் பக்கவாட்டுப் பகுதி ஆகியவை வெண்மையாக உள்ளன.[19]

மெலனின் நோய் எனப்படும் தோல் கருமையாகும் ஒரு நிலை இந்த இனத்தில் தோன்றுவதுண்டு. இந்தக் கருமை நிறம் என்பது ஜாகுவார்களில் புள்ளியிட்ட வடிவத்தை விட மிகக் குறைவாகவே (இதன் மொத்த எண்ணிக்கையில் ஆறு சதவிகித அளவே இருப்பதாக) காணப்படுகிறது.[25] எதிருருவின் ஆளுமையின் விளைவாக, தென்-அமெரிக்கப் பகுதிகளில் வசிக்கும் ஜாகுவார்களில் இவை காணப்படுவதாகக் கூறப்படுகிறது.[26] மெலனின் நோய் உடைய ஜாகுவார்கள் முற்றிலும் கருப்பாகத் தோற்றமளிக்கும். இருப்பினும், நெருக்கத்தில் பார்க்கையில் அதன் புள்ளிகள் தென்படும். மெலனின் நோய் கொண்ட ஜாகுவார்கள் இயல்பாக கருப்புச் ஜாகுவார்கள் என அழைக்கப்படுகின்றன. ஆயினும் அவை தனி இனமல்ல. வெண் ஜாகுவார்கள் என்றழைக்கப்படும் அரிதான வெளிறிப் புலிகளும், பிற பெரும் பூனை இனங்களைப் போல, ஜாகுவார்களிலும் காணப்படுகின்றன.[22]

ஜாகுவார்கள் தோற்றத்தில் சிறுத்தைகளை ஒத்திருந்தாலும், இவை மேலும் உறுதியானவையாகவும், அதிக எடை கொண்டும் உள்ளன; மேலும் இந்த இரண்டு விலங்குகளையும் ரோஜா வடிவ இழைவுகளைக் கொண்டும் வேறுபடுத்தலாம். ஜாகுவாரின் மேற்தோலில் உள்ள ரோஜா வடிவ இழைவுகள், பெரியதாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், அடர்ந்த நிறம் கொண்டும், மேலும் நடுவில் அடர்ந்த கோடுகள் மற்றும் சிறிய புள்ளிகள் உடையவையாகவும் இருக்கின்றன. சிறுத்தைகளில் இவ்வாறு காணப்படுவதில்லை. சிறுத்தைகளோடு ஒப்பிடும் போது ஜாகுவாரின் தலை உருண்டையாகவும் அதன் கால்கள் குள்ளமாக மற்றும் திண்மையாகவும் உள்ளன.[27]

இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி

[தொகு]

பெண் ஜாகுவார்கள் ஏறத்தாழ இரண்டு வயதில் பாலின முதிர்வடைகின்றன. இது ஆண் ஜாகுவார்களுக்கு மூன்று அல்லது நான்கு வயதில் நிகழ்கிறது. இரைகள் அபரிமிதமாகக் கிடைக்கும் பொழுது பிறப்புகள் அதிகமாகக்கூடும் என்றாலும், காட்டுப் பகுதிகளில் வருடம் முழுவதுமே இந்தப் பூனையினம் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதாக நம்பப்படுகின்றது.[28] சிறைப்படுத்தப்பட்ட ஆண் ஜாகுவார்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், அவை வருடம்-முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்னும் கருத்தாக்கத்திற்கு ஆதரவாக உள்ளன. இவற்றின் விந்தின் தனிக்கூறுகளிலோ அல்லது அவை வெளிப்படும் விதத்திலோ எந்தப் பருவத்திலும் மாற்றங்கள் காணப்படுவதில்லை; சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்களில் இனப்பெருக்க வெற்றியானது குறைந்த அளவிலேயே காணப்பட்டது.[29] ஒரு முழு 37-நாள் சுழற்சியில் பெண்ணின இனப்பெருக்கத்திற்கு உதவும் தூண்டி முட்சிறப்புக் காலம் என்பது 6-17 நாட்கள் வரை இருக்கும்; பெண் ஜாகுவார்கள் தங்களது கருவளத்தை சிறு நீர் வாசனைத் தடயங்கள் மற்றும் உயர்த்திய குரலொலி ஆகியவற்றின் மூலம் தெரிவிக்கின்றன.[28] இரு பாலினங்களுமே, உடலுறவு மேற்கொள்ளும் நேரங்களில், வழக்கத்தை விட அதிகத் தொலைவு செல்லும் தன்மை கொண்டுள்ளன.

தன் குட்டியின் கழுத்தைப் பிடித்து தூக்கவிருக்கும் ஒரு தாய் ஜாகுவார்.

இனச்சேர்க்கைக்குப் பிறகு அந்த ஜோடி பிரிந்து விடுகிறது. பெண் ஜாகுவாரே குட்டியை முழுதுமாகப் பராமரிக்கிறது. பெண் ஜாகுவாரின் சூல் காலம் சுமார் 93-105 நாட்கள் வரை நீடிக்கிறது; பெண் ஜாகுவார், பொதுவாக இரண்டு குட்டிகளும், அதிக பட்சமாக நான்கு குட்டிகள் வரையும் ஈனும். ஆணினம் தன் இனத்தை தானே உண்டு விடும் ஆபத்து இருப்பதால், குட்டிகள் பிறந்த பின்பு ஆணினம் அவ்விடத்தில் இருப்பதை தாய் ஜாகுவார்கள் விரும்புவதில்லை; இத்தகைய நடத்தையானது புலிகளிடத்தும் காணப்படுகிறது.[30]

குட்டிகள் பிறக்கும் பொழுது குருடாகவே பிறக்கின்றன. இரண்டு வாரங்களுக்குப் பிறகே அவை பார்வை பெறுகின்றன. குட்டிகளை மூன்று மாதத்தில் பால்குடி மறக்குமாறு செய்கின்றன. ஆனால் அவை தம் தாயுடன் வேட்டையாடச் செல்வதற்கு முன்னர் தாம் பிறந்த குகையிலேயே ஆறு மாதங்கள் வரை கழிக்கின்றன.[31] தமக்கென ஒரு வசிப்பிடத்தை உருவாக்கிக் கொள்வதற்கு முன்னால் அவை தமது தாயுடனேயே ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு வசிக்கின்றன. தமது எதிரிணைகளோடு மோதி, தமக்கென்று ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்ளும் வரையிலும், இளம் ஆண் ஜாகுவார்கள் சுற்றி அலைபவையாகவே உள்ளன. காடுகளில் வாழும் ஜாகுவார்களின் ஆயுட்காலம் இயல்பாக 12லிருந்து 15 வருடங்கள் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்கள் 23 வருடங்கள் வரையிலும் வாழ்கின்றன. இதனால் நீண்ட ஆயுள் கொண்ட பூனைகளின் பட்டியலில் இவை இடம் பெறுகின்றன.[21]

சமூகச் செயல்பாடுகள்

[தொகு]

இதர பூனை இனங்களைப் போலவே, ஜாகுவார் தாய்-குட்டி குழுவிற்கு வெளியாகத் தனித்தே வாழ்கிறது. வளர்ச்சி அடைந்த ஜாகுவார்கள் பொதுவாக இனச்சேர்க்கைக்காக மட்டுமே சந்திக்கின்றன (மிகக் குறைந்த அளவில் இடைநிகழ்ச்சியாக[30] இனச் சேர்க்கையல்லாத சந்திப்புகளும் காணப்படுகின்றன). மேலும், இவை தமக்கென பெரும் நிலப்பரப்பு கொண்ட எல்லைகளை உருவாக்கிக் கொள்கின்றன. பெண் ஜாகுவர்களின் எல்லைகள், 25 முதல் 40 சதுர கிலோமீட்டர்கள் அளவு தொலைவு கொண்டுள்ளன. இவை ஒன்றன் மேல் ஒன்றாகக் கவியக்கூடும். ஆனால் இந்த விலங்குகள் பொதுவாக ஒன்றையொன்று தவிர்த்து விடுகின்றன. ஆணினத்தின் எல்லைப் பரப்பு, அவற்றின் விளையாட்டு மற்றும் நிரப்பிடம் ஆகியவை கிடைக்கப் பெறுவதைப் பொறுத்து, இதைப் போல ஏறத்தாழ இரண்டு மடங்காக அமையலாம். ஆனால் ஆண் ஜாகுவார்களின் எல்லைகள் ஒன்றன் மேல் ஒன்று கவிவதில்லை.[30][32] ஜாகுவார்கள் பிறாண்டல் தடயங்கள், சிறு நீர் மற்றும் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டே தமது எல்லையைக் குறித்துக் கொள்கின்றன.[33]

ஏனைய பெரும் பூனையினங்களைப் போலவே, ஜாகுவார்கள் உறுமும் திறன் கொண்டவையாகும் (ஆண் ஜாகுவார்கள் அதிக சக்தியுடன் உறுமும் திறன் கொண்டுள்ளன). தமது எல்லைக்கும் இனச்சேர்க்கைக்கும் போட்டியாக வரும் விலங்குகளை எச்சரிக்க இவ்வாறு அவை உறுமல் எழுப்புகின்றன. காடுகளில் வசிக்கும் இதர விலங்குகளிடையே காணப்படுவது போல், இவை ஒன்றிற்கு ஒன்று அவற்றின் உறுமல் மூலம் தொடர்பு கொள்ளும் முறையும் காணப்படுகிறது.[34] ஜாகுவார்களின் உறுமல் பொதுவாக, தொடர்ச்சியான இருமலை ஒத்ததாக உள்ளது. இவை பூனையின் கரைவு மற்றும் பன்றியின் உறுமலைப் போலவும் ஒலி எழுப்பக் கூடியவை.[21] இவற்றுள் இனச்சேர்க்கைக்கான சண்டைகள் ஆண் ஜாகுவார்களிடையே நடை பெறுவதுண்டு. ஆனால் அது அரிதானது. பொதுவாக, ஆக்கிரமிப்பைத் தவிர்க்கும் பண்பினை காடுகளில் இந்த இனத்தின் நடத்தையில் காண முடிகிறது.[33] ஜாகுவார்கள் போரில் ஈடுபடுவது என்பதானது பொதுவாக, அவை தமது எல்லைக்காகப் போராடுவதாகவே அமைந்திருக்கும். ஒரு ஆணின் எல்லை என்பதானது இரண்டு அல்லது மூன்று பெண்களின் எல்லைகளைச் சூழ்ந்ததாக இருக்கக் கூடும். ஆண் ஜாகுவார் வளர்ச்சியடைந்த பிற ஜாகுவார்களின் தலையீட்டை சகித்துக் கொள்ளாது.[30]

ஜாகுவார்களைப் பொதுவாக இரவில் நடமாடும் விலங்குகளாகவே சித்தரிக்கின்றனர். ஆனால், அவை குறிப்பாக மங்கிய ஒளியிலேயே நடமாடுகின்றன. (அதிகாலை மற்றும் அந்தி சாயும் வேளையில் இவற்றின் நடமாட்டம் உச்ச அளவில் இருக்கும்). இரு பாலினங்களுமே வேட்டையாடினாலும், பெண்களை விட ஆண் ஜாகுவார்கள் ஒவ்வொரு நாளும் மேலும் அதிகத் தொலைவிற்குப் பயணப்படுகின்றன. தம்முடைய பரந்த எல்லைகளுக்கு ஏற்றதாகவும் தம்மைப் பொருத்திக் கொள்கின்றன. இரை கிடைக்கப்பெறும்போது மட்டுமே, ஜாகுவார்கள் பகல் நேரத்தில் வேட்டையாடுகின்றன. மற்ற விலங்குகளோடு ஒப்பிடுகையில் ஜாகுவார்கள் தமது மொத்த நேரத்தில் 50-60% வரை செயல்பாட்டிலேயே இருக்கும் சுறுசுறுப்பான பூனை இனமாகும்.[22] மறைந்தே வாழும் தமது பண்பின் காரணமாக, அவை தமக்கு விருப்பமானதாகத் தேர்ந்தெடுக்கும் வசிப்பிடங்களுக்கான அணுகல் மிகவும் கடினம் என்பதாலும், ஆராய்ச்சிக்கு மட்டும் அல்லாமல், பார்வைக்கும் அரிதான விலங்காகவே ஜாகுவார்கள் திகழ்கின்றன.

வேட்டையாடுதலும் உணவும்

[தொகு]

பிற பூனையினங்களைப் போல, ஜாகுவாரும் புலால் மட்டுமே உண்ணும் ஒரு புலால் உண்ணி விலங்கு. ஜாகுவாரானது வாய்ப்புகளுக்கேற்ப வேட்டையாடும் இயல்புடையது மற்றும் அதன் உணவு என்பது 87 இனங்களை உள்ளடக்கியது.[22] ஜாகுவார்கள் பெரிய இரைகளையே விரும்புகின்றன. எனவே மான், காபிபாரா என்னும் பன்றியினம், டபிர் என்னும் அமெரிக்காவில் காணப்படும் பன்றி போன்ற விலங்குகள், பெக்காரி என்னும் காட்டுப்பன்றிகள், நாய்கள், நரிகள் மற்றும் சில சமயம் அனகோண்டாக்கள் மற்றும் கெய்மான் என்னும் தென் அமெரிக்க முதலை வகை விலங்குகள் ஆகியவற்றை இவை வேட்டையாடி உண்கின்றன. எனினும், அகப்படும் எந்தச் சிறிய இனத்தையும் கூட இந்த பூனையினம் உண்டு விடும்; இவற்றில் தவளைகள், எலிகள், பறவைகள், மீன், தேவாங்குகள், குரங்குகள், மற்றும் ஆமைகள் ஆகியவை அடங்கும்; இதற்கு எடுத்துக் காட்டாக, பெலைஜில் உள்ள காக்ஸ்காம்ப் பேஸின் வன விலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஜாகுவார்கள் ஆர்மடில்லோக்கள் மற்றும் பாகாக்கள் ஆகியவற்றை முதன்மையான இரையாகக் கொள்வது கண்டறியப்பட்டது.[33] சில ஜாகுவார்கள் வளர்ந்த ஆடு மாடுகள் மற்றும் குதிரைகளையும் உள்ளிட்ட வீட்டு விலங்குகளையும் உண்கின்றன.[35]

மற்ற பெரும் பூனைகளுடன் ஒப்பிடுகையில், ஜாகுவார்களின் கடிதிறன் மிகவும் சக்தி வாய்ந்தது. இது கவசம் கொண்ட ஊர்வனவற்றின் ஓடுகளைத் துளைக்க ஏதுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜாகுவார் களின் குறிப்பிடத்தக்க ஆழ்-தொண்டையில் கடித்தல்-மற்றும்-மூச்சுத்திணறல் உருவாக்குதல் ஆகியவற்றில் ஜாகுவார்கள் ஈடுபட்டாலும், அவை தமது இரையைக் கொல்ல, பூனை இனங்களிலேயே பிரத்யேகமான ஒரு தனி வழியையே மேற்கொள்கின்றன. தமது இரையை (குறிப்பாக காபிபாரா இனம் சார்ந்ததை) கோரைப்பற்களால், காதுகளுக்கு இடையில் மண்டையோட்டின் கன்னப் பொட்டு எலும்புக்குள் நேரடியாகத் துளைத்து அதன் மூலம் மூளையைத் துளைக்கின்றன.[36]. இந்த அமைப்பானது, ஆமையோடுகளைத் துளைத்துத் திறப்பதற்காக அமைந்து விட்ட ஒன்றாக இருக்கலாம். அண்மையில், அருகி விட்ட விலங்கினங்களை ஒற்றிப் பார்க்கையில், ஆமைகள் போன்ற கவசமுள்ள ஊர்வன விலங்குகள் ஜாகுவார்களுக்கு அடிப்படை இரையாக மிகுந்த அளவில் கிடைக்கப் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.[22][34] குறிப்பாக ஜாகுவார்கள் பாலூட்டிகளில் அவற்றின் மண்டையோடைக் கடிக்கின்றன. கெய்மன் போன்ற ஊர்வனவற்றில் ஜாகுவார்கள் அவற்றின் பின்புறம் ஏறி அவற்றின் கழுத்து எலும்பைக் கடித்து அவை அசைய இயலாதபடி செய்கின்றன. ஆமையோடுகளைப் பிளக்கும் திறனைப் பெற்றிருப்பதால் ஜாகுவார்கள் மிக எளிதாக ஒடுகளைப் பிளந்து அதனுள் இருக்கும் சதையை அள்ளியெடுத்து விடுகின்றன.[30] நாய் போன்ற இரைகளின் கபாலத்தைப் பிளப்பதற்கு ஜாகுவார் தனது ஒரு கையை வீசுவதே போதுமானது.

ஜாகுவார், தனது இரையைக் குறி வைத்துத் துரத்தி பிடிப்பதை விட பதுங்கிப் பாய்ந்து வேட்டையாடும் விலங்காகும். இந்தப் பூனை, இரையின் நடமாட்ட ஒலியைக் கூர்ந்து கேட்டவாறே அதன் மீது பாய்வதற்கு முன்பு பதுங்கியவாறு காட்டுப் பாதைகளில் மெள்ள நடந்து செல்லும். ஜாகுவார் தனது இரையின் பார்வைக்கு எட்டாத ஒரு மறைவிடத்திலிருந்து கடும் பாய்ச்சலுடன் தாக்குதலை மேற்கொள்கிறது. இந்த இனத்தின் பதுங்கிப்பாயும் திறன் விலங்குகளின் உலகில் நிகரற்ற ஒன்று என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்களாலும், பிறராலும் கருதப்படுகிறது. பிற இனங்களை இரையாக்கி வாழும் முதன்மை விலங்கு என்பதால், இத்தகைய பண்பு இதற்கு அமைந்திருக்கக் கூடும்.

இவ்வாறு பதுங்கிப் பாய்வது என்பது இரையானது நீரினுள் இருக்கையில் நீருக்குள் பாய்வதையும் உள்ளடக்கும். ஏனெனில் ஒரு ஜாகுவார் தான் நீந்தும்பொழுதே இரையாக்கிக் கொள்ளும் மிகப் பெரும் விலங்கின் உடலையும் இழுத்து வரும் திறன் கொண்டது. வெள்ளக் காலங்களில் ஒரு வளர்ந்த கிடாரியின் உயரம் கொண்ட விலங்குகளின் உடல்களையும் இழுத்து வரும் ஆற்றல் கொண்டுள்ளது.[30]

ஜாகுவார் தனது இரையைக் கொன்ற பின்பு அதன் உடலை புதர்க்காடு அல்லது ஒதுக்கமான இடத்திற்கு இழுத்துச் செல்கிறது. இரையின் மத்திய பாகத்தை விட முதலில் கழுத்து மற்றும் மார்பிலிருந்தே அது உண்ணத் துவங்குகிறது. தோள்களைத் தொடர்ந்து இரையின் இதயம் மற்றும் நுரையீரல்களை விழுங்குகிறது.[30] இந்த இனத்தில் மிகக் குறைவான எடையுள்ள விலங்கான 34 கிலோகிராம் எடையுள்ள ஜாகுவாரின் ஒரு நாள் உணவுத் தேவை 1.4 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[37] 50-60 கிலோகிராம் அளவில் எடை கொண்ட சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்களுக்கு தினசரி 2 கிலோ கிராம்களுக்கும் மேலான புலால் உணவு பரிந்துரைக்கப்படுகிறது.[38] காடுகளில், உணவு என்பது இயல்பாகவே ஒழுங்கு முறையற்றுக் கிடைப்பதாகும்; முரட்டுப் பூனைகள் இரைகளைப் பிடிப்பதிலும் அதைக் கொல்வதிலும் மிகுந்த அளவில் சக்தியைச் செலவிடுவதால், இவை ஒரே நேரத்தில் 25 கிலோகிராம்கள் வரை புலாலை உண்ணக் கூடும்; எனினும் அதைத் தொடர்ந்து சில நாட்கள் வரை உண்ணாமல் வாழவும் இவற்றால் இயலும்.[39] ஜாகுவார் இனத்தில் உள்ள மற்ற வகைகளைப் போல் அல்லாமல், ஜாகுவார்கள் மிக அரிதாகவே மனிதர்களைத் தாக்குகின்றன. ஜாகுவார் மனிதர்களைத் தாக்கும் மிகக் குறைவான சந்தர்ப்பங்களில் அநேகமாக அந்த விலங்கு மிகவும் முதுமை அடைந்ததாகவோ அல்லது பழுதான பற்கள் கொண்டதாகவோ அல்லது காயமடைந்ததோ காணப்படுகிறது.[40] சிறையிடப்பட்ட ஜாகுவார்கள் தாங்கள் அச்சுறுத்தப்படும் சில வேளைகளில் விலங்குக் காப்பாளர்களைத் தங்களது வால் கொண்டு தாக்குவதுண்டு.[41]

சுற்றுச்சூழல் இயல்

[தொகு]

விநியோக முறைமைகளும் வசிப்பிடமும்

[தொகு]

உயிர் எச்சப் பதிவுகளில் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முந்தைய வாழ்வினம் என ஜாகுவார்களைக் குறிப்பிடுகின்றனர்.[16] மேலும் ப்ளெய்ஸ்டோசீன் காலத்தின் தொடக்கத்திலேயே பெரிங்க் லான்ட் பாலத்தை அவை கடந்தது முதல் அமெரிக்க பூனையினத்தைச் சார்ந்தவையாகவே இருந்து வருகின்றன; நவீன விலங்குகளின் உடனடி முதல் மூதாதையர் இனமான பாந்தெரா ஓன்கா அகஸ்டா என்னும் விலங்கே, சம காலத்திய பூனையினங்களில் பெரிய அளவினதாக இருந்தது.[15] இதனுடைய தற்போதைய பரப்பெல்லை மெக்ஸிகோவிலிருந்து, மத்திய அமெரிக்கா வழியாக அமேசானிய பிரேஸிலையும் உள்ளிட்டு தென் அமெரிக்காவின் உட்பகுதி வரையிலும் விரிகின்றது.[42] இந்த பரப்பெல்லைக்குள் அர்ஜென்டினா, பெலைஜ், பொலிவியா, பிரேஸில், கொலம்பியா, (குறிப்பாக, ஓசா தீபகற்பத்தில் உள்ள), காஸ்டா ரிகா, ஈக்வெடார், ஃப்ரென்ச் கயானா, காடேமாலா, கயானா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகராகுவா, பனாமா, பராகுவே, பெரு, சுரினாமே, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் அடங்கும். தற்பொழுது எல் ஸால்வெடார் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் ஜாகுவார் இனம் அழிந்துவிட்டது.[2] 400 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பெலைஜின் காக்ஸ்காம்ப் பேஸின் வன விலங்கு சரணாலயம், 5300 சதுர கிமீ அளவு உள்ள மெக்ஸிகோவில் உள்ள ஸியான் கான் உயிரினவெளி காப்பகம், ஏறத்தாழ 15,000 சதுர கிமீ கொண்ட பெருவில் உள்ள மனு தேசியப் பூங்கா, ஏறத்தாழ 26,000 சதுர கிமீ உள்ள பிரேஸிலின் ஜிங்கு தேசியப் பூங்கா, மற்றும் தமது பரப்பெல்லைக்குட்பட்ட எண்ணற்ற விலங்குக் காப்பகங்களில் இவை காணப்படுகின்றன.

ஜாகுவார்களின் வசிப்பிடம் பலதரப்பட்ட காடுகள் மற்றும் திறந்த வெளிகளை உள்ளடக்கும் அளவு விஸ்தீரணமானவை; ஆயினும், அவை நீர் நிலைகள் அமைந்துள்ள இடங்களோடு இணைந்தவையாக உள்ளன.

அவ்வப்பொழுது இவை தென்மேற்கில், அதிலும் குறிப்பாக அரிஜோனா, நியு மெக்ஸிகோ மற்றும் டெக்ஸாஸ் போன்ற இடங்களில் காணப்படுவதன் அடிப்படையில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 1900ஆம் ஆண்டுகளின் தொடக்க காலத்தில், ஜாகுவார்களின் பரப்பெல்லை வடக்கில் வெகு தொலைவாக கிரான்ட் கேன்யான் வரையிலும், மற்றும் மேற்கில் தென் கலிஃபோர்னியா வரையிலுமாக விரிந்திருந்தது.[37] ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் அழியும் தருவாயில் இருக்கும் விலங்கினத்தை பாதுகாக்கும் சட்டம் என்பதன் கீழ் ஜாகுவார் இனம் பாதுகாக்கப்பட்ட ஒரு இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது, தோலிற்காக ஜாகுவார்கள் கொல்லப்படுவதை நிறுத்தியுள்ளது. 2004ஆம் வருடம், வன விலங்கு அதிகாரிகள் அரிஜோனா மாநிலத்தின் தென் பகுதியில் ஜாகுவார்களை புகைப்படம் எடுத்து அவற்றை ஆவணப்படுத்தினர். ஜாகுவார்களின் எந்த இனத்தின் தொகையும் நிரந்தரமாகத் தழைத்தோங்குவதற்கு, அவை கொல்லப்படுவதிலிருந்து பாதுகாப்பு, அவற்றிற்குத் தேவையான அளவு இரைத்தளம் மற்றும் மெக்ஸிகன் நாட்டிலுள்ள அவற்றின் இனத்தொகையுடன் தொடர்பும் ஆகியவை அவசியமாகும்.[43] 2009வது வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி, 118 எல்பி எடையுள்ள ஜாகுவார் ஒன்று பிடிக்கப்பட்டு, செய்தியனுப்பும் கருவி கொண்ட கழுத்துப்பட்டை ஒன்று பொருத்தப்பட்டு அரிஜோனாவின் டக்ஸன் நகரத்தின் தென்மேற்கு பகுதியில் விடுவிக்கப்பட்டது. இது முன்னர் எதிர்பார்த்ததை விட இன்னும் வடக்கு திசையின் உட்புறமாக வெகு தொலைவில் உள்ள இடமாகும். எனவே, தெற்கு அரிஜோனாவிற்குள் நிரந்தரமான இனப் பெருக்கம் செய்யும் ஜாகுவார்கள் இருக்கலாம் என்பதனை இது உணர்த்துகிறது. இதன் பின்னர் 2004ஆம் வருடம், இது புகைப்படம் எடுக்கப்பட்ட அதே ஆண் ஜாகுவார்தான் (மாசோ பி என்று அழைக்கப்படுவது) என்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை அறியப்பட்ட அளவில் காடுகளில் வாழும் ஜாகுவார்களில் இதுவே முதுமையானதாகும் (ஏறத்தாழ 15 வருடங்கள்).[44] பத்து வருடங்களில் ஐக்கிய மாநிலங்களில் காணப்பட்ட ஒரே ஜாகுவாரான மாசோ பி, 2009ஆம் வருடம் மார்ச் 2ஆம் தேதி திங்கட்கிழமையன்று பிடிக்கப்பட்டுப் பின்னர், அது சிறு நீரகச் செயலிழப்பினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததாக அறியப்பட்டு, கருணைக்கொலை செய்யப்பட்டது.[45]

தற்சமயம் முன்மொழிந்துள்ளபடி ஐக்கிய அமெரிக்க மாநில-மெக்ஸிகோ தடுப்பு அமைக்கப்பட்டு விடுமானால், அந்தப் பகுதியில் தற்போது வாழும் எந்த விலங்கினமும் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து விடும், இதனால் மெக்ஸிகோ நாட்டில் இந்த இனங்கள் வருவது குறைந்து, மேலும் இந்த இனங்கள் வட திசையில் பெருக முடியாமல் தடுத்து விடும்.[46]

வரலாற்று ரீதியாக, இந்த இனத்தின் பரப்பெல்லை ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் தென் பாதியில் பெரும்பான்மையை உள்ளடக்கி, மேலும் தெற்கில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஏறத்தாழ முழுவதுமாக விரிந்திருந்தது. மொத்தத்தில், அதன் வட எல்லை 1000 கி.மீ தென் முகமாகவும் மற்றும் தெற்கு எல்லை 2000 கிமீ வடக்கு முகமாகப் பின்னோக்கியும் குறைந்து விட்டது. 40,000 லிருந்து 11,500 வருடங்கள் வரை முன்னதான கால கட்டத்தைச் சேர்ந்த ஜாகுவார்களின் பனிக்கால உயிர் எச்சங்களை ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் சில வட திசையில் தொலைவில் உள்ள மிஸௌரி போன்ற முக்கியமான இடங்களும் அடங்கும். ஜாகுவார்கள் 190 கிலோ (420 எல்பி) வரையிலான எடை கொண்டிருந்ததாக உயிர் எச்சச் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன; இது தற்போதைய ஜாகுவாரின் சராசரி எடையை விட மிகவும் அதிகமாகும்.[47]

இந்தப் பெரும் பூனையின் வசிப்பிடங்களில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள மழைக்காடுகள், திறந்தவெளியான பருவ வெள்ளம் பெருக்கெடுக்கும் ஈர நிலங்கள், மற்றும் காய்ந்த புல் திணை நிலங்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய வசிப்பிடங்களுள் ஜாகுவார்கள் அடர்ந்த காடுகளை அதிகம் விரும்புகின்றன.[22] அர்ஜென்டினாவின் பாம்பாஸ், மெக்ஸிகோவின் வறண்ட புல் நிலங்கள், மற்றும் தென்மேற்கு ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் ஆகிய வறண்ட நிலப்பரப்புகளை இவை விரைவாக இழந்து விட்டன.[2] இந்தப் பெரும் பூனையானது வெப்பமண்டலம், அதன் துணை மண்டலம் மற்றும் இலையுதிர் மரங்கள் கொண்ட காடுகள் (வரலாற்றின்படி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் கருங்காலி மரக்காடுகளையும் உள்ளிட்டு) ஆகியவற்றில் தனது பரப்பெல்லையைக் கொண்டுள்ளது. ஜாகுவார் நீர் நிலைகள் நிறைந்திருக்கும் இடங்களுடனேயே தொடர்பு படுத்தப்படுகிறது; ஆறுகள், சதுப்பு நிலம் மற்றும் இரையைத் தேடுவதற்காகப் பதுங்குவதற்குத் தேவையான மறைவினை அளிக்கும் அடர்ந்த மழைக்காடுகள் ஆகியவற்றையே இவை அதிகம் விரும்புகின்றன. 3800 மீ வரை உயரம் வரை ஜாகுவார்கள் காணப்பட்டுள்ளன. ஆனால், பொதுவாக அவை மலைப்பகுதியில் இருக்கும் காடுகளைத் தவிர்த்து விடுகின்றன மற்றும் ஆன்டெஸ் மற்றும் மத்திய மெக்ஸிகோவில் உள்ள உயர்ந்த பீடபூமிகளிலும் அவை காணப்படுவதில்லை.[22]

சுற்றுப்புற சூழலில் ஜாகுவாரின் பங்கு

[தொகு]

வயதடைந்த ஜாகுவார் பிற இனங்களை இரையாக்கி வாழும் முதன்மை விலங்கு. இதன் பொருள், உணவுச் சங்கிலியில் இதுவே மேலிடத்தில் இருப்பதால், வேறு எந்த விலங்கிற்கும் இது இரையாவதில்லை என்பதாகும். ஜாகுவார்கள் மையக்கல் இனம் என்றும் அழைக்கப்படுகின்றன, தாவரம் மற்றும் தானியம் தின்னும் பாலூட்டி இரைகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், முதன்மைப் பூனைகள் காடுகளின் கட்டமைப்பைப் பராமரிக்கின்றன.[20][48] எனினும், சுற்றுப்புற சூழலில் ஜாகுவார் போன்ற விலங்கினங்கள் எந்த அளவு தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதைத் துல்லியமாக கணக்கிடுவது கடினம். ஏனெனில் இதற்கு இந்த விலங்கினங்கள் இல்லாத பகுதிகள் மற்றும் இதன் தற்போதைய வசிப்பிடங்கள் ஆகியவற்றின் தகவல்களை ஒப்பிடுவது அவசியமாகும். மேலும், மனிதச் செயற்பாடுகளால் ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் தேவையாகும். மையக்கல் இரை தின்னிகள் இல்லையெனில் மிதமான-அளவுள்ள இரை இனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது எதிர்மறையான விழுதொடர் விளைவுகளை உருவாக்கும் என்றும் கருதுகின்றனர்.[49] ஆனால், இவை இயற்கையான வேறுபாடுகள் என்றும் இத்தகைய இனத்தொகைப் பெருக்கம் தொடர்ந்து நீடிக்காது என்றும் களப் பணிகள் உணர்த்துகின்றன. எனவே, இந்த மையக்கல் இரை தின்னி என்னும் கருத்தாக்கத்தினை அனைத்து அறிவியலாளர்களும் ஆதரிக்கவில்லை.[50]

பிற விலங்குகளை இரையாக்கிக் கொள்ளும் மற்ற இரை தின்னிகளின் மீதும் ஜாகுவார் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜாகுவாரும், கௌகார் என்னும் அமெரிக்காவின் அடுத்த பெரும் பூனையினமான அமெரிக்க நாட்டு சிறுத்தை இனமும், பெரும்பாலும் ஒரே எல்லையினைப் பகிர்ந்து கொள்கின்றன (அதாவது, ஒரே மாதிரி இனங்கள் ஒன்றன் மேல் ஒன்று கவிந்திருக்கும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வது). மேலும் ஆய்வுகளில் பெரும்பாலும் இவை இணைந்தே ஆராயப்படுகின்றன. ஜாகுவாருடன் ஒரே பரப்பெல்லையில் வாழும் இடங்களில் கௌகார் பொதுவான அதன் அளவை விடவும் மற்றும் அப்பகுதி சார்ந்த ஜாகுவார்களை விடவும் சிறியதாக உள்ளது. ஜாகுவார் உண்ணும் இரையளவு அதிகம்; கௌகாரின் இரை சிறிய அளவிலானது. இதனால், கௌகாரின் அளவு சிறியதாக அமைகிறது.[51] கௌகாரைப் பொறுத்தவரை இந்த நிலை அதற்கு சாதகமானதாக இருக்கக் கூடும். குறைவான இரை தின்பதை உள்ளிட்ட கௌகாரின் தனித் தகுதியான இடம், மனிதர்களால் திருத்தப்பட்ட நிலங்களில் அதற்குச் சாதகமாக அமைகிறது;[20] ஜாகுவார் மற்றும் கௌகார் ஆகிய இரண்டையுமே அழியும் தருவாயில் இருக்கும் இனங்கள் என அறிவித்திருப்பினும், தற்பொழுது கௌகார் இனம் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக உள்ளது.

பாதுகாப்பு நிலை

[தொகு]
மெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார்

தற்சமயம், ஜாகுவார்களின் எண்ணிக்கையானது குறைந்து கொண்டே வருகிறது. இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மையம் இதை அழியும் தருவாயில் உள்ள விலங்கு என்று கருதுகிறது;[2] அதாவது எதிர்காலத்தில் இந்த இனம் முற்றிலும் அழிந்து போய் விடக்கூடும் என்பது இதன் பொருளாகும். இதன் தற்போதைய நிலைக்குக் காரணம், வரலாற்று ரீதியாக வடக்குப் பகுதிகள் உள்ளிட்ட இதன் பரப்பெல்லை ஏறத்தாழ முழுவதுமாக இழக்கப்பட்டு விட்டதும் மற்றும் மீதமிருக்கும் அதன் எல்லைகளும் பல கூறுகளாகப் பிரிக்கப்படுவதுமேயாகும்.

1960வது வருடங்களில் இந்த இனத்தின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் குறைவது காணப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பிரேஸிலின் அமேசான் காடுகளிலிருந்து சுமார் 15,000 ஜாகுவார்களின் தோல் வெளிக் கொணரப்பட்டு வந்தன; 1973வது வருடத்தில் அழியும் தருவாயில் உள்ள இனங்களின் சர்வதேச வர்த்தக அமைப்பு (சிஐடிஈஎஸ்) உருவானதால் இதன் தோல் வர்த்தகம் பெருமளவு குறைந்தது.[52] ஜாகுவார்கள், வரலாற்று ரீதியாக தமது வசிப்பிடமாகக் கொண்டிருந்தவற்றில், 37 சதவிகிதத்தை இழந்து விட்டன என்றும், மேலும் 18 சதவிகித பரப்பெல்லைகளில் அவற்றின் நிலை தெளிவாக அறியப்படவில்லை எனவும் வன விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட நுணுக்கமான மற்றும் விவரமான பணிகள் வெளிக்காட்டுகின்றன. மீதமிருக்கும் எல்லைகளில் 70 சதவிகிதம், குறிப்பாக அமேசான் பள்ளத்தாக்குகள் மற்றும் அதையொட்டிய கிரான் சாகோ மற்றும் பான்டனல் பகுதிகளில், இந்த இனம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளது.[42]

இதன் வசிப்பிடங்களில் காடுகள் அழிக்கப்படுவது, உணவுக்கான தேடலில் மனிதர்களுடன் அதிகரித்து வரும் போட்டி,[2] வேட்டையாடிப் பிடிக்கப்படுதல், இதன் எல்லைகளின் வடக்குப் பகுதிகளில் உருவாகும் சூறாவளிக் காற்று, மற்றும் இது கால்நடைகளை உண்டு விடுவதால் கால்நடைப் பண்ணையாளர்கள் இந்தப் பெரும் பூனையைக் கொன்று விடுவது ஆகியவை ஜாகுவார் இனம் எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்களில் அடங்கும். கால்நடைகளை உணவாகக் கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்பு, ஜாகுவார் தனது உணவில் கால்நடைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்தது. மேய்ச்சல் நிலம் இந்த இனத்திற்குச் சிரமமானதாக இருப்பினும், கால்நடைகள் முதன் முதலில் தென் அமெரிக்காவில் அறிமுகமானபோது இந்த இரையை அதிக அளவில் பயன்படுத்தியதால் அந்தச் சமயத்தில் இந்த இனத்தின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். கால்நடைகளை உண்ணும் இதன் விருப்பம், கால்நடைப் பண்ணையாளர்கள் முழு நேர ஜாகுவார் வேட்டைக்காரர்களைப் பணியில் நியமிப்பதில் விளைந்தது. இந்தப் பெரும் பூனையைக் கண்டவுடன் சுட்டுக் கொல்கின்றனர்.[21]

இங்கே வெள்ளப் பெருக்கெடுத்துக் காணப்படும் பான்டனல், பிரேஸில் ஆகியவையே ஜாகுவார்களின் முக்கிய வசிப்பிடங்கள்.

சிஐடிஈஎஸ் அமைப்பின் முதல் இணைப்பு இனமாக ஜாகுவார்கள் இடம் பெற்றுள்ளன. ஜாகுவார்கள் அல்லது அதன் பாகங்களின் அனைத்து விதமான சர்வதேச வர்த்தகங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஜாகுவார்களை வேட்டையாடும் அனைத்துச் செயல்களும் (அவை (அழியும் தருவாயில் உள்ள இனங்கள் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளான) அர்ஜென்டினா, பெலைஜ், கொலம்பியா, ஃப்ரென்ச் கயானா, ஹோண்டுராஸ், நிகராகுவா, பனாமா, பராகுவே, சுரினாமே, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் ஆகியவற்றிலும், மற்றும் உருகுவே வெனிசூலா ஆகிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஜாகுவார்களின் வேட்டை, பிரேஸில், காஸ்டா ரிகா, காடெமாலா, மெக்ஸிகோ மற்றும் பெரு ஆகிய நாடுகளில் "பிரச்சினை விலங்குகள்" என்னும் நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொலிவியா நாட்டில் ஜாகுவாரின் கௌரவ வேட்டை இன்னமும் அனுமதி பெற்றுள்ளது. ஈக்வெடார் அல்லது கயானாவில் இந்த இனத்திற்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு ஏதும் இல்லை.[16]

தற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு இதைப் பற்றி அறிவுறுத்துவது மற்றும் சுற்றுப்புற சூழலுக்காக சுற்றுப் பயணம் மேற்கொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.[53] ஜாகுவாரைப் பொதுவாக குடை இனம் என அழைக்கப்படுகின்றனர் - அதாவது, பரப்பெல்லை மற்றும் வசிப்பிடத் தேவைகள் போதுமான அளவில் அதிகமாக இருக்கும் ஒரு இனம் பாதுகாக்கப்பட்டால், சிறிய பரப்பெல்லைகள் கொண்ட பல்வேறு இனங்களும் பாதுகாக்கப்படும் என்பது இதன் பொருளாகும்.[54] குடை இனங்கள் நிலப் பரப்புகளில் "நடமாடும் இணைப்புகள்" என்பதாகச் செயல்படுகின்றன. ஜாகுவார்களைப் பொறுத்தமட்டில் இது இரை தேடும் செயல்பாட்டின் மூலம் நிகழ்கிறது. எனவே, மற்ற இனங்களும் பயனடையும் என்பதைக் கவனத்தில் கொண்டு, ஜாகுவார்களுக்காக தொடர்புடைய செயல்படுத்தப்படக்கூடிய வசிப்பிடங்களை உருவாக்குவதில் பாதுகாப்பு மையங்கள் கவனம் செலுத்தலாம்.[53]

இந்த இனத்தின் பெரும்பான்மையான பரப்பெல்லைகள்- குறிப்பாக மத்திய அமேசான் ஆகியவை- அணுகலற்று இருப்பதனால் ஜாகுவார்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பது கடினமாக உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட சில உயிரினப் பகுதிகளிலேயே கவனம் செலுத்துவதால், இதன் இன-வாரியான ஆய்வு போதுமான அளவில் மேற்கொள்ளப்படாது உள்ளது. 1991ஆம் வருடம், பெலைஜில் ஜாகுவார்கள் (அதிகபட்ச எண்ணிக்கையாக) 600-1,000 என்ற அளவில் இருந்ததாக கணக்கெடுக்கப்பட்டது. இதற்கு ஒரு வருடம் முன்னதாக, மெக்ஸிகோவின் 4,000 சதுர கிமீ (2400 எம்ஐ2) கொண்ட கலாக்முல் உயிரினவெளி காப்பகத்தில் 125-180 ஜாகுவார்கள் இருந்ததாகக் கணக்கெடுக்கப்பட்டது. மாநிலத்தில் மேலும் 350 ஜாகுவார்கள் உள்ளன. இதை ஒட்டி உள்ள காடெமாலாவின் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட (9,000 எம்ஐ²) மாயா உயிரினவெளி காப்பகம் 465-550 ஜாகுவார்களைக் கொண்டுள்ளது.[55] பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணியில் பத்திலிருந்து 11 வரையான எண்ணிக்கையில் ஜாகுவார்கள் இருந்ததுடன் ஒப்பிடுகையில் 2003 மற்றும் 2004ஆம் வருடங்களில் ஜிபிஎஸ்- டெலிமெட்ரி என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணிகளில், கடினமான பான்டனல் பகுதியில் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஆறிலிருந்து ஏழு ஜாகுவார்கள் வரை மட்டுமே இருந்ததைக் காண முடிந்தது. பரவலாகப் பயன்படுத்தப்படும் மாதிரி வழிமுறைகள், இந்தப் பூனைகளின் எண்ணிக்கையை அதிக அளவிலாகக் காட்டும் என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டது.[56]

2008ஆம் வருடம் ஜனவரி 7ஆம் தேதி, ஜார்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகம் அழியும் தருவாயில் உள்ள மிருகங்களைக் காக்கும் சட்டத்தின் கீழ் இருக்கும் ஜாகுவாரின் எண்ணிக்கையை மீட்கும் கூட்டமைப்பு லட்சியத்தை கைவிடுவது என்று இதற்கு முன் எப்போதும் எடுக்கப்படாத ஒரு முடிவை எடுத்தபோது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் மீன் மற்றும் வனவிலங்கு சேவை மையத்தின் இயக்குனர் ஹெச்.டாலே ஹால் அதை அங்கீகரித்தார். இத்தகைய ஒரு தீர்மானம், அழியும் தருவாயில் உள்ள மிருகங்களை காக்கும் சட்டத்தின் 34 வருட வரலாற்றில் முதன் முதலாக எடுக்கப்பட்ட ஒன்றாகும். இந்தப் பெரும் பூனை வழக்கமாக நடமாடும் இடங்களான ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் அரசின் சார்பாக எழுப்பப்படும் புதிய எல்லை வேலிகளுக்காக ஜாகுவார் இனம் தியாகம் செய்யப்பட்டு விட்டதாக இந்தத் தீர்மானத்தைப் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.[57]

கடந்த காலத்தில், சில சமயங்களில் ஜாகுவாரின் "முக்கிய இடங்கள்" எனப்படும் இடங்களைப் பாதுகாப்பதன் மூலம் ஜாகுவார்கள் பாதுகாக்கப்பட்டன. இந்த முக்கிய இடங்கள் என்பவை ஜாகுவார்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் என்று கூறப்பட்டன; இவை ஏறத்தாழ 50 ஜாகுவார்கள் வசிக்கும் பெரும் பகுதிகளாக இருந்தன. எனினும், இந்த இனத்தின் பாதுகாப்பை நிலை நிறுத்த அவற்றின் வீரியமுள்ள ஜாகுவர் பொது மரபணு நிலையம் அமைத்தலும் மற்றும் ஜாகுவார்களை ஒன்றுடன் ஒன்று இணைப்புடன் வைத்திருப்பதும் அவசியம் எனவும் அண்மையில் சில ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதை அமல்படுத்துவதற்காக, பாஸியோ டெல் ஜாகுவார் என்னும் ஒரு புதிய திட்டம் ஜாகுவார்களின் முக்கிய இடங்களை இணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.[58]

புராணங்கள் மற்றும் கலாசாரங்களில்

[தொகு]

கொலம்பியாவிற்கு முன்னர் இருந்த அமெரிக்காக்கள்

[தொகு]
ஆஜ்டெக் கலாசாரத்தில் ஒரு ஜாகுவார் போர் வீரர்
மோசே ஜாகுவார்.300 ஏ.டி.லார்கோ மியுசியம் லிமா,பெரு

கொலம்பியக் கண்டுபிடிப்பிற்கு முன்னர் இருந்த மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஜாகுவார்கள் நீண்ட காலமாக சக்தி மற்றும் பலம் ஆகியவற்றின் சின்னமாக விளங்கின. தற்பொழுது கிமு 900ஆம் ஆண்டு முதல் பெரு என அழைக்கப்படும் பகுதியில், ஆண்டியன் கலாச்சாரங்களில் முற்காலத்திய கா என்னும் கலாச்சாரத்தால் பரவலாக விதைக்கப்பட்ட ஜாகுவார் வழிபாட்டு மரபு அநேகமாக முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் வந்த வடக்குப் பெருவின் மோசே கலாச்சாரத்தினர் தமது மண்பாண்டங்களில் சக்தியின் சின்னமாக ஜாகுவாரைப் பயன்படுத்தினர்.[59]

மெஸோ அமெரிக்க வளைகுடாவின் கடலோரப் பகுதிகளின் ஏறத்தாழ காவின் கலாசாரத்தின் சம காலமான ஆல்மெக்-என்னும் ஒரு முற்காலத்திய செல்வாக்கு மிக்க கலாசாரம்- "ஜாகுவார்களாக-இருந்தவை" எனும் ஒரு எண்ணத்தைப் பிரதிபலிக்கும் தனி மேம்பாட்டுடன் கூடிய ஜாகுவார்கள் அல்லது ஜாகுவார்களின் குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களின் சிற்பங்கள் மற்றும் உருவங்களைப் படைத்தது.

பின்னர் மாயா நாகரிகத்தில், வாழ்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஜாகுவார்கள் உருவாக்குவதாகவும் அவை அரச பரம்பரையைப் பாதுகாப்பதாகவும் நம்பினர். மாயா நாகரிகம் ஆன்மீக உலகத்தில் தனது கூட்டாளிகளாக இந்த சக்தி வாய்ந்த பூனை இனத்தை உணர்ந்தது. மேலும் மாயா நாகரிகத்தில் பல அரசர்கள் மாயன் மொழிகளில் ஜாகுவாருக்கான பெயரான பா'ஆலம் என்பதைத் தமது பெயர்களாகக் கொண்டிருந்தனர். ஆஜ்டெக் நாகரிகத்திலும் ஜாகுவாரின் உருவம் அரசர் மற்றும் மாவீரர்களை குறிக்கும் சின்னமாக பயன்படுத்தினர். ஜாகுவார் வீரர்கள் என்று சிறந்த மாவீரர் படை ஒன்றை ஆஜ்டெக்கியர்கள் உருவாக்கினர். ஆஜ்டெக் புராணங்களில், சக்தி வாய்ந்த தெய்வமான டெஜ்காட்லிபோகாவின் குல மரபுச் சின்னமாக ஜாகுவார் கருதப்பட்டது.

பிரேஸிலின் தேசிய விலங்கு

[தொகு]

ஜாகுவார் பிரேசிலின் ஒரு தேசியச் சின்னமாகும். ஜாகுவார்களுக்கு எப்போதுமே பிரேசில் நாட்டில் அதிக முக்கியத்துவம் இருந்து வந்துள்ளது. பிரேசில் நாட்டின் பழங்குடி மக்கள் இதன் கொழுப்பைப் பயன்படுத்தினர். ஒரு மாய வித்தையைப் போல, அது துணிவை அளிக்கும் என அவர்கள் நம்பினர். இளைஞர்களைச் சக்தியுள்ளவர்களாகச் செய்வதற்கும் அவர்களைத் தீங்குகளிலிருந்து காப்பதற்கும், ஜாகுவாரின் உடற்கொழுப்பினை அவர்களது உடலில் பூசினர்.

கொலம்பியத் துறையான அமேசானர்களின் துறையின் கொடி, கருப்பு ஜாகுவார் ஒன்று ஒரு வேட்டைக்காரன் மீது பாய்வதைச் சித்தரிக்கிறது.

சமகாலத்திய கலாசாரம்

[தொகு]

சமகாலத்திய கலாசாரங்களில் ஜாகுவார் மற்றும் அதன் பெயர் ஆகியவை சின்னங்களாகப் பயன்படுகின்றன. இது கயானாவின் தேசிய விலங்கு. அந்த நாட்டின் ராணுவத் தடவாளத்தில் இதன் உருவம் அமைந்துள்ளது.[60]

ஜாகுவார் என்பது தற்போது நுகர்வோர் பொருட்களின் பெயராக, குறிப்பாக ஒரு சொகுசுக் கார் வகையின் பெயராகப் பயன்படுகிறது. இந்தப் பெயரைப் பல விளையாட்டு நிறுவனங்களும் கையாளுகின்றனர். என்எஃப்எல்லின் ஜாக்சன்வில் ஜாகுவார்ஸ் மற்றும் மெக்ஸிகோவின் கால்பந்தாட்டக் குழுவான ஜாகுவார்ஸ் டெ சியாபஸ் ஆகியவை இதில் அடங்கும். கிராமி விருது பெற்ற மெக்ஸிகோவின் "ஜாகுவேர்ஸ்" என்ற ராக் இசைக்குழுவும் இந்த கம்பீரமான விலங்கின் பாதிப்பு காரணமாகவே தங்கள் குழுவிற்கு இதன் பெயரைச் சூட்டினர். ரக்பி சங்கத்தின் அர்ஜென்டினா தேசிய கூட்டமைப்பின் முகடு ஜாகுவாரைச் சித்தரிக்கிறது. எனினும், வரலாற்றில் இடம் பெற்று விட்ட ஒரு விபத்து காரணமாக, இந்த நாட்டின் தேசிய அணி லாஸ் ப்யூமாஸ் என்று பட்டப் பெயரைப் பெற்றது.

தென் அமெரிக்க நகரத்தில் கட்டின்றித் திரிந்த மெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார் 1942ஆம் வருடத்தில் கார்னெல் வுல்ரிச் எழுதிய ப்ளாக் அலிபி என்னும் நாவலின் மையக் கதாபாத்திரமாக அமைந்தது.

1968வது வருடத்தில் மெக்ஸிகோ நகரம் நடத்திய ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஜாகுவாரே முதன்முதலான ஒலிம்பிக் நற்சின்னமாக விளங்கியது. மாயன் கலாச்சாரம் முன்னர் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய நிலப்பரப்புடன் தொடர்புடையது என்பதன் காரணமாகவே ஜாகுவார் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. [1].

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). pp. 546–547. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Panthera onca". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes justification for why this species is near threatened.
  3. Stephen Wroe, Colin McHenry, and Jeffrey Thomason (2006). "Bite club: comparative bite force in big biting பாலூட்டிs and the prediction of predatory behavior in fossil taxa" (PDF). Proceedings of the Royal Society B (அரச கழகம்) 272 (1563): 619–625. doi:10.1098/rspb.2004.2986 இம் மூலத்தில் இருந்து 2005-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050703130933/http://www.bio.usyd.edu.au/staff/research/swroe/Wroeetal2005Biteclub.pdf. பார்த்த நாள்: 2006-08-07. 
  4. 4.0 4.1 Hamdig, Paul. "Sympatric Jaguar and Puma". Ecology Online Sweden via archive.org. Archived from the original on 2008-02-01. பார்க்கப்பட்ட நாள் 2009-03-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. ரோஸா சிஎல் டெ லா மற்றும் நாக்கெ, 2000. மத்திய அமெரிக்காவின் புலால் உண்ணிகளுக்கான வழிகாட்டு நூல்: இயற்கை வரலாறு, சூழலியல் மற்றும் பாதுகாப்பு . தி யூனிவர்சிடி ஆஃப் டெக்சாஸ் பிரஸ். ஐஎஸ்பிஎன் 978-1847287564
  6. 6.0 6.1 6.2 6.3 Johnson, W.E., Eizirik, E., Pecon-Slattery, J., Murphy, W.J., Antunes, A., Teeling, E. & O'Brien, S.J. (2006). "The Late Miocene radiation of modern Felidae: A genetic assessment". Science 311 (5757): 73–77. doi:10.1126/science.1122277. பப்மெட்:16400146. 
  7. Turner, A. (1987). "New fossil carnivore remains from the Sterkfontein hominid site (பாலூட்டிia: Carnivora)". Annals of the Transvaal Museum 34: 319–347. பன்னாட்டுத் தர தொடர் எண்:0041-1752. 
  8. 8.0 8.1 Yu L & Zhang YP (2005). "Phylogenetic studies of pantherine cats (Felidae) based on multiple genes, with novel application of nuclear beta-fibrinogen intron 7 to carnivores". Molecular Phylogenetics and Evolution 35 (2): 483–495. doi:10.1016/j.ympev.2005.01.017. பப்மெட்:15804417. 
  9. 9.0 9.1 Johnson WE & Obrien SJ (1997). "Phylogenetic reconstruction of the Felidae using 16S rRNA and NADH-5 mitochondrial genes". Journal of Molecular Evolution 44: S098. doi:10.1007/PL00000060. 
  10. 10.0 10.1 10.2 10.3 Dianne N. Janczewski, William S. Modi, J. Claiborne Stephens, and Stephen J. O'Brien (1 July 1996). "Molecular Evolution of Mitochondrial 12S RNA and Cytochrome b Sequences in the Pantherine Lineage of Felidae". Molecular Biology and Evolution 12 (4): 690. பப்மெட்:7544865. http://mbe.oxfordjournals.org/cgi/reprint/12/4/690. பார்த்த நாள்: 2006-08-06. 
  11. 11.0 11.1 Eizirik E, Kim JH, Menotti-Raymond M, Crawshaw PG Jr, O'Brien SJ, Johnson WE. (2001). "Phylogeography, population history and conservation genetics of jaguars (Panthera onca, பாலூட்டிia, Felidae)". Molecular Ecology 10 (1): 65. doi:10.1046/j.1365-294X.2001.01144.x. பப்மெட்:11251788. https://archive.org/details/sim_molecular-ecology_2001-01_10_1/page/65. பார்த்த நாள்: 2006-08-07. 
  12. 12.0 12.1 Seymour, K.L. (1989). "Panthera onca" (PDF). பாலூட்டிian Species 340 (340): 1–9. doi:10.2307/3504096. http://www.science.smith.edu/departments/Biology/VHAYSSEN/msi/pdf/i0076-3519-340-01-0001.pdf. பார்த்த நாள்: 2009-12-27. 
  13. Nowak, Ronald M. (1999). Walker's பாலூட்டிs of the World (6th ed.). பால்ட்டிமோர்: Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-5789-9.
  14. Larson, Shawn E. (1997). "Taxonomic re-evaluation of the jaguar". Zoo Biology 16 (2): 107. doi:10.1002/(SICI)1098-2361(1997)16:2<107::AID-ZOO2>3.0.CO;2-E. http://www3.interscience.wiley.com/cgi-bin/abstract/51449/ABSTRACT?CRETRY=1&SRETRY=0. பார்த்த நாள்: 2006-08-07. 
  15. 15.0 15.1 Ruiz-Garcia M, Payan E, Murillo A & Alvarez D (2006). "DNA microsatellite characterization of the jaguar (Panthera onca) in Colombia" (PDF). Genes & Genetic Systems 81 (2): 115–127. doi:10.1266/ggs.81.115. http://www.jstage.jst.go.jp/article/ggs/81/2/115/_pdf. பார்த்த நாள்: 2010-03-10. 
  16. 16.0 16.1 16.2 ஜாகுவார்களை சிறைப்படுத்தியபின் அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டு முறைமைகள் பரணிடப்பட்டது 2007-06-21 at the வந்தவழி இயந்திரம், தொகுப்பு முறைக் கூற்றியல், பிபி. 5-7, ஜாகுவார் இன உயிர் வாழ் திட்டம்
  17. "Brazil nature tours, Pantanal nature tours, Brazil tours, Pantanal birding tours, Amazon tours, Iguassu Falls tours, all Brazil tours". Focustours.com. Archived from the original on 2007-12-28. பார்க்கப்பட்ட நாள் 2009-03-08.
  18. Burnie, David (2001). Animal: The Definitive Visual Guide to the World's Wildlife. நியூயார்க் நகரம்: Dorling Kindersley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7894-7764-5. {{cite book}}: Unknown parameter |coauthor= ignored (help)
  19. 19.0 19.1 19.2 ""All about Jaguars: ECOLOGY"". Wildlife Conservation Society. Archived from the original on 2009-05-29. பார்க்கப்பட்ட நாள் 2006-08-11.
  20. 20.0 20.1 20.2 Rodrigo Nuanaez, Brian Miller, and Fred Lindzey (2000). "Food habits of jaguars and pumas in Jalisco, Mexico". Journal of Zoology 252 (3): 373. http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=58851. பார்த்த நாள்: 2006-08-08. 
  21. 21.0 21.1 21.2 21.3 ""Jaguar Fact Sheet"" (PDF). Jaguar Species Survival Plan. Archived from the original (PDF) on 2011-08-18. பார்க்கப்பட்ட நாள் 2006-08-14.
  22. 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 22.6 நாவெல், கே. மற்றும் ஜாக்சன், பி. (தொகுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்) 1996. முரட்டுப் பூனைகள்.'நிலை சார்ந்த ஆய்வு மற்றும் பாதுகாப்புத் திட்டச் செயற்பாடு (பிடிஎஃப்). ஐயுசிஎன்/எஸ்எஸ்சி பூனை சிறப்புத் தேர்ச்சியாளர்கள் குழு. ஐயுசிஎன், க்ளான்ட், ஸ்விட்சர்லாந்து. (காண்க பாந்தெரா ஓன்கா, பிபி 118-122)
  23. "Search for the Jaguar". National Geographic Specials. Alabama Public Television. Archived from the original on 2006-09-04. பார்க்கப்பட்ட நாள் 2006-08-11.
  24. McGrath, Susan (August 2004). Top Cat. National Audubon Society. http://www.audubonmagazine.org/features0408/belize.html. பார்த்த நாள்: 2009-12-02. 
  25. Dinets, Vladmir. "First documentation of melanism in the jaguar (Panthera onca) from northern Mexico". Archived from the original on 2006-09-26. பார்க்கப்பட்ட நாள் 2006-09-29.
  26. Meyer, John R. (1994). "Black jaguars in Belize?: A survey of melanism in the jaguar, Panthera onca". Belize Explorer Group. biological-diversity.info.
  27. ""Jaguar (panthera onca)"". Our animals. Akron Zoo. Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2006-08-11.
  28. 28.0 28.1 "வழிகாட்டுதல்கள்", இனப்பெருக்கம், பிபி. 28-38
  29. Ronaldo Gonçalves Morato, Marcelo Alcindo Barros de Vaz Guimaraes, Fernando Ferriera, Ieda Terezinha do Nascimento Verreschi, Renato Campanarut Barnabe (1999). "Reproductive characteristics of captive male jaguars". Brazilian Journal of Veterinary Research and Animal Science 36 (5). doi:10.1590/S1413-95961999000500008�. http://www.scielo.br/scielo.php?script=sci_arttext&pid=S1413-95961999000500008&lng=pt&nrm=iso&tlng=en. பார்த்த நாள்: 2006-08-08. 
  30. 30.0 30.1 30.2 30.3 30.4 30.5 30.6 "வழிகாட்டுதல்கள்", இயற்கை வரலாறு மற்றும் நடத்தை, பிபி. 8-16
  31. (PDF) "Jaguars: Magnificence in the Southwest". Southwest Wildlife Rehabilitation & Educational Foundation. Spring 2006 இம் மூலத்தில் இருந்து 2011-07-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110721144027/http://www.southwestwildlife.org/pdf/Newsletter/Spring06.pdf. பார்த்த நாள்: 2009-12-06. 
  32. George B. Schaller, Peter Gransden Crawshaw, Jr. (1980). "Movement Patterns of Jaguar". Biotropica 12 (3): 161. doi:10.2307/2387967. http://links.jstor.org/sici?sici=0006-3606(198009)12%3A3%3C161%3AMPOJ%3E2.0.CO%3B2-H/. பார்த்த நாள்: 2006-08-08. 
  33. 33.0 33.1 33.2 Rabinowitz, AR., Nottingham, BG Jr (1986). "Ecology and behaviour of the Jaguar (Panthera onca) in Belize, Central America" (PDF). Journal of Zoology 210 (1): 149. http://www.panthera.org/documents/Rabinowitz_Nottingham_EcologyBehaviorofJagsinBelize_JZoolLond_1986.pdf. பார்த்த நாள்: 2009-12-06.  பெலைஜில் நடந்த ஆய்வில் ஒன்றன் மேல் ஒன்று கவிந்ததாக ஆண் ஜாகுவார்களின் பரப்பெல்லைகள் காணப்பட்டன. பரப்பெல்லைகளின் மொத்த அளவு, வழக்கமான அளவில் கிட்டத்தட்ட பாதியாக இருப்பதைக் கவனிக்கவும் .
  34. 34.0 34.1 Emmons, Louise H. (1987). "Comparative feeding ecology of felids in a neotropical rainforest". Behavioral Ecology and Sociobiology 20 (4): 271. doi:10.1007/BF00292180. http://www.springerlink.com/content/h715034593114546/. பார்த்த நாள்: 2006-08-08. 
  35. "Jaguar". Kids' Planet. Defenders of Wildlife. பார்க்கப்பட்ட நாள் 2006-09-23.
  36. "Schaller, G. B. and Vasconselos, J. M. C. (1978). Jaguar predation on capybara. Z. Saugetierk. 43: 296-301" (PDF). Archived from the original (PDF) on 2017-10-08. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
  37. 37.0 37.1 "Determination That Designation of Critical Habitat Is Not Prudent for the Jaguar". Federal Register Environmental Documents. 2006-07-12. பார்க்கப்பட்ட நாள் 2006-08-30.
  38. "வழிகாட்டுதல்கள்", கைகளால்-வளர்ப்பது, பிபி 62-75 (பார்க்க அட்டவணை 5)
  39. "வழிகாட்டுதல்கள்", ஊட்ட வளம், பிபி. 55-61
  40. "Jaguar". Catsurvivaltrust.org. 2002-03-09. பார்க்கப்பட்ட நாள் 2009-03-08.
  41. "Jaguar: The Western Hemisphere's Top Cat". Planeta. Archived from the original on 2008-08-21. பார்க்கப்பட்ட நாள் 2009-03-08.
  42. 42.0 42.1 Eric W. Sanderson, Kent H. Redford, Cheryl-Lesley B. Chetkiewicz, Rodrigo A. Medellin, Alan R. Rabinowitz, John G. Robinson, and Andrew B. Taber (2002). "Planning to Save a Species: the Jaguar as a Model" (PDF). Conservation Biology 16 (1): 58. doi:10.1046/j.1523-1739.2002.00352.x. http://www.jaguarresearchcenter.com/The_jaguar.pdf. பார்த்த நாள்: 2009-12-11. தற்போதைய பரப்பெல்லைகள் மற்றும் நில வகைகளின் விவரமான ஆய்வுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன .
  43. "Jaguar Management". Arizona Game & Fish,. Archived from the original on 2006-10-04. பார்க்கப்பட்ட நாள் 2006-08-08.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  44. "Arizona Game and Fish collars first wild jaguar in United States". Readitnews.com. Archived from the original on 2009-02-24. பார்க்கப்பட்ட நாள் 2009-03-08.
  45. Hock, Heather (2009-03-02). "Illness forced vets to euthuanize recaptured jaguar". Azcentral.com. பார்க்கப்பட்ட நாள் 2009-03-08.
  46. "Addressing the Impacts of Border Security Activities On Wildlife and Habitat in Southern Arizona: STAKEHOLDER RECOMMENDATIONS" (PDF). Wildlands Project. Archived from the original (PDF) on 2007-07-11. பார்க்கப்பட்ட நாள் 2008-11-03.
  47. "Jaguars". The Midwestern United States 16 000 years ago. Illinois State Museum. Archived from the original on 2011-08-24. பார்க்கப்பட்ட நாள் 2006-08-20.
  48. "Jaguar (Panthera Onca)". Phoenix Zoo. Archived from the original on 2010-05-27. பார்க்கப்பட்ட நாள் 2006-08-30.
  49. "Structure and Character: Keystone Species". mongabay.com. Rhett Butler. பார்க்கப்பட்ட நாள் 2006-08-30.
  50. Wright, SJ; Gompper, ME; DeLeon, B (1994). "Are large predators keystone species in Neotropical forests? The evidence from Barro Colorado Island". Oikos 71 (2): 279. doi:10.2307/3546277. http://md1.csa.com/partners/viewrecord.php?requester=gs&collection=ENV&recid=3657385&q=&uid=788032445&setcookie=yes. பார்த்த நாள்: 2006-08-08. 
  51. J. Agustin Iriarte, William L. Franklin, Warren E. Johnson, and Kent H. Redford (1990). "Biogeographic variation of food habits and body size of the America puma". Oecologia 85 (2): 185. doi:10.1007/BF00319400. http://www.springerlink.com/content/nvk62r701822qq17/. பார்த்த நாள்: 2006-08-09. 
  52. Weber, William; Rabinowitz, Alan (August 1996). "A Global Perspective on Large Carnivore Conservation" (PDF). Conservation Biology 10 (4): 1046–1054. doi:10.1046/j.1523-1739.1996.10041046.x. http://www.panthera.org/documents/Weber_Rabinowitz_1996_Global_carnivore_conservation.pdf. பார்த்த நாள்: 2009-12-17. 
  53. 53.0 53.1 "Jaguar Refuge in the Llanos Ecoregion". இயற்கைக்கான உலகளாவிய நிதியம். பார்க்கப்பட்ட நாள் 2006-09-01.
  54. "Glossary". Sonoran Desert Conservation Plan: Kids. Pima County Government. Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2006-09-01.
  55. "வழிகாட்டுதல்கள்", பாதுகாப்பு மற்றும் இனத்தொகை நிலை, பி. 4
  56. Marianne K. Soisalo, Sandra M.C. Cavalcanti. (2006). "Estimating the density of a jaguar population in the Brazilian Pantanal using camera-traps and capture–recapture sampling in combination with GPS radio-telemetry". Biological Conservation 129: 487. doi:10.1016/j.biocon.2005.11.023. http://www.procarnivoros.org.br/pdfs/Soisalo_e_Cavalcanti_2006.pdf#search=%22jaguar%20population%20numbers%22. பார்த்த நாள்: 2006-08-08. 
  57. Hebert, H. Josef (2008-01-17). "US Abandons Bid for Jaguar Recovery Plan". San Francisco Chronicle. அசோசியேட்டட் பிரெசு இம் மூலத்தில் இருந்து 2010-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100501121511/http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=%2Fn%2Fa%2F2008%2F01%2F17%2Fnational%2Fw154058S41.DTL&type=health. 
  58. ஜாகுவார் பணித் திட்ட வழி
  59. Museo Arqueologico Rafael Larco Herrera (1997). Katherine Berrin (ed.). The Spirit of Ancient Peru: Treasures from the Museo Arqueologico Rafael Larco Herrera. New York City: Thames and Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780500018026.
  60. கயானா பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம், ஆர்பிசி ரேடியோ

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சாகுவார்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாகுவார்&oldid=3925086" இலிருந்து மீள்விக்கப்பட்டது