ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
வகைபொது (NSE: ரிலையன்ஸ்)
நிறுவுகை1966-இல் ரிலையன்ஸ் வணிகக் கழகமாக
தலைமையகம்Flag of India.svg மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள்இந்தியா முகேஷ் அம்பானி, தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்‍
தொழில்துறைஎண்ணெய், பெட்ரோகெமிகல்ஸ், துணி
உற்பத்திகள்பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய உற்பத்திகள்
பொலிமேர்ஸ்
பொல்யெஸ்டர்ஸ்
இரசாயனங்கள்
துணி
வருமானம்Green up.png$28 பில்லியன்(2007)
பணியாளர்~ 100,000 (2007)
இணையத்தளம்www.ril.com

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் (Reliance Industries, முபச500325

, தேபசRELIANCE , இ.ப.சRIGD) இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமும், லாபகரணமானதுமாகும்.[1][2] ஃபார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகின் பெரும் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். 1966ஆம் ஆண்டு திருபாய் அம்பானி 15 இலட்சம் பண முதலீடு செய்து துவங்கிய இந்நிறுவனம் $28 பில்லியன் வருமானம் (2006) கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. 1977-ஆம் ஆண்டு ரூ.10-இற்கு விற்ற அதன் முதல் பொதுப்பங்கு விற்பனையில் முதலீடு செய்த பங்குதாரர்கள் பெரும் இலாபம் ஈட்டியுள்ளனர். இன்று எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிகல்ஸ், துணி,சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் வணிகம் செய்கிறது.

வரலாறு[தொகு]

1966ஆம் ஆண்டு ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் என குஜராத்தில் நரோதாவில் துவங்கி விமல் என்னும் பெயரில் தனது துணிவகைகளை (சேலை, திரைகள்) விற்பனை செய்து வந்தது. பின்னோக்கிய கச்சாப்பொருள் ஒருங்கிணைப்பு என்ற யுக்தியைப் பின்பற்றி, துணிகளுக்கு வேண்டிய பாலியஸ்டர் நூலிழைகளை தயாரிக்க குஜராத்தில் உள்ள பாதாளகங்காவில் ஓர் தொழிற்சாலையை நிறுவினர். பின்னர் அந்த நூலிழைகளுக்கு வேண்டிய பாலியஸ்டர் கச்சாப்பொருளைத் தயாரிக்க ஹஜீரா என்றவிடத்தில் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையை நிறுவினர். இறுதியாக பாறை எண்ணெய்|பாறை எண்ணெயிலிருந்து அந்த மூலப்பொருளை பெற ஜாம்நகர் என்றவிடத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவினர்.

வணிக விரிவாக்க முடிவாக 2000ஆம் ஆண்டு முதல் பங்குநிதி நிறுவனங்கள், மின்னாற்றல் தயாரிப்பு மற்றும் விற்பனை, தொலைதொடர்பு சேவைகள் ஆகியவற்றிலும் ஈடுபட்டனர். 2005ஆம் ஆண்டு நிறுவனர் திருபாய் மறைந்த நிலையில் மகன்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானியிடையே எழுந்த குடும்பப் பிரிவினை காரணமாக இந்நிறுவனமும் இரண்டாக பிளந்தது. பங்குநிதி நிறுவனங்கள்,மின்னாற்றல் தயாரிப்பு மற்றும் விற்பனை, தொலைதொடர்பு சேவைகள் தம்பி அனிலிடம் கொடுக்கப்பட்டு அனில் திருபாய் அம்பானி குழுமம் என்ற பெயரில் இயங்குகின்றன. கோதவரி படுகையிலிருந்து எடுக்கப்படும் இயற்கைவாயுவினை விலைகுறைந்த ஒப்பந்த விலையில் பெறுவது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது இவர் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.

பிரிவுபட்டபின் சில்லறை விற்பனைத்துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஜாம்நகரில் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் இயக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "லாபமான தனியார் நிறுவனம்". ஆகத்து 18, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "லாபமான தனியார் நிறுவனம்". ஆகத்து 18, 2015 அன்று பார்க்கப்பட்டது.