வேதாந்தா ரிசோர்செசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேதாந்தா ரிசோர்சஸ் பிஎல்சி
வகைபொது வரையறுக்கப்பட்ட நிறுவனம்
இலண்டன் பங்குச் சந்தை:VED
நிறுவுகை1976, மும்பை, இந்தியா
நிறுவனர்(கள்)அனில் அகர்வால்
தலைமையகம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்அனில் அகர்வால்
(செயல் தலைவர்)
நவீன் அகர்வால்
(துணை செயல் தலைவர்)
மகிந்திர மேத்தா
(CEO)
தொழில்துறைசுரங்கங்கள் மற்றும் இயற்கை வளங்கள்
உற்பத்திகள்செப்பு, அலுமினியம், துத்தநாகம், ஈயம், தங்கம், இரும்புத்தாது, வார்ப்பிரும்பு மற்றும் உலோகவியல் கல்கரி
வருமானம் $7.873 billion (2010)[1]
இயக்க வருமானம் $1.653 பில்லியன்(2010)[1]
இலாபம் $598 மில்லியன்(2010)[1]
மொத்தச் சொத்துகள் $23.887 பில்லியன்(2010)[1]
மொத்த பங்குத்தொகை $11.357 பில்லியன்(2010)[1]
பணியாளர்30,000 (2010)[1]
துணை நிறுவனங்கள்ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ்
பால்கோ
HZL
சீசா கோவா
மால்கோ
வேதாந்தா அலுமினியம்
ஸ்டெர்லைட் எனர்ஜி
ஆத்திரேலிய செப்பு சுரங்கங்கள்
கொட்கோலா செப்புச் சுரங்கங்கள்
இணையத்தளம்Vedantaresources.com

வேதாந்தா ரிசோர்சஸ் பிஎல்சி (Vedanta Resources plc, LSE: VED) அல்லது தமிழாக்கம் வேதாந்தா வளங்கள் பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனம் சுரங்கத்தொழில் மற்றும் உலோகஙகளில் உலகளவில் ஈடுபடும் ஓர் நிறுவனமாகும். ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இரும்பல்லாத உலோகங்களில் இந்தியாவின் மிகப்பெரும் சுரங்கங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்திற்கு ஆத்திரேலியா மற்றும் சாம்பியாவில் சுரங்கங்கள் இருக்கின்றன.[2] முதன்மையான ஆக்கப் பொருட்களாக செப்பு, துத்தநாகம், அலுமினியம், ஈயம் மற்றும் இரும்புத்தாது உள்ளன.[2][3] இந்தியாவில் வணிகநோக்கில் மின் நிலையங்களை ஒரிசாவிலும் (2,400மெகாவாட்) பஞ்சாபிலும் (1,980 மெகாவாட்) அமைத்து வருகிறது. [4]

இலண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இதன் பங்குகள் ஃபுட்சி 100 குறியீட்டில் அங்கமாயுள்ளது.

குழுமம்[தொகு]

செப்பு[தொகு]

ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (இந்தியா) லிமிடெட்.: ஸ்டெர்லைட் தமிழ்நாட்டின் தூத்துக்குடியைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனமாகும். 1988ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பொதுவில் பங்குகள் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உள்ளது. இதன் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளிலும் அமெரிக்க நியூயார்க் பங்குச் சந்தையில் ஏடிஎசுகளாகவும் பங்கேற்கின்றன. வேதாந்தா குழுமம் இந்த நிறுவனத்தில் 53.9% பங்குகளை கைக்கொண்டு நிறுவன மேலாண்மை பெற்றுள்ளது.

கொன்கோலா செப்பு சுரங்கங்கள்: 79.4% பங்குகளை உரிமைக்கொண்டு வேதாந்தா நிறுவன மேலாண்மையை பெற்றுள்ளது. சாம்பியா அரசிற்கு சொந்தமான சாம்பியா செப்பு சுரங்க முதலீடு நிறுவனம் பிற பங்குகளுக்கு உரிமையாளராக உள்ளது.

டாசுமானியா செப்புச் சுரங்கங்கள் (CMT): இந்நிறுவனம் டாசுமானியாவின் குயின்ஸ்டௌனில் தலைமையகம் கொண்டுள்ளது. 100% உரிமையுடன் நிறுவன மேலாண்மை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "2010 Form 10-K, Vedanta Resources plc". Hoover's.
  2. 2.0 2.1 "About Us". Vedanta Resources plc. மூல முகவரியிலிருந்து 16 மே 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 September 2010.
  3. "What We Do". Vedanta Resources plc. மூல முகவரியிலிருந்து 9 பிப்ரவரி 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 September 2010.
  4. "Commercial Power Generation Business". Vedanta Resources plc. மூல முகவரியிலிருந்து 9 பிப்ரவரி 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 September 2010.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாந்தா_ரிசோர்செசு&oldid=3229377" இருந்து மீள்விக்கப்பட்டது