அனில் அகர்வால்
Appearance
அனில் அகர்வால் | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2018 | |
முன்னையவர் | மாயாவதி குமாரி |
தொகுதி | உத்தரப்பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 அக்டோபர் 1962 லக்சார், அரித்துவார், உத்தரப் பிரதேசம் தற்போது- உத்தராகண்டம்) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | தீபாஞ்சலி அகர்வால் (தி. 1987) |
பெற்றோர் |
|
கல்வி | குடிசார் பொறியாளர், முதுகலை வணிக மேலாண்மை |
முன்னாள் கல்லூரி | பெங்களூர்ப் பல்கலைக்கழகம் |
அனில் அகர்வால் (Anil Agarwal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேசத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். 2018ஆம் ஆண்டு 10 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் ஒன்பதாவது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் 35 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்ற (குறைந்தபட்சம் 37 வாக்குகள் வெற்றி பெறத் தேவை) பகுஜன் சாமாஜ்வாதி கட்சியின் பீம்ராவ் அம்பேத்கரைத் தோற்கடித்தார். 22 முதல் விருப்ப வாக்குகளைப் பெற்ற அக்ர்வால், இரண்டாவது விருப்ப வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றார்.[1]