அன்கித் சதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்கித் சதா
பிறப்புதிசம்பர் 21, 1987(1987-12-21)
புது தில்லி
இறப்பு9 மே 2018(2018-05-09) (அகவை 30)
புனே, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்இந்து கல்லூரி
பணிஎழுத்தாளர், நிகழ்த்துக் கலை கலைஞர்
வலைத்தளம்
www.ankitchadha.in

அன்கித் சதா (Ankit Chadha 21 டிசம்பர் 1987 - 9 மே 2018) ஓர் இந்திய எழுத்தாளர், கதை கூறுபவர், நிகழ்த்து கலை கலைஞர் ,ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். பல நூற்றாண்டுகள் பழமையான தஸ்தாங்கோய் வடிவிலான கதைசொல்லலில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். [1] [2] கபீர் மற்றும் ரஹீம் , தாரா சிக்கோ மற்றும் மஜாஸ் ஆகிய எழுத்தாளர்களின் பாங்கிலிருந்து மாறுபட்டது.[3] ஆர்வர்டு பல்கலைக்கழகம், யேல் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் உட்பட சர்வதேச அளவில் தஸ்தாங்கோய் குறித்து இவர் பேசியுள்ளார். [4][5]

நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் பசி குறித்த நவீன கதைகளை உருவாக்குவதற்காக அங்கித் லாப நோக்கற்ற நிறுவனங்களுடன் பணியாற்றினார். கூடுதலாக, அங்கித் 'மியூசிகல் தஸ்தான்' எனும் புதிய வடிவத்தை உருவாக்கி, கதைகளையும் இசையையும் தனித்துவத்துடன் உருவாக்கினார். [6] [7] ஆலிசின் அற்புத உலகம், தி பாண்டம் டோல்பூத் மற்றும் குட்டி இளவரசன் (நூல்) உள்ளிட்ட பழங்கால நூல்களைத் தழுவி, குழந்தைகளுக்கான தஸ்தாங்கோய் நிகழ்ச்சிகளிலும் இவர் பணியாற்றினார். [8] [9] இவரது "அமீர் குஸ்ராவ் - தி மேன் இன் ரிடில்ஸ்" மற்றும் "மை காந்தி ஸ்டோரி" ஆகிய நூல்கள் விருது பெற்றுள்ளன [10] [11]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

அங்கித் புதுதில்லியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். தாகூர் சர்வதேச பள்ளி மற்றும் கேம்பிரிட்ஜ் பள்ளிகளில் பள்ளிக் கல்வியினைப் பயின்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் வரலாறு பட்டம் பெற்றார். இங்கு தான் நாடகம் குறித்த ஆர்வம் ஏற்பட்டது. மேலும் கல்லூரியின் நாடக சங்கமான இப்திதாவில் தலைவராகவும் இருந்தார்.

வெளியீடுகள்[தொகு]

 • தோ ஹசிரீன் ஹுவா யுன். . . தஸ்தான்-இ-அங்கித் சாதா [12] [13] - அன்கித் சாதாவால் உருவாக்கப்பட்ட தஸ்தான்களின் தொகுப்பு
 • அமீர் குஸ்ராவ் : தி மேன் இன் ரிடில்ஸ் [14]
 • மை காந்தி ஸ்டோரி [15]

இறப்பு[தொகு]

இவர் மே 9, 2018 அன்று மகாராஷ்டிராவின் புனே அருகே ஒரு ஏரியில் மூழ்கிவிட்டார். [16]

சான்றுகள்[தொகு]

 1. "The Man Who is Reviving an Ancient Urdu Storytelling:Ankit Chadha – The Better India". www.thebetterindia.com. 13 May 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Sailors of Stories". The New Indian Express. 20 December 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-19 அன்று பார்க்கப்பட்டது.
 3. Chadha, Ankit. "Dastangoi is much bigger than me, says Ankit Chadha". DNA News. dnaindia.com. http://www.dnaindia.com/lifestyle/report-dastangoi-is-much-bigger-than-me-says-ankit-chadha-2575686. பார்த்த நாள்: 12 May 2018. 
 4. "Dastangoi: The art of Urdu storytelling". Harvard University. 14 May 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
 5. "A gem of Dastangoi, a voice lost too early". The Asian Age. http://www.asianage.com/life/more-features/130518/a-gem-of-dastangoi-a-voice-lost-too-early.html. பார்த்த நாள்: 13 May 2018. 
 6. "Making of the Mahatma". The Indian Express (ஆங்கிலம்). 2018-01-29. 20 December 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-19 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Kabir unplugged". mid-day (ஆங்கிலம்). 2014-01-08. 20 December 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-19 அன்று பார்க்கப்பட்டது.
 8. Mazumdar, Arunima (2014-08-21). "An Urdu rendition of 'Alice In Wonderland'". LiveMint (ஆங்கிலம்). 20 December 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-19 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Young yarns". theweek.in. 20 December 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-19 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Why you've got to introduce Amir Khusrau's riddles to your children". www.dailyo.in. 21 December 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-19 அன்று பார்க்கப்பட்டது.
 11. "नई किताब में खुसरो की कविता की पहेलियों को सुलझाने की कोशिश". NDTVIndia. 20 December 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-19 அன்று பார்க்கப்பட்டது.
 12. Indian Express Delhi. "Stories Never Die". epaper.indianexpress.com. 22 December 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-21 அன்று பார்க்கப்பட்டது.
 13. Chadha. To Hazreen Hua Yun.... 
 14. 1253-1325. Amir Khusrau : the man in riddles. 
 15. Chaitya. My Gandhi story. 
 16. Banerjee, Shoumojit (2018-05-11). "Delhi storyteller and dastangoi exponent drowns in lake near Pune" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/other-states/delhi-storyteller-and-dastangoi-exponent-drowns-in-lake-near-pune/article23846889.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்கித்_சதா&oldid=3419197" இருந்து மீள்விக்கப்பட்டது