பெர்க்குசன் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெர்க்குசன் கல்லூரி
டெக்கான் கல்வி சபையில் சின்னம்
குறிக்கோளுரைஅறிவே சக்தி / Knowledge is Power
வகைபொது பல்கலைக்க்கழகம்
உருவாக்கம்1885
சார்புபுனே பல்கலைக்கழகம்
தலைவர்டெக்கான் கல்வி சபை
முதல்வர்முனைவர். இரவீந்திரசிங் ஜி. பர்தேசி[1]
துணை முதல்வர்கள்முனைவர். என். எம். குல்கர்ணி
பேராசிரியர் பி. எம். பவார்
சுவாதி ஜோகலேகர்[1]
அமைவிடம்புனே, மகாராட்டிரா, இந்தியா
இணையதளம்www.fergusson.edu
பெர்க்குசன் கல்லூரியின் முதனமை கட்டிடம்
பெர்க்குசன் கல்லூரி துவக்க ரூ 1,200 நன்கொடை அளித்த சர் ஜேம்ஸ் பெர்க்குசன், பம்பாய் மாகாண ஆளுநர்

பெர்க்குசன் கல்லுரி (Fergusson College (FC)[2]கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகள் கொண்ட தன்னாட்சி பெற்ற பொதுக் கல்லூரியாகும். பிரித்தானிய இந்தியா ஆட்சியின் போது, 1885-இல் டெக்கான் கல்வி சபையால் இக்கல்லூரி பம்பாய் மாகாணத்தின் புனே நகரத்தில் நிறுவப்பட்டது.[3]பெர்க்குசன் கல்லூரியை நிறுவியர்களில் இந்திய தேசிய காங்கிரசு தலைவர்களில் பால கங்காதர திலகர் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே மற்றும் பம்பாய் மாகாண ஆளுநர் சர் ஜேம்ஸ் பெர்க்குசன் ஆகியோர் முக்கியமானவர்கள். தன்னாட்சி பெற்ற இக்கல்லூரி, புனே பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும்.

பெர்க்குசன் கல்லூரி கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் கொண்ட தன்னாட்சி பெற்ற பொதுக் கல்லூரியாகும்.[4][5][6] பேராசிரியர் வாகன் சிவராம் ஆப்தே இக்கல்லூரியில் முதல் முதல்வர் ஆவார்.[7][8]பம்பாய் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சர் ஜேம்ஸ் பெர்குசன் ரூபாய் 1,200 நன்கொடை வழகியதால், இக்கல்லூரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

இக்கல்லூரி இரண்டு பிரிவுகள் கொண்டது:

 1. இளையோர் பிரிவு: இது இரண்டாண்டு படிப்பாகும். உயர்நிலைப் பள்ளியிலிருந்து கல்லூரியின் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் மேனிலைப் பள்ளித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற வேண்டும்.
 1. கல்லூரிப் பிரிவு: இளையோர் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 29 பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரலாம். மேலும் முதுகலை பட்டப்படிப்பில் 16 பாடப்பிரிவுகள் உள்ளது. இக்கல்லூரி ஆய்வுப் படிப்பில் முனைவர் பட்டங்களை வழங்குவதுடன் தொழிற்கல்வி திட்டங்களையும் கொண்டுள்ளது. [9]

கல்லூரி வளாகம்[தொகு]

இந்திய விடுதலையின் போது இக்கல்லூரி 65 ஏக்கர் பரப்பளவு கொண்டது.[10] பின்னர் இக்கல்லூரியின் வளாகத்தை ஒட்டிய குன்றுப் பகுதிகளைக் கொண்டு இக்கல்லூரி விரிவுபடுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Fergusson College, Pune".
 2. "Fergusson is now a university, Xavier's & Mithibai on wait list - Times of India".
 3. "History of Foundation". மூல முகவரியிலிருந்து 12 July 2015 அன்று பரணிடப்பட்டது.
 4. "Pune's Fergusson College gets academic autonomy". Times of India. http://timesofindia.indiatimes.com/city/pune/Punes-Fergusson-College-gets-academic-autonomy/articleshow/52787330.cms. 
 5. "Fergussonians give a thumbs up to autonomy". Times of India. http://timesofindia.indiatimes.com/city/pune/Fergusson-College-is-now-autonomous/articleshow/52809145.cms. 
 6. "Fergusson becomes 3rd autonomous college in Pune". Indian Express. http://indianexpress.com/article/education/fergusson-becomes-3rd-autonomous-college-in-pune-2857770/. 
 7. "Home >> Academics >> Courses >> Arts". மூல முகவரியிலிருந்து 2012-12-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-04-11.
 8. "Gopal Ganesh Agarkar". மூல முகவரியிலிருந்து 2012-04-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-04-11.
 9. "Courses". மூல முகவரியிலிருந்து 11 May 2007 அன்று பரணிடப்பட்டது.
 10. "Shitole lease". மூல முகவரியிலிருந்து 12 July 2015 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fergusson College
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்க்குசன்_கல்லூரி&oldid=3047222" இருந்து மீள்விக்கப்பட்டது