உள்ளடக்கத்துக்குச் செல்

டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெக்கான் முதுகலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்
வகைஅரசின் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்6 அக்டோபர் 1821
துணைவேந்தர்முனைவர். வசந்த் சிண்டே
அமைவிடம், ,
இணையதளம்www.deccancollegepune.ac.in

டெக்கான் முதுகலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் அல்லது டெக்கான் கல்லூரி (Deccan College Post-Graduate and Research Institute) இதன் டெக்கான் கல்லூரி (Deccan College) என்றும் அழைப்பர். இந்தியாவின் மகாராட்டிரா மாநிலாத்தின் புனே நகரத்தின்எரவடா பகுதியில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினரால் 1821ல் நிறுவப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் தொல்லியல், மொழியியல், சமஸ்கிருதம் மற்றும் அகராதியியல் துறைகளில் முதுநிலைக் கல்வி பயிற்றுவிப்பதுடன், ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் 2011 முதல் சிந்து வெளி நாகரீகம் தொடர்புடைய ராகி கர்கி தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்து வருகிறது.

வரலாறு

[தொகு]

துவக்க காலத்தில் (1821 - 1939)

[தொகு]

இந்நிறுவனம் 6 அக்டோபர் 1821ல் இந்து கல்லூரி (Hindoo College) எனும் பெயரில், புனே நகரத்தில், மராத்தியப் பேரரசின் பேஷ்வாக்களின் நிதியுதவியுடன், மும்பை மாகாண ஆளுநரால் நிறுவப்பட்டது.[1] இதனை புனே சமஸ்கிருத கல்லூரி என்றும் அழைத்தனர். இக்கல்வி நிறுவனத்தின் முதல் முதல்வர் மேஜர் தாமஸ் கான்டி ஆவார்.[2]

1837 முதல் ஆங்கில மொழி மற்றும் பிற நவீன கல்விகள் இந்நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்பட்டது.[3]

7 சூன் 1851ல் இந்து கல்லூரி என்ற பெயரை புனே கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 23 மார்ச் 1868ல் புனே கல்லூரி, புனே நகரத்திற்கு அருகில் உள்ள எரவடா எனுமிடத்தில் உள்ள பெரிய வளாகத்தில் இடம் மாற்றப்பட்டதுடன், புனே கல்லூரியின் பெயர் டெக்கான் கல்லூரி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1881 வரை டெக்கான் கல்லூரியில் ஒரு தற்காலிக முதல்வர், 4 பேராசிரியர்கள், 4 சீனா, ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை மொழி அறிஞர்கள், 5 சமஸ்கிருத மொழி சாஸ்திரிகள் மற்றும் ஒரு பாரசீக மொழி அறிஞர் கல்வி பயிற்றுவித்ததுடன், நூல்களும் வெளியிட்டனர்.[4]

1885ல் மாணவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்தது. இக்கல்லூரியின் முதல்வர்களாக, கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் பேரன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் பி. ஜி. வுட்ஹவுஸ் என்பவரின் உடன்பிறந்தவராம இ. ஏ. உட் ஹவுஸ் முறையே 1862 -74 மற்றும் 1934 - 39 ஆண்டுகளில் பணியாற்றினார்கள்.[5]

தற்கால வரலாறு (1939 - தற்போது வரை)

[தொகு]

நிதி நிலை மோசமாக இருந்த காரணத்தினால் 1934ல் இக்கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தின் ஆணையின் படி, 17 ஆகஸ்டு 1939ல் பிரித்தானிய இந்தியா அரசின் நிதி உதவியுடன் இந்தியவியல், சமூக அறிவியல், மொழியியல், வரலாறு, சமூக மானிடவியல், சமூக அறிவியல், தொல்லியல் போன்ற பாடப்பிரிவுகள் மற்றும் ஆய்வுப் பணிகளுடன் மீண்டும் டெக்கான் கல்லூரி திறக்கப்பட்டது. 1948ல் இக்கல்வி நிறுவனம், புனே பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியானது.

இக்கல்லூரி பண்டைய இந்திய வரலாறு, பண்பாடு, நாகரீகம், தொல்லியல், மொழியியல், மத்திய கால வரலாறு, மராத்திய வரலாறு, சமூகவியல், மானிடவியல் மற்றும் சமஸ்கிருத மொழிகளை பயிற்றுவிப்பதுடன், அதில் ஆய்வுப் பணியும் மேற்கொள்வதற்கு உதவுகிறது.

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 5 மார்ச் 1990ல் இக்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கியதால், இந்நிறுவனம் 1 சூன் 1994 முதல் பொதுத்துறை நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக பணி துவங்கியது.

அதுமுதல் இந்நிறுவனம் தொல்லியல், மொழியியல், வரலாறு, சமஸ்கிருதம், அகராதியியல் துறைகளில் முதுகலைப்படிப்புகளும் (எம். ஏ) மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகள் பயிற்றுவிப்பதுடன், முதுதத்துவமாணி மற்றும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகிறது.[6] மேலும் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தற்போது டெக்கான் கல்லூரியில் தொல்லியல் மற்றும் மொழியியல் துறைகள் உள்ளது. மேலும் இக்கல்வி வளாகத்தில் மராத்திய வரலாறு அருங்காட்சியகமும், தொல்லியல் அருங்காட்சியகமும் உள்ளது.

அகழ்வாய்வுப் பணிகள்

[தொகு]

டெக்கான் கல்லூரி 2011 முதல் அரியானா மாநிலத்தில் சிந்துவெளி நாகரீகம் தொடர்பான கிமு 6,000 ஆண்டு பழையான ராகி கர்கி தொல்லியல் களத்தில், சியோல் தேசிய மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்கிறது.[7]

டெக்கான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள்

[தொகு]

டெக்கான் கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் சிலர்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Deccan College website
  2. Frazer, James Nelson (1902). Deccan College: a retrospect, 1851-1901. Poona: The Author. p. 5.
  3. R.N. Dandekar, "Ramakrishna Gopal Bhandarkar and the Academic Renaissance in Maharashtra" in Annals of the Bhandarkar Oriental Research Institute, Vol. 69, No. 1/4 (1988), pp. 283-294.
  4. Ellen E. McDonald, "English Education and Social Reform in Late Nineteenth Century Bombay: A Case Study in the Transmission of a Cultural Ideal" in The Journal of Asian Studies, Vol. 25, No. 3 (May, 1966), pp. 453-470.
  5. http://timesofindia.indiatimes.com/city/pune/A-golden-era-of-history-rusts-at-Deccan-college/articleshow/134146.cms
  6. டெக்கான் கல்லூரியின் பாடத்திட்டங்கள்
  7. Seoul National University College of Medicine, Korea
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-02. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.