கோபால் கோட்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாகாத்மா காந்தியின் கொலைக்குக் காரணமாணவர்கள் அடங்கிய நிழற்படம் நிற்பவர்கள்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா, திகம்பர் இராமச்சந்திர பாட்கே (ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்). அமர்ந்திருப்பவர்கள்: நாராயண் அப்தே, வினாயக் டி சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே

கோபால் வினாயக் கோட்சே (பிறப்பு-1919- இறப்பு நவம்பர் 26,2005), நாதுராம் கோட்சேவின் உடன்பிறந்த இளைய தமையனார் (தம்பி) ஆவார். ஜனவரி 30, 1948, ல் நிகழ்ந்த மாகாத்மா காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் கடைசியாக 2005 ம் ஆண்டு வரை வாழ்ந்து மறைந்தவர் இவர் மட்டுமே. இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புனேவை உறைவிடமாகக் கொண்டு உயிர் வாழ்ந்தவர். இவருடைய தமையன் நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றதற்காகவும் இவருடன் கொலைச்சதியில் பங்குகொண்டமைக்காக நாராயண் ஆப்தேவுடன் சேர்த்து நவம்பர் 15, 1949 ல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர். இந்த கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவரான இவரும் பெப்ரவரி 5, 1948 ல் கைது செய்யப்பட்டு 18 வருடம் ஆயுள் தண்டணைப் பெற்றார். இவர்கள் மூவரும் காந்தி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவாக செயல்படுவதாக எண்ணியதால் இக்கொலைச் செயல் புரிந்தனர். கோபால் கோட்சே 1998 ல் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் காந்தி கொல்லப்பட்டதற்காக நான் என்றும் வருந்தியதில்லை அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதை இன்றும் வெறுக்கின்றேன் என்று பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_கோட்சே&oldid=2212063" இருந்து மீள்விக்கப்பட்டது