உள்ளடக்கத்துக்குச் செல்

மதன்லால் பக்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதன்லால் பக்வா
காந்திஜி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் - நிற்போர்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா, திகம்பர் பட்சே (ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்). அமர்ந்திருப்போர்: நாராயண் ஆப்தே, வினாயக் தாமோதர் சாவர்க்கர், நாத்தூராம் கோட்சே மற்றும் விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே

மதன்லால் கிஷன்லால் பக்வா (Madanlal Kishanlal Pahwa) 1947 ஆம் ஆண்டு அகதியாக இந்தியாவிற்கு பிரிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து (பாகிஸ்தான்) வந்தார். அகதியாக ஆக்கப்பட்ட நிலையால் காங்கிரஸ் தலைவர் மகாத்மா காந்தியின் மேல் கடுங்கோபங்கொண்டார். இவர் காந்தி படுகொலையில் கொலைச்சதியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். மதன்லால் பக்வா மான்ட்கோமரி மாவட்டத்தில் உள்ள பாக்பத்தான் ஊரில் இந்தியாவின் பிரிவினைக்கு முன்னர் பிறந்தவர். உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்தவுடன் இராயல் இந்தியன் கப்பற்படைப்பிரிவில் கம்பியில்லாக் கருவிகளை இயக்கும் வல்லுநராகப் (Wireless Operator) பணிபுரிந்து 1946 ல் ஒய்வுப் பெற்றவர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிந்தபொழுது இந்தியாவிற்கு அகதியாக வந்து மும்பையில் உள்ள செம்பூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். இவர் மும்பைக்கு வந்ததன் முக்கியக் காரணம் வேலைதேடுவதற்காகத்தான். அதுமட்டுமில்லாமல் அவர் கப்பற் படையில் மும்பையிலிருந்துதான் பணிபுரிந்தார். பெரும்பாலான அகதிகள் காந்தியின் மேல் கோபங்கொண்டிருந்தனர். அங்கிருந்துதான் மகாத்மா காந்தியை கொல்லச் சதிச் செயல்களில் ஈடுபட்டார். இந்த குற்றத்திற்காக மதன்லால் பக்வா ஆயுள் தண்டணை பெற்றார். தண்டணைக் காலம் அனுபவித்தபின் மும்பையிலுள்ள தாதரில் வசித்துவந்தார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்லால்_பக்வா&oldid=2711890" இலிருந்து மீள்விக்கப்பட்டது