சங்கர் கிஸ்தையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாகாத்மா காந்தியின் கொலைக்குக் காரணமாணவர்கள் அடங்கிய நிழற்படம் நிற்பவர்கள்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா, திகம்பர் இராமச்சந்திர பாட்கே (ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்). அமர்ந்திருப்பவர்கள்: நாராயண் அப்தே, வினாயக் டி சாவர்க்கர் , நாதுராம் கோட்சே, விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே

சங்கர் கிஸ்தையா (Shankar Kistaiya) மகாத்மா காந்தியின் படுக்கொலைக்கு காரணமானவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர். இதனால் நீதிமன்றத்தால் இவர் ஆயுள் தண்டணை அடைந்தார். இவரின் இளமைக்காலம் பற்றி அதிகம் அறியமுடியாத நிலையில் உள்ளது. திகம்பர் பட்கை வினால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இவரின் தாய் மொழி தெலுங்கு. பட்கேவின் உதவியாளராகவும் அவர் நடத்திவந்த கடையின் காப்பாளராகவும் செயல்பட்டார். சங்கர் கிஸ்தையாவின் காந்தி கொலைச்சதியின் பங்கு தில்லி மற்றும் புனே வில் தங்கியிருந்து காந்தியைக் கொல்லச் சதி புரிந்த குழுவினருக்கு உதவிபுரிந்தார். குற்றத்தொடர்புடையவர்களின் குற்றச் செயல்களில் துணைபுரிந்தமையால் கீழ் நீதிமன்றத்தால் ஆயுள் தணைடணைப் பெற்றார். ஆனால் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_கிஸ்தையா&oldid=2925574" இருந்து மீள்விக்கப்பட்டது