திகம்பர் பேட்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்திக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் குழுப்புகைப்படம்;நிற்பவர்கள்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா,திகம்பர் பேட்ஜ். அமர்ந்திருப்பவர்கள்: நாராயண் ஆப்தே, வினாயக் டி சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணு கார்கரே

திகம்பர் பேட்ஜ் (Digambar Badge) இந்திய இந்து தீவிர அரசியல் கோட்பாடு கொண்டவர். இந்து மகாசபையின் உறுப்பினர். மாகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவர்களில் இவரும் சம்பந்தப்பட்டவர். காந்தி கொலை வழக்கில் கைதான இவர் 1948 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காந்தி கொலை வழக்கின் விசாரணையின் பொழுது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் (அப்ரூவர்-Approver) அளித்து குற்றவாளிகளின் சாட்சியாக மாறியவர். இவரின் முழு மனதுடன் மன்னிப்புக் கோரும் நோக்குடன் கொலைச் சதிச் செயல்களை அம்பலப்படுத்தியதன் விளைவாக காவல்துறையின் முழு வழக்கும் முடிவுக்கு வந்தது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திகம்பர்_பேட்ஜ்&oldid=2711886" இருந்து மீள்விக்கப்பட்டது