நாராயண் ஆப்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகாத்மா காந்தியைக் கொலை செய்ய சதி மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டோர்: நிற்போர்: சங்கர் கிச்தியா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா, திகம்பர் பட்கே. அமர்ந்திருப்போர்: நாராயண் ஆப்தே, வினாயக் தாமோதர் சாவர்க்கர், நாத்தூராம் கோட்சே, விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே

நாராயண் தத்தத்திரேயா ஆப்தே (Narayan Dattatraya Apte, 1911 - நவம்பர் 15, 1949), மகாத்மா காந்தியைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டவர்.

1932 ஆம் ஆண்டில் பம்பாய் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கலைமாணி பட்டம் பெற்றவர். அகமதுநகரில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். அங்கு சம்பா பத்தாரே என்பவரைத் திருமணம் புரிந்தார். பஞ்சாகனி நகரில் மகாத்மா காந்தி தங்கியிருந்த போது காந்தியின் கொள்கைகளுக்கெதிராக 1944, ஜூலை 22 இல் ஆப்தே தலைமையில் கிட்டத்தட்ட இருபத்தைந்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்திக்கு எதிராக இட்தே இதே போன்றதொரு ஆர்ப்பாட்டத்தை தில்லியிலும் நடத்தினார்.

ஆப்தே இந்து மகாசபையில் நாத்தூராம் கோட்சேயுடன் இணைந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது கோட்சேயுடன் ஆப்தேயும் காணப்பட்டார். கோட்சேயுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார். இருவரும் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 15 இல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_ஆப்தே&oldid=1549571" இருந்து மீள்விக்கப்பட்டது