சைரஸ் எஸ். பூனாவாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சைரஸ் எஸ். பூனாவாலா
பிறப்பு1941 (அகவை 79–80)
குடியுரிமைஇந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பிரிகான் மகாராஷ்டிரா வணிகவியல் கல்லூரி
செயற்பாட்டுக்
காலம்
1966–தற்போது வரை
அமைப்பு(கள்)சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா
அறியப்படுவதுநிறுவனர், சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா
சொத்து மதிப்புUS$11.5 பில்லியன் (அக்டோபர் 2020)[1]
வாழ்க்கைத்
துணை
வில்லூ பூனேவாலா
பிள்ளைகள்ஆதர் பூனாவாலா
விருதுகள்பத்மசிறீ (2005)
வலைத்தளம்
cyruspoonawalla.com cyruspoonawallagroup.com

சைரஸ் எஸ். பூனாவாலா (Cyrus S. Poonawalla) (பிறப்பு: 1941) புனே நகரத்தில் செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா மற்றும் மேக்மா நிதி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஆவர்.[2][3]

குடும்பம்[தொகு]

பார்சி குடும்பத்தில் பிறந்த பூனாவாலாவின் தந்தை குதிரை வளர்ப்பாளர் ஆவார். இவர் வில்லூ என்ற பெண்மணியை மணந்தார். வில்லூ 2010-இல் மறைந்தார்.[4][5][6]சைரஸ் எஸ். பூனாவாலாவின் மகன் ஆதர் பூனாவாலா, தற்போது சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியாவின் தலைமை நிர்வாக அலுவலராக உள்ளார்.[7]

விருதுகள்[தொகு]

  • சைரஸ் எஸ். பூனாவாலாவின் தடுப்பூசிகள் மருந்து உற்பத்தி பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு 2005-இல் பத்மசிறீ விருது வழங்கியது.[8]
  • மனிதாபிமான சேவைகளுக்கான மசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி, 3 சூன் 2018--இல் சைரஸ். எஸ். பூனாவாலவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. [9][10][11]
  • ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் இவரது மருந்து உற்பத்திப் பணியைப் பாராட்டி சூன் 2019-இல் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.[12][13]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைரஸ்_எஸ்._பூனாவாலா&oldid=3163896" இருந்து மீள்விக்கப்பட்டது