பிம்பிரி-சிஞ்ச்வடு
பிம்ப்ரி-சிஞ்ச்வட்
Pimpri-Chinchwad पिंपरी-चिंचवड | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): அயுத்யோகிக் நகர்/தொழில்நுட்ப நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புனே |
தாலுகா | ஹவேலி தாலுகா |
நிறுவப்பட்ட நாள் | 11 அக்டோபர் 1982 |
பரப்பளவு | |
• மொத்தம் | 171.51 km2 (66.22 sq mi) |
ஏற்றம் | 570 m (1,870 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,29,320 |
• அடர்த்தி | 10,000/km2 (26,000/sq mi) |
மொழிகள் | |
• ஆட்சி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 4110XX |
தொலைபேசிக் குறியீடு | 91-20 |
வாகனப் பதிவு | MH-14 |
மக்களவைத் தொகுதி | மாவள், ஷிரூர் |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | பிம்பிரி, சிஞ்ச்வடு, போசரி |
ஆட்சிக் குழு | பிம்ப்ரி-சிஞ்ச்வடு மாநகராட்சி |
மும்பையில் இருந்து | 165 கிலோமீட்டர்கள் (103 mi) தொலைவில் (தரைவழியில்) |
இணையதளம் | www |
பிம்ப்ரி-சிஞ்ச்வடு எனும் நகரம் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவில் உள்ள புனே மாவட்டம், ஹவேலி தாலுகாவில் உள்ள பெருநகர மாநகராட்சியாகும். இது புனேயின் இரட்டை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்திற்குள் பிம்பிரி, சிஞ்ச்வடு, நிக்டி, போசரி, மோஷி, சாங்கவி ஆகிய ஊர்களும் அடங்குகின்றன. இது புனேயின் வடமேற்கில் அமைந்துள்ளது. இங்கிருந்து புனேவுக்கு பழைய புனே-மும்பை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது[1] 1,729,320 மக்கள் வாழ்ந்தனர். இவர்களில் எழுத்தறிவு பெற்றோர் 87.19 சதவீதத்தினர் ஆவர். இங்கு வாழும் மக்கள் மராத்தியில் பேசுகின்றனர்.
பண்பாடு
[தொகு]விநாயக சதுர்த்தியும், தசராவும் கொண்டாடுகின்றனர்.
போக்குவரத்து
[தொகு]பிம்ப்ரி-சிஞ்ச்வடு நகரத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு ரயில், பேருந்து, விமானத்தின் மூலம் செல்லலாம். இதற்கு அருகிலேயே புனே சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. புனே - லோணாவ்ளா புறநகர் ரயில்கள் இந்த நகரத்தைக் கடந்து செல்கின்றன. பழைய புனே -மும்பை நெடுஞ்சாலை வழியாக மற்ற ஊர்களுக்குச் செல்லலாம். பிம்ப்ரி-சிஞ்ச்வடு பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு புனே மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு அருகில் சிஞ்ச்வடு ரயில் நிலையம், அகுர்டி ரயில் நிலையம், பிம்பிரி ரயில் நிலையம்.
புறநகர்ப் பகுதிகள்
[தொகு]இந்த நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை கீழே காணவும்.
- ஆகுர்டி
- ஹிஞ்சவடி
- சிஞ்ச்வடு
- பிம்பிரி
- நிக்டி
- துகாராம் நகர்
- ரஹாடணி
- ராவேத்
- ரூபி நகர்
- வாகடு
- நேரு நகர்
- போசரி
- சிவாஜி நகர்
- கட்கி
- சம்பாஜி நகர்
- யமுனா நகர்
- தேர்காவ்
- கசர்வடி
- பிம்பளே குரவ்
- பிம்பளே நிலக்
- பிம்பளே சவுதாகர்
- தாபோடி
சான்றுகள்
[தொகு]- ↑ Dahiwal, Archana (April 4, 2011). "Pimpri-Chinchwad population is 17.29 lakh". DNA India. http://www.dnaindia.com/mumbai/report_pimpri-chinchwad-population-is-17-29-lakh_1528147. பார்த்த நாள்: 29 ஜனவரி 2012.
இணைப்புகள்
[தொகு]- பிம்ப்ரி-சிஞ்ச்வடு மாநகராட்சி பரணிடப்பட்டது 2012-04-01 at the வந்தவழி இயந்திரம்