புனே கண்டோன்மென்ட்
புனே பாசறை நகரம் पुणे छावणी புனே கண்டோன்மென்ட் | |
---|---|
இராணுவப் பாசறை | |
![]() புனே கண்டோன்மென்டின் மகாத்மா காந்தி சாலை | |
இந்தியாவின் மகாராட்டிரா]]வின புனே நகரத்திற்கு அருகில் அமைந்த புனே கண்டோன்மென்ட் நகரம் | |
ஆள்கூறுகள்: 18°25′25″N 73°54′32″E / 18.42361°N 73.90889°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரா |
மண்டலம் | புணே மண்டலம் |
மாவட்டம் | புனே |
நிறுவப்பட்டது. | 1817 |
தாலுகா | ஹவேலி தாலுகா |
அரசு | |
• நிர்வாகம் | புனே கண்டோன்மென்ட் மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.9 km2 (4.6 sq mi) |
ஏற்றம் | 577 m (1,893 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 79,454 |
• அடர்த்தி | 6,700/km2 (17,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஆங்கிலம் & மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 411 0xx |
தொலைபேசி குறியிடு | (91)20 |
வாகனப் பதிவு | MH 12 |
மக்களவைத் தொகுதி | புணே மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | புனே கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி |
உள்ளாட்சி அமைப்பு | புனே கண்டோன்மென்ட் போர்டு |
தட்ப வெப்பம் | கோப்பென் காலநிலை வகைப்பாடு |
சராசரி ஆண்டு மழைப்பொழிவு | 24 °C (75 °F) |
சராசரி கோடைகால வெப்பம் | 30 °C (86 °F) |
சராசரி குளிர்கால வெப்பம் | 12 °C (54 °F) |
இணையதளம் | www |
புனே கண்டோன்மென்ட் (Pune Cantonment or Pune Camp) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான புனே நகரத்திற்கு அருகில் அமைந்த இராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பங்கள் கொண்ட பாசறை நகரம் ஆகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது இப்பாசறை நகரம், பிரித்தானிய இந்தியச் சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் தங்கும் பொருட்டு 1817-இல் நிறுவப்பட்டது. இந்திய இராணுவத்தின் தென் மன்டல தலைமையகம் புனே கண்டோன்மென்ட்டில் அமைந்துள்ளது.
நிர்வாகம்[தொகு]
இது புனே மாநகராட்சியின் ஒரு பகுதியாக இல்லை எனினும், புனே கண்டோன்மென்ட் பகுதியின் நிர்வாகத்தை, உள்ளாட்சி முறைப்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, கண்டோன்மென்டில் வாழும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. லஷ்கர் காவல் நிலையம் இப்பகுதியின் சட்டம் & ஒழுங்கை பராமரிக்கிறது.[2]
அரசியல்[தொகு]
புனே கண்டோன்மென்ட் பகுதி புணே மக்களவைத் தொகுதிக்கும், புனே கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.
போக்குவரத்து[தொகு]
புனே நகர அரசுப் பேருந்துகள் புனே கண்டோன்மென்ட் பகுதியை, புனே மாநகராட்சி மற்றும் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சிப் பகுதிகளுடன் இணைக்கிறது.[3]
புனே கண்டோன்மென்ட் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 9, புனே நகரத்தை சோலாப்பூர், ஐதராபாத் வழியாக ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கறை நகரமான மச்சிலிப்பட்டணத்துடன் இணைக்கிறது.
சேவைகள்[தொகு]
புனே மாநகராட்சி இந்த கண்டோன்மென்ட் பகுதிக்கு குடிநீர் சேவை வழங்குகிறது. மகாராட்டிரா அரசு மின் வாரியம் இப்பகுதிக்கு மின் சேவை வழங்குகிறது.
கல்வி[தொகு]
புனே கண்டோன்மென்ட் மன்றக் குழு, இப்பகுதியில் தொழிற் பயிற்சி நிலையம் (Industrial training institute), 3 உயர்நிலைப் பள்ளிகள், 6 துவக்கப் பள்ளிகள் நடத்துகிறது.[4] மேலும் இந்த கண்டோன்மென்ட் பகுதியில் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் செய்ல்படுகிறது. இராணுவ மருத்துவக் கல்லூரி இக்கண்டோன்மென்ட் பகுதியில் இயங்குகிறது.
மருத்துவம்[தொகு]
புனே கண்டோன்மென்ட் நிர்வாகம், இப்பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய மருத்துவமனை நடத்துகிறது.[5] மேலும் ஒரு இராணுவ மருத்துவ மனையும் இயங்குகிறது.
இதனையும் காண்க[தொகு]
- புனே பெருநகரப் பகுதிகள்
- தேகு ரோடு கண்டோன்மென்ட்
- கட்கி கண்டோன்மென்ட்
- புனே பெருநகரப் பகுதிகள்
- பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி
- புனே மாநகராட்சி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Cities in India". 16 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Pune Police Stations". 28 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "PMPML". 5 December 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 December 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "PCB Admin Report". 26 டிசம்பர் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 November 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Pune Cantonment Board". 3 ஜூலை 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 November 2009 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]