உள்ளடக்கத்துக்குச் செல்

திம்பிள் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திம்பிள் யாதவ்
பாராளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 திசம்பர் 2022
முன்னையவர்முலாயம் சிங் யாதவ்
தொகுதிமைன்புரி
பதவியில்
8 ஆகத்து 2012 – 23 மே 2019
முன்னையவர்அகிலேஷ் யாதவ்
பின்னவர்சுப்ரத் பதக்
தொகுதிகன்னௌஜ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1978 (1978-01-15) (அகவை 46)
புனே, மகராஷ்டிரா, இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்அகிலேஷ் யாதவ்
உறவுகள்முலயாம் சிங் யாதவ் (மாமனார்)
பிள்ளைகள்3
வாழிடம்(s)சைபை கிராமம், இட்டாவா, உத்தரப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிலக்னோ பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்http://www.samajwadiparty.in

திம்பிள் யாதவ் (பிறப்பு 15 ஜனவரி 1978) இந்திய அரசியல்வாதி ஆவார். சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினரான இவர், இரண்டு முறை, கன்னோசி மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முன்பும் இப்போது மெயின்புரி மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் , உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆவார்.[1] இவர் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர்-புரவலருமான மறைந்த முலாயம் சிங் யாதவின் மருமகள் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

திம்பிள் யாதவ் 1978 இல் மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்தார்.[2] ஓய்வுபெற்ற இந்திய ராணுவ கர்னல் ஆர்.சி.எஸ் ராவத் மற்றும் சம்பா ராவத் ஆகியோரின் மூன்று மகள்களில் இரண்டாவது மகளாவார்.[3] இவரது குடும்பத்தின் பூர்வீகம் உத்தரகண்ட் ஆகும்.[4] இவர் புனே, பதிந்தா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு மற்றும் லக்னோவின் நேரு சாலையில் உள்ள இராணுவ பொதுப் பள்ளி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[5] லக்னோ பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் பட்டம் பெற்றார்.[6]

திம்பிள் மாணவராக இருந்தபோது அகிலேஷ் யாதவை சந்தித்தார். முதலில் அகிலேஷின் குடும்பத்தினர் இவர்களது திருமணத்தை எதிர்த்தனர். ஆனால் அகிலேஷின் பாட்டி முர்திதேவி ஒப்புதல் அளித்த பின்னரே அனைவரும் ஒப்புக்கொண்டனர். இந்த இணை தமது 21ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார் [2][7] . இவரது திருமணத்தில் திரைப்பட நட்சத்திரங்கள், அமிதாப் பச்சன் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.[8] திம்பிள் அகிலேசு தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஓர் மகன் உள்ளனர்.[9]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2009ல் நடைபெற்ற பிரோசாபாத்தின் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடிகர் மற்றும் அரசியல்வாதியான ராஜ் பப்பருக்கு எதிராக போட்டியிட்ட யாதவ் தோல்வியுற்றார்.[10] இந்த இடைத்தேர்தலானது திம்பிளின் கணவர், அகிலேசு யாதவ் மே 2009 பொதுத்தேர்தலில் கன்னோடி தொகுதியுடன் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[11][12][13][14] உத்திரபிரதேச சட்டமன்றக் குழுவில் நுழைவதற்கு இவரது கணவர் பதவிவிலகியதால் நடைபெற்ற கன்னோசி இடைத்தேர்தலை அடுத்து, 2012 ல் கன்னோசி தொகுதியில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திம்பிள் நாட்டின் 44வது நபராகவும், சுதந்திரம் பெற்ற பின்னர் உத்தரப்பிரதேசத்தில் நான்காவது நபராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] இத்தேர்தலில் போட்டியிட்ட தசரத சிங் சங்க்வார் (சம்யுக்ட் சமாஜ்வாடி தளம் ) மற்றும் சஞ்சு கதியார் (சுயேச்சை) ஆகிய இரு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றதால் பெற்றபோது இந்த நிலைமை ஏற்பட்டது. இத்தேர்தலில் பாரதீய ஜனதாவும், இந்தியத் தேசிய காங்கிரசும் எந்த வேட்பாளர்களையும் பரிந்துரைக்கவில்லை. ஆனால் பாஜக அறிவித்த வேட்பாளர் தனது ரயிலைத் தவறவிட்டதால் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய இயலவில்லை.

இதன் மூலம் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாகவும், 1952 இல் அலகாபாத் மேற்கிலிருந்து புர்ஷோட்டம் தாஸ் டாண்டன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இரண்டாவது நபராகவும் திகழ்ந்தார் . கணவர் முதலமைச்சராகவும் மனைவி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒரே பெண் எம்.பி. என்ற பெருமையும், அதே சபையில் இவரது மாமனார் உறுப்பினராகவும் இருந்தார்.[6]

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டு வேட்பாளராக டிம்பிள் போட்டியிட்டார். ஆனால் பாஜகவின் சுப்ரத் பதக்கிடம் 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[15]

வகித்தப் பதவிகள்[தொகு]

வரிசை எண் முதல் வரை பதவி
1. 2012 2014 15வது மக்களவை உறுப்பினர் (முதல் முறை கன்னோசி)
2. 2014 2019 16வது மக்களவை உறுப்பினர் (இரண்டாவது முறை கன்னோசி)
3. 2022 பதவியில் 17வது மக்களவை உறுப்பினர் மைன்புரி

மேற்கோள்கள்[தொகு]

 1. "Politically Famous Better Halves: Sonia Gandhi, Poonam Sinha & Dimple Yadav". தி எகனாமிக் டைம்ஸ். 14 May 2019. பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
 2. 2.0 2.1 "The love-story of Akhilesh and Dimple Yadav: A drama made for the movies". Latest Indian news, Top Breaking headlines, Today Headlines, Top Stories at Free Press Journal. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
 3. "Facts you didn't know about UP CM Akhilesh Yadav's wife Dimple Yadav". dailybhaskar. 12 August 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
 4. "Mulayam crosses caste barriers". www.sunday-guardian.com. Archived from the original on 11 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 5. "Facts you didn't know about UP CM Akhilesh Yadav's wife Dimple Yadav". Daily Bhaskar. 12 August 2013. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
 6. 6.0 6.1 6.2 "Lok Sabha 2014 Elections: Dimple Yadav, a horse-rider gallops into politics". DNA News. 29 March 2014. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
 7. "4 साल तक चली थी अखिलेश-डिंपल की डेटिंग, ऐसी फिल्मी है CM की लव स्टोरी". Dainik Bhaskar. 1 July 2016. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
 8. Bhat, Vasudha (20 April 2014). "Jab they met: Akhilesh and Dimple Yadav". India TV News. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
 9. Bhat, Vasudha (20 April 2014). "Jab they met: Akhilesh and Dimple Yadav". India TV News. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
 10. Roy, Rustam (6 November 2009). "I am not fighting for family but for party's honour: Mulayam's bahu Dimple Yadav". Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 March 2010.
 11. "'Dhritrashtra Syndrome' dominates phase III in UP". Ashish Tripathi. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 April 2014. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
 12. Pradhan, Sharat (12 November 2009). "Analysis: Why Dimple Yadav came a cropper in UP bypoll". Rediff. பார்க்கப்பட்ட நாள் 7 March 2010.
 13. SARIN, RITU; AMITAV RANJAN (14 December 2008). "Law Minister at the wheel in CBI's U-turn on Mulayam case". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 7 March 2010.
 14. "Probe UP CM's money: SC to CBI". CNN-IBN. 1 March 2007. Archived from the original on 19 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 15. "Elections 2019: Dimple Yadav loses Samajwadi Party bastion Kannauj to BJP's Subrat Pathak". Scroll.in. https://scroll.in/latest/924621/elections-2019-dimple-yadav-loses-samajwadi-party-bastion-kannauj-to-bjps-subrat-pathak. பார்த்த நாள்: 27 May 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
{{{before}}}
{{{title}}} பின்னர்
{{{after}}}
"https://ta.wikipedia.org/w/index.php?title=திம்பிள்_யாதவ்&oldid=3765877" இலிருந்து மீள்விக்கப்பட்டது