ஆகா கான் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆகா கான் அரண்மனை
Pune Palace.jpg
அமைவிடம்எரவடா, புனே, இந்தியா
ஆள்கூற்றுகள்18°33′08″N 73°54′05″E / 18.5523°N 73.9015°E / 18.5523; 73.9015ஆள்கூறுகள்: 18°33′08″N 73°54′05″E / 18.5523°N 73.9015°E / 18.5523; 73.9015
Area19 ஏக்கர்கள் (77,000 m2)
கட்டப்பட்டது1892
நிர்வகிக்கும் அமைப்புகாந்தி தேசிய நினைவுச் சங்கம்
வகைவரலாற்று நினைவுச் சின்னம்
அளிக்கப்பட்டது2003
Designated byஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
ஆகா கான் அரண்மனை is located in மகாராட்டிரம்
ஆகா கான் அரண்மனை
மகாராஷ்டிராவில் ஆகா கான் அரண்மனையின் அமைவிடம்


ஆகா கான் அரண்மனை (Aga Khan Palace) இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரத்தில் எரவடா பகுதியில் அமைந்துள்ளது. 1892இல் இவ்வரண்மனையை கட்டியவர் சுல்தான் மூன்றாம் முகமது ஷா ஆகா கான் ஆவார். இவ்வரண்மனையின் மொத்தப் பரப்பளவு 19 ஏக்கர் ஆகும்.

இந்திய விடுதலைப் போராட்டம்[தொகு]

இந்திய விடுதலை இயக்கக் காலத்தில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய் காந்தி, மகாதேவ தேசாய் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியவர்களை பல முறை பிரித்தானிய இந்திய அரசு ஆகா கான் அரண்மனையில் வீட்டுக் காவலில் வைத்திருந்தது.

நினைவிடம்[தொகு]

ஆகா கான் அரண்மனையில் கஸ்தூரிபாய் காந்தி மற்றும் மகாத்மா காந்தியின் நேர்முகச் செயலாளர் மகாதேவ தேசாயின் இறப்பிற்குப் பின்னர் அவர்களது நினைவிடங்கள் ஆகா கான் அரண்மனையில் நிறுவப்பட்டுள்ளன.[1]

அருங்காட்சியகம்[தொகு]

இந்திய விடுதலைக்குப் பின்னர் ஆகா கான் அரண்மனை 2003இல் இந்தியாவின் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் அருங்காட்சியகமாக செயல்படுகிறது. [2]

அமைவிடம்[தொகு]

ஆகா கான் அரண்மனை, இடது பின்புற காட்சி

புனே – எரவாடா சாலையில், புனே நகரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஆகா கான் அரண்மனை அமைந்துள்ளது.

ஆகா கான் அரண்மனைக் காட்சிகள்[தொகு]

காட்சி Panoramic view Aga Khan Palace
ஆகா கான் அரணமனையின் அகலப் பரப்புக் காட்சி

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aga Khan Palace
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகா_கான்_அரண்மனை&oldid=3261206" இருந்து மீள்விக்கப்பட்டது