பிம்பளே சௌதாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிம்பளே சௌதாகர்
पिंपळे सौदागर
மாநகராட்சிப் பகுதி
ஆள்கூறுகள்: 18°35′44″N 73°47′53″E / 18.5956°N 73.7981°E / 18.5956; 73.7981ஆள்கூறுகள்: 18°35′44″N 73°47′53″E / 18.5956°N 73.7981°E / 18.5956; 73.7981
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி
மொழிகள்
 • அலுவலம்மராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்411027
வாகனப் பதிவுMH14

பிம்பளே சௌதாகர் (Pimple Saudagar ) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியின் பகுதியாகும். இது புனே மாநகராட்சிக்கு அருகில் உள்ளது. இப்பகுதி சிஞ்ச்வடுவிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது அவுந்து மற்றும் பாணேர் பகுதிகளுக்கு மையத்தில் உள்ளது. இப்பகுதி குடியிருப்புகள், கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் அதிகம் கொண்ட மாநகரப் பகுதியாகும். இதன் வெளிப்புறத்தில் ஹிஞ்சவடியில் இராஜிவ் காந்தி கணினி தொழில் நுட்ப பூங்கா உள்ளது.

போக்குவரத்து[தொகு]

புனே - நாசிக் பட்டா சாலையில் அமைந்த பிம்பளே சௌதாகர் பகுதிக்கு அருகே அமைந்த தொடருந்து நிலையம், காசர்வாடி தொடருந்து நிலையம் ஆகும். புனே மாநகரப் பேருந்துகள் பிம்பிளே சௌதாகர் பகுதியை புனே, பிம்பிரி, சிஞ்ச்வடு, பிம்பளே குரவ், ஹிஞ்சவடி, புனே சந்திப்பு தொடருந்து நிலையம், அவுந்து, சங்கவி போன்ற பகுதிகளுடன் இணைக்கிறது.

பள்ளிகள்[தொகு]

  • விப்ஜியார் (VIBGYOR Group of Schools) பள்ளி[1]
  • குருகுல் பள்ளி
  • எஸ் என் பி பி பள்ளி (SNBP School)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிம்பளே_சௌதாகர்&oldid=3028117" இருந்து மீள்விக்கப்பட்டது