விநாயக சதுர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விநாயக சதுர்த்தி
Gsb.jpg
அதிகாரப்பூர்வ பெயர்சதுர்த்தி/விநாயக சதுர்த்தி
கடைபிடிப்போர்இந்துக்கள்
வகைவிநாயகரின் பிறந்த நாள்
கொண்டாட்டங்கள்பூசை, மண் பிள்ளையார் வழிபாடு, அன்னதானம்
நாள்Bhadra Shukla Chaturthi
2022 இல் நாள்31 ஆகஸ்ட் புதன்
நிகழ்வுஆண்டுக்கு ஒருமுறை
வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை 2015

விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.

வரலாறு[தொகு]

இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது.[1] இது இந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள். சுதந்திர போராட்டக் காலத்தில், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்களிடையே தேசியம் வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார்.[2][3][4] மகாராட்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும், இதன் போது வழங்குவர்.

தமிழகத்தில்[தொகு]

தமிழகத்தின், விழுப்புரம் மாவட்டத்தில், பெரியபாபுசமுத்திரம் என்னும் ஊரில், தற்காலிகமாக வைக்கப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை - 2019

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Paul B. Courtright (1985). Ganesa. Oxford University Press. பக். 230–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-503572-8. https://books.google.com/books?id=YXnXAAAAMAAJ. 
  2. Trimbak Vishnu Parvate (1958). Bal Gangadhar Tilak: A Narrative and Interpretative Review of His Life, Career and Contemporary Events. Navajivan. பக். 96–102. https://books.google.com/books?id=lqE9AAAAMAAJ. 
  3. Sohoni, Ashutosh (2011). "Ganesh Temple at Tasgaon: Apotheosis of Maratha Temple Architecture". South Asian Studies (Informa UK Limited) 27 (1): 51–73. doi:10.1080/02666030.2011.556011. 
  4. Christian Roy (2005). Traditional Festivals: A Multicultural Encyclopedia. ABC-CLIO. பக். 178–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57607-089-5. https://books.google.com/books?id=IKqOUfqt4cIC&pg=PA178. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விநாயக_சதுர்த்தி&oldid=3504351" இருந்து மீள்விக்கப்பட்டது