உள்ளடக்கத்துக்குச் செல்

அர்தசிர் புர்சோஜி தாராபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெப்டிணன்ட் கர்னல்

அர்தசிர் புர்சோஜி தாராபூர்

புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் அர்தசிர் புர்சோஜி தாராபூரின் மார்பளவுச் சிற்பம்
பிறப்பு(1923-08-18)18 ஆகத்து 1923
மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 செப்டம்பர் 1965(1965-09-16) (அகவை 42)
சவிந்தா, பாகிஸ்தான்
சார்புஐதராபாத் இராச்சியம்
 இந்தியா
சேவை/கிளைஐதராபாத் இராச்சிய இராணுவம்
 இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1940–1951 (ஐதராபாத் இராச்சிய இராணுவம்])
1951–1965 (இந்திய இராணுவம்)
தரம் லெப்டிணன்ட் கர்னல்
தொடரிலக்கம்IC-5565[1][2]
படைப்பிரிவுஐதராபாத் இராச்சிய குதிரைப்படை
புனே குதிரைப்படை
போர்கள்/யுத்தங்கள்இந்திய-பாகிஸ்தான் போர், 1965 (சவிந்தா சண்டை)
விருதுகள் பரம் வீர் சக்கரம்

லெப்டிணன்ட் கர்னல் அர்தசிர் புர்சோஜி தாராபூர் (Lieutenant Colonel Ardeshir Burzorji Tarapore), பரம் வீர் சக்கரம் (19 ஆகஸ்டு 1923 – 16 செப்டம்பர் 1965), இந்திய இராணுவ அதிகாரியும், 1965 இந்திய-பாக்கித்தான் போரில் சவிந்தா சண்டையில், பாக்கித்தானியப் படைகளுக்கு எதிராகப் போராடி, வீர தீர செயல்கள் செய்து வீரமரமரணமடைந்தார். இந்தியக் குடியரசுத் தலைவரால் 1967-இல் இவரது இறப்பிற்குப் பிறகு இராணுவத்தின் உயரிய பரம் வீர் சக்கரம் விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டார்.[3]

புனேவில் படித்த இவர், ஐதராபாத் இராச்சியத்தில் 1942-இல் குதிரைப்படை அதிகாரியாக சேர்ந்தார். மேலும் இவர் இரண்டாம் உலகப் போரின் போது மத்திய கிழக்கில் போர் புரிந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு 1951-இல் ஐதராபாத் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர், இவர் இந்திய இராணுவத்தின் தரைப்படையில், புனே டாங்குப்படை ரெஜிமெண்டின், 17-வது பட்டாலியன் அதிகாரியானார்.[4]

1965 இந்திய-பாக்கித்தான் போரின் போது இவரது தலைமையிலான படைப்பிரிவினர் சியால்கோட் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 60 பாக்கித்தானிய டாங்குகளை வீழ்த்தியது. போரின் போது இவர் வீரமரணமடைந்தார்.

பரம் வீர் சக்கர விருது பெற்றவர்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Chakravorty 1995, ப. 77.
  2. "Lt Col Ardeshir Burzorji Tarapore". Gallantry Awards, Ministry of Defence. Government of India. Archived from the original on 19 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 17 மே 2018.
  3. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
  4. Lt Col Ardeshir Burzorji Tarapore PVC

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]